இருவர்

நேற்று ஒரு நண்பர் கேட்டார், அவர்கள் இருவரையும் நீங்கள் அடிக்கடி பார்ப்பதில்லை; பேசுவதும் இல்லை; இருந்தாலும் எப்படி அவர்கள் இருவரும் உங்கள் மனதில் இத்தனை முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்?

இருவரில் ஒருத்தன் சமீபத்தில் கோவா போனான். ஒரு ஆடம்பரமான ஓட்டலில் தங்கினான். அங்கே தங்கியிருந்தவர்களின் உடல் மணம் என் உடல் மணத்தைப் போலிருப்பதை உணர்ந்தான். உடனே எனக்கு போன் பண்ணினான். நாங்கள் இருவரும் gay அல்ல. வெறும் நண்பர்கள்தான். அப்படியும் என் உடல் மணம் தெரிந்திருக்கிறது. இப்படி ஒன்றிரண்டு பேர் தான் இருக்க முடியும். இன்னொருத்தன். காமரூப கதைகள் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் அது மொழிபெயர்க்கப்பட்டால் நபக்கோவின் லொலிதாவை விடவும் அதிகம் பேசப்படும். அப்படி ஒரு நாவல் ஆங்கிலத்திலோ மற்ற ஐரோப்பிய மொழிகளிலோ எழுதப்பட்டதில்லை – எனக்குத் தெரிந்து. அந்த நாவலைப் பற்றி நான் என்ன நினைக்கிறேனோ அதை அவன் நேற்று முகநூலில் எழுதியிருந்தான்.

மணம் சொன்னவன் பெயர் சாம்.
காமரூப கதைகளை விளக்கியவன் பெயர் ஜெகா. நான் அழைக்கும் செல்லப் பெயர் தறுதலை.

இருவரிடமும் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம்: நான் எவ்வளவு திட்டினாலும் விமர்சித்தாலும் கண்டு கொள்ள மாட்டான்கள். ஈகோ காயப்பட்டது என்றால் என்னோடு பழகுவது கடினம்.