ராஜாவும் பாடிகார்டும்…

ஒரு ஊரில் ஒரு ராஜா. அவர் காட்டுக்கு வேட்டைக்குப் போனார். பாடிகார்டையும் அழைத்துக் கொண்டு போனார். பாடிகார்ட் பராக்கிரமசாலி. அன்றைய தினம் வேட்டையில் ஒரு விலங்கும் சிக்கவில்லை. கடுப்பான ராஜா பாடிகார்டிடம் சொன்னார், தம்பி நான் தூங்கப் போகிறேன். என் தூக்கத்தை யார் கெடுத்தாலும் கொன்று போடு என்று. மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாவின் முகத்தைச் சுற்றி ஒரு ஈ. ராஜாவும் தூக்கத்திலேயே கையால் அதை விரட்டி விரட்டிப் பார்த்தார். ஈ போன பாடு இல்லை. பார்த்தார் பாடிகார்டு. போட்டார் ஒரு போடு. ஈ பறந்து விட்டது.

சூப்பர் ஸ்டாரையும் அவர் வளர்த்து விட்ட இயக்குனரையும் பற்றி யோசித்த போது இந்தக் கதை ஞாபகம் வந்தது. பெயரைக் கேட்காதீர்கள். என் மண்டை எனக்கு முக்கியம்.