கலைஞர்களும் சமூகமும்… (ஜெயமோகன் விவகாரம்)

ஜெயமோகன் பிரச்சினை பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள்.  அது பற்றி நான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பேசினேன்.  பேசியதில் பத்தில் ஒரு பங்கு கூட வரவில்லை.  மேலும், கோவை கண்ணதாசன் விழாவிலும் அது பற்றிக் குறிப்பிட்டேன்.  ஆனாலும் விரிவாக எழுத நேரமில்லை.  பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன்.  இரண்டு தினங்களுக்கு முன்பு கிங் இன்ஸ்டிட்யூட்டில் போட்டுக் கொண்ட தடுப்பு ஊசி சம்பவமே ஒரு கதைக்கான சரக்கைக் கொண்டது. 

இத்தனை வேலைக்கிடையிலும் இந்தப் பிரச்சினை பற்றி எழுதி விடவே தோன்றுகிறது.  ஜெயமோகனோடு எனக்கு எத்தனை கருத்து மோதல்கள் இருந்த போதிலும் நான் அவர் பற்றி எழுதுவது எப்போதுமே ஒன்றுதான்.  அமெரிக்காவிலிருந்து ஒருத்தர் ஜெயமோகனைத் திட்டி எனக்கு (ஆங்கிலத்தில்) எழுதியபோது அந்த ஆளைக் கிழி கிழி என்று கிழித்துத் தோரணம் கட்டியது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?  பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கதை.  இப்போது அந்த ஆள் ஜெ.வின் மிக நெருங்கிய தோஸ்த்.  போகட்டும்.

எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் மதிப்பதில்லை; மதிக்காவிட்டாலும் பரவாயில்லை; அவமானப்படுத்துகிறது என்று நீண்ட காலமாக எழுதி வருகிறேன்.  வில்லியம் பர்ரோஸின் உதாரணத்தையும் குறிப்பிடுவேன்.  பர்ரோஸுக்குத் துப்பாக்கி சுடுவதில் ஈடுபாடு அதிகம்.  அவர் மெக்ஸிகோவில் இருக்கும் போது தன் மனைவியின் தலையில் ஆப்பிளை வைத்துச் சுடும் போது அது நெற்றியில் பட்டு அந்தப் பெண் இறந்து போனார்.  மெக்ஸிகோ போலீஸ் கொலைக் கேஸில் பர்ரோஸைக் கைது செய்த போது அமெரிக்க அரசு தலையிட்டு, அவர் எங்களுடைய மதிப்புக்குரிய எழுத்தாளர் என்று சொல்லி விடுதலை வாங்கிக் கொடுத்தது.  உடனே பர்ரோஸ் அமெரிக்க அரசைப் பாராட்டினாரா?  இல்லை.  ”அமெரிக்க சமூகம் எழுத்தாளர்களைப் புரிந்து கொள்ளவில்லை.  என்னை அவர்கள் paedaphile என்கிறார்கள்” என்று திட்டி விட்டு மொராக்கோ போய் விட்டார்.  அவர் ஒரு ஹோமோசெக்‌ஷுவல் என்பதால் மொராக்கோ சமூகம் அவருக்குத் தேவையான பாதுகாப்பை அளித்தது.  அதாவது, மொராக்கோ ஒரு இஸ்லாமிய நாடு என்றாலும், அங்கே சிறுவர்களோடு உறவு கொள்வது என்பது அமெரிக்காவைப் போல் கொலைக் குற்றம் அளவுக்குப் பார்க்கப்படுவதில்லை.  அதிலும் வெள்ளைக்காரர்களை மொராக்கோ தொடாது.  அதாவது, நான் எழுபதுகளின் மொராக்கோவைச் சொல்கிறேன்.  இப்போது உலகம் எங்கிலுமே அந்த விஷயம் கடுமையான குற்றச் செயலாகவே மதிக்கப்படுகிறது. 

ஜெனே மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக இருந்தன.  அதனால் அவருக்கு ஃப்ரெஞ்ச் சட்டப்படி ஏதோ இருநூறு முன்னூறு ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் இருந்த போது ஃப்ரான்ஸில் இருந்த அத்தனை புத்திஜீவிகளும் – பாப்லோ பிக்காஸோ, சார்த்தர் உட்பட – ஃப்ரெஞ்ச் அதிபருக்கு எழுதி அவரை சிறையிலிருந்து விடுவித்தார்கள்.  அவர் மீது இருந்த அத்தனை குற்றச்சாட்டுகளும் நீக்கிக் கொள்ளப்பட்டன.  திருட்டு, பாலியல் தேவைக்காக சிறுவர்களைப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்கள் அவை.  தன்னை இப்படி மூன்றாந்தர குற்றவாளியாகக் கருதி சிறையில் அடைத்ததை ஜெனே தன் வாழ்நாள் முழுவதுமே மன்னிக்கவில்லை.  அந்த நாடு (ஃப்ரான்ஸ்) என் நாடே அல்ல; என் உடல் கூட அந்த நாட்டில் புதைக்கப்படக் கூடாது என்று உயில் எழுதி வைத்து விட்டு மொராக்கோவுக்குப் போய் விட்டார் ஜெனே.  தற்செயலாக அவர் தன்னுடைய ஃப்ரெஞ்ச் பதிப்பாளரைப் பார்க்க பாரிஸ் சென்றிருந்த போது இறந்து போனபோதும் அவர் நண்பர்கள் அவர் உடலை மொராக்கோவுக்கு எடுத்துச் சென்று புதைத்தார்கள்.

இப்போது புரிகிறதா, எழுத்தாளனை ஒரு சமூகம் மதிக்கிறது அல்லது மதிக்கவில்லை என்பதன் அர்த்தம்?  சமூகத்தாலும் சட்டத்தாலும் மிகக் கொடுமையான குற்றமாகக் கருதப்படுவது சிறுவர்களைத் தங்கள் பாலியல் தேவைக்குப் பயன்படுத்துவது.  அதைச் செய்த வில்லியம் பர்ரோஸ் (மற்றும் கொலைக்குற்றம்), ஜெனே ஆகியோரை அமெரிக்காவும் ஃப்ரான்ஸும் “இவர்கள் கலைஞர்கள்; இவர்களுக்கு மற்ற மனிதர்களுக்கான சட்டம் பொருந்தாது” என்று கருதி இவர்களை அதிலிருந்து விலக்கியது.  ஆனால் இங்கே ஒரு எழுத்தாளன் ஒரு சராசரி மனிதனைப் போல் தோசை மாவு வாங்கப் போய், அதில் நடந்த தகறாரின் போது தாக்கப்பட்டால் அதற்கு அந்த எழுத்தாளன் மீது எத்தனை வசவுகள்?  இதுவாய்யா எழுத்தாளனை மதிக்கும் சமூகம்?  வெட்கமாக இல்லை?  வலிப்பு வியாதியால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவனைக் காப்பாற்றப் போன எழுத்தாளன் மீது கொலைக்குற்றம் சாட்டி சிறையில் தள்ளிய சமூகம்தானே இது?  இப்படிப்பட்ட சமூகம் ஜெயமோகனை எப்படிப் பார்க்கும்? 

அங்கே மளிகைக் கடையில் நடந்தது ஒரு ஏமாற்று வேலை.  புளித்த மாவைத் திருப்பிக் கொடுக்கும் போது வாக்குவாதம்.  கோபத்தில் கஸ்டமர் மாவைத் தூக்கி அடிக்கிறார்.  எப்போதும் சமூகத்தின் ஒட்டுமொத்த மனப்பிறழ்வையும் தன் மனதில் தாங்கி எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் வேறு எப்படி எதிர்வினை செய்வான்?  நான் என்ன சொல்கிறேன் என்றால், அவன் அந்தக் கடை மீது கல்லை விட்டு எறிந்தாலும் கூட கடைக்காரர் அவர் கை பற்றி அன்பு பாராட்டி அவரிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்?  யோவ், நடிகன் என்றால் அதைச் செய்வீர்கள் அல்லவா?  கமலோ ரஜினியோ விஜய்யோ அஜித்தோ – ஏன், ஒரு எஸ்.வி. சேகர் என்றால் கூட –  அப்படிச் செய்திருந்தால் கடைக்காரர் நான் சொல்வதுபோல் தானே செய்திருப்பார்?  சார், சார், கோபப்படாதீங்க சார், ஏதோ என் பொண்டாட்டி தெரியாத்தனமா பேசிட்டு, மன்னிச்சிடுங்க சார் என்று தானே கெஞ்சுவார்கள்?  நடிகன் என்றால் அப்படித்தானே நடந்திருக்கும்?  ஏன் சொல்கிறேன் என்றால், சமயங்களில் நான் எஸ்.வி. சேகரோடு உணவு விடுதிக்குச் செல்ல நேர்ந்த சமயங்களில் எல்லாம் ஏதோ கடவுளைப் பார்த்தது போல் எல்லோரும் அவரை விழுந்து விழுந்து சேவிப்பார்கள்.  பெண்கள் ரோமாஞ்சனம் அடைவார்கள்.  நேரில் பார்த்திருக்கிறேன்.  அடப் பாவிகளா, எஸ்.வி. சேகருக்கே இப்படி என்றால், அஜித் வந்தால் முடிஞ்சது கதை.  அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் ஒரு எழுத்தாளன் வந்து கோபப்பட்டால் அவனை நையப்புடைத்து, வீட்டுக்கும் போய் மிரட்டி…  என்ன நியாயம் இது? 

அவர் ஆஸ்பத்திரி படுக்கையில் இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டிலைப் பற்றி எத்தனை நூறு நக்கல், கிண்டல்?  படுக்கையில் படுத்துக் கொண்டு தண்ணீர் குடிக்காமல் வேறு என்ன குடிப்பது?  இப்படிச் செய்து செய்துதான் எல்லா எழுத்தாளர்களையும் கொன்றீர்கள்.  அசோகமித்திரனின் முகத்தில் அவர் சோகம் பூராவும் நிரந்தரமாகத் தங்கிப் போனது.  பாரதியிலிருந்து தொடங்கி கோபி கிருஷ்ணன் வரை பட்டினி போட்டே கொன்றீர்கள்.  போதவில்லை உங்களுக்கு? 

ஜெயமோகனை விமர்சியுங்கள்.  வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஜெயமோகன் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை.  ஆனால் சறுக்கி விழும் போது கல்லால் அடிப்பது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம்?  அவரை விமர்சிக்க உங்கள் யாருக்கும் அறிவு கிடையாது.  உழைப்பு கிடையாது.  அவரை விமர்சிக்க வேண்டுமானால் அவர் எழுதிய லட்சம் பக்கங்களையும் படிக்க வேண்டுமே?  நீங்கள்தான் முழுச் சோம்பேறி ஆயிற்றே?  அவருடைய வெள்ளை யானை நாவலைப் படித்து ஒரு தலித் விமர்சகர் மேடையிலேயே கதறி அழுதார்.  அவருடைய நூறு சிம்மாசனங்கள்  கதையை மலையாளத்தில் சுமாராக ஐந்து லட்சம் பேர் படித்திருக்கிறார்கள்.  அவர் மட்டும் தமிழில் எழுதாமல் மலையாளத்திலேயே எழுதியிருந்தால் இந்நேரம் நோபல் பரிசை வாங்கியிருப்பார்.  ஏனென்றால், அங்கே அப்படி மணி மணியான ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.  அவரது கால் தூசு பெற மாட்டாத எழுத்தாளர்களெல்லாம்  மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் பூராவும் பரவி பலப் பல சர்வதேசப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனாலும் இந்த மக்கு தமிழிலேயே எழுத முடிவு செய்தது.  ஏனென்றால், முன்னோடி மக்குகளான க.நா.சு.வும் அசோகமித்திரனும் தமிழில்தானே எழுதின?  இந்த இருவரும் தமிழைப் போலவே ஆங்கிலம் எழுதக் கூடியவர்கள்.  எழுதியிருந்தால் சர்வதேச அளவில் சென்றிருப்பார்கள்.  ஆனாலும் என்ன செய்ய?  நான் மட்டுமே இந்த நன்றி கெட்ட சமூகத்தை விட்டு வெளியே போய் விடலாம் என்று ஸ்பானிஷ் கற்றுப் பார்த்தேன், வரவில்லை.  ஃப்ரெஞ்ச் கற்றுப் பார்த்தேன், வரவில்லை.  ஆங்கிலம் ஆரம்பத்திலேயே கோபித்துக் கொண்டு ஓடி விட்டது.  அதனால்தான் தமிழில் எழுதுகிறேன். 

சரி, இந்த மாவுப் பிரச்சினை உனக்கு நடந்திருந்தால் என்ன செய்வாய் என்கிறீர்களா?  நான் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என் வீட்டுக்கு மாவு வாங்குகிறேன்.  மாவுக் கடைக்காரர் அந்த நாகர்கோவில் கடைக்காரர் மாதிரிதான்.  ஆனால் குடிக்க மாட்டார்.  இருந்தாலும் bad தான்.  இங்கே மாவுக்கடைக்காரர்கள் எல்லாமே தெலுங்குதான்.  தெலுங்குப் பாட்டுதான் கேட்பார்கள்.  கடையிலும் தெலுங்கு தினசரிதான் இருக்கும்.  தமிழும் தெலுங்கு உச்சரிப்போடுதான் பேசுவார்கள்.  ஏன் இந்த ஆள் bad என்றால்,  ஒருநாள் கூட அவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை.  நானே சிரித்தாலும் அவர் சிரிக்க மாட்டார்.  அது ஒரு சிறிய சந்து.  அப்பு தெரு என்று பெயர்.  மாவு வாங்கும் போது ஆட்டோ ரோட்டை அடைக்கும் இல்லையா, அதனால் அவதி அவதியாய் வாங்குவேன்.  அப்படி வாங்கும் போது ஒருநாள் காசைக் கொடுத்து விட்டு மாவை வைத்து விட்டு வந்து விட்டேன்.  இரண்டு கிலோ எழுபது ரூபாய்.  அந்த ஆளும் கண்டு கொள்ளவே இல்லை.  வீட்டுக்கே வந்து விட்டேன்.  பார்த்தால் மாவு இல்லை.  திரும்ப அதே ஆட்டோவில் போனேன்.  அரை கிலோ மீட்டர்.  நான் போனதும் மாவை வைத்து விட்டேன் என்றேன்.  முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் மாவை எடுத்துத் தந்தார்.  ஆனால் அவர் மனைவி ரொம்பத் தங்கமான பெண்.  சிரித்த முகம்.  ஒருநாள் அழுத மூஞ்சியாய் இருந்தது.  ஏனம்மா என்று கண்களாலேயே வினவினேன்.  எங்க நைனா செத்துப் போய்ட்டாங்க என்று சொல்லி அழுதார்.  அத்தனை தங்கம். 

சரி, அதை விடுங்கள்.  நாகர்கோவில் மாவுக்கடை சம்பவம் மாதிரியே எனக்கு தினசரி நடக்கிறது.  நான் அதைக் கண்டு கொள்வதில்லை.  கண்டு கொண்டால் நான் 365 நாளும் ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டியதுதான்.  பப்பு இருந்த போது தினசரி பக்கத்து வீட்டுக்காரன்களிடம் ஓத்தாம்பாட்டு வாங்கிக் கொண்டிருந்தேன்.  தினசரி.  ஒரு ஆட்டோக்காரன் அடிக்கவே வந்து விட்டான்.  அப்போது மட்டும் ஒரு தாதாவுக்கு போன் செய்தேன்.  சென்னையில் எனக்கு ரெண்டு தாதாக்களைத் தெரியும்.  ஒரு தாதா பற்றி ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேன்.  இன்னொரு தாதா தாதாவுக்கான அர்த்தத்தில் தாதா அல்ல; ஆனால் பல தாதாக்களைத் தெரிந்தவர் என்பதால் அவரையும் நான் தாதா லிஸ்டிலேயே சேர்த்து விட்டேன்.  பிறகு அவந்திகா தான் வந்து மத்தியஸ்தம் செய்து கடைசியில் என்னை அடிக்க வந்தவன் ரொம்ப நல்லவம்பா, கொஞ்சம் மெண்டல், அவ்ளோதான் என்று சொல்லி முடித்து விட்டாள். 

அப்புறம் ஸ்விக்கி மூலம் உணவு கொண்டு வருபவர்களில் பாதிப் பேர் அந்த நாகர்கோவில் கடைக்காரர்கள் மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள்.  இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கேட்டுக்கு வந்து நின்று கொண்டு உள்ளே வந்து தொலைக்காமல் வழி கேட்பார்கள்.  வழி சொல்வேன்.  தெரியாது.  மீண்டும் வழி கேட்பார்கள்.  அட, கேட்டிலிருந்து உள்ளே வரத் தெரியாதா?  தெரியாது.  ஒருநாள் ஜெயமோகனைப் போலவே கடுப்பாகி, ஏங்க, நான் கீழே இறங்கி வந்து ஒங்க கையப் புடிச்சி அழைச்சிக்கிட்டு வரட்டுமா என்று கேட்டுத் தொலைத்து விட்டேன்.  நேராக மேலே மாடி ஏறி என்னை அடிக்க வந்து விட்டான்.  இருபது வயது இருக்கும்.  என்னை என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வேன்.  அப்போதெல்லாம் ரமண மஹரிஷி மாதிரிதான் நடந்து கொள்வேன்.  என்னிடம் தகராறு செய்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் மகாத்மாவின் முகத்தை நினைத்துக் கொள்வேன்.  ஒரே ஒருமுறை ஒரு ஸ்விக்கிகாரன் அவந்திகாவை வா போ என்று பேசியபோது ங்கோத்தா ங்கொம்மா என்று ஆரம்பித்து அடிக்கப் போய் விட்டேன்.   அவந்திகாவை அவமானப்படுத்தினால் என்னால் சாத்வீகம் பேண இயலாது.  மற்றபடி தினமும் ஓத்தாம்பாட்டுதான் எனக்கு.  பப்பு போய் விட்டாலும் வேறு வேறு ரூபங்களில்.  இந்த வூபர்காரர்கள் அடிக்கும் லூட்டி வேறு.  அந்த டிரைவர்கள் படுத்தும் பாடு ஒரு நாவலே எழுதலாம்.  ரவுடிகள்.  கேடிகள்.  எல்லோரும் அப்படி அல்ல.  90 சதவிகிதம் அப்படி. 

எங்கள் செக்யூரிட்டியில் இருக்கும் வாட்ச்மேன் ஒருநாள் அவந்திகாவிடம் ஒரு போன் செய்ய அவளுடைய போனைக் கேட்டார்.  கொடுத்தாள்.  போய் செய்து விட்டுக் கொடுத்து விட்டார்.  அவளுக்கு இரவு ஒரு மணிக்கு ஒரு ஃபோன் வந்தது.  வாட்ச்மேனின் மகள்.  அதோடு அவந்திகாவின் தூக்கம் போனது.  இப்படிப்பட்ட டார்ச்சர்கள் தினம் தினம்.  நான் போனைக் கொடுக்க மாட்டேன்.

சரி, நாகர்கோவிலில் அந்த ஸ்பாட்டில் நான் இருந்திருந்தால்?  மாவு புளிச்சுப் போச்சு என்று அவந்திகா சொன்னால் தூக்கிக் குப்பையில் போடு என்பேன்.  போய் வேற நல்ல மாவு வாங்கி வாங்க என்று சொன்னால், நல்ல மாவு இல்லாததால்தானே புளிச்ச மாவு கொடுத்திருக்கான், வுடு கழுதையை என்பேன்.  பிறகு சாப்பாடு?  ஸ்விக்கிதான்.  நாகர்கோவிலில் ஸ்விக்கி இருக்கா இல்லியா?  ஸ்விக்கி இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது பழம்.  அதுவும் இல்லாமல் கடைக்கே திரும்பப் போய் அடியும் வாங்கி விட்டால், டெபுடி கமிஷனருக்கு போன் போடுவேன்.  நான் எந்த ஊரில் இருந்தாலும் அங்கே உள்ள தாதாக்களோடும் போலீஸ் அதிகாரிகளோடும் நட்பில் இருப்பேன்.  இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் எழுத்தாளனை அடித்தே கொன்று விடுவான்கள்.    

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai