தஞ்சை ப்ரகாஷ் (மீண்டும்)

போகிற போக்கில் ஒருவர் வந்து ப்ரகாஷுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எழுதினார் அல்லவா? ப்ரகாஷின் கதைகள் மறு பதிப்பில் வரும்போது கொடூரமான அச்சுப் பிழைகளோடு வருவதைக் கண்டு நான் மிகவும் துயரம் கொண்டிருக்கிறேன். மனிதர், உயிரோடு இருக்கும்போதும் எவனும் கண்டு கொள்ளவில்லை. இறந்த பிறகு இப்படி அவமானப்படுத்துகிறார்களே என்று. பக்கத்துக்குப் பக்கம் பிழைகள். அவற்றின் அர்த்தம் யாருக்குமே புரியாது. கயாமத் கதையில் ஒரு இடத்தில் அங்கே தாவூத் நடந்து கொண்டிருந்தது என்று வருகிறது. இதற்கு யார் விளக்கம் சொல்வது? முகநூலில்தான் ஒரு நண்பர் அது தாவூத் அல்ல, தாவத் என்று எழுதியிருந்தார். தாவத் என்றால் விருந்து. என் வீட்டுக்குப் பக்கத்தில் தாவத் என்று ஒரு உணவகம் உள்ளது. ஒரு முஸ்லீம்தான் வைத்திருக்கிறார்.

இப்படி இருக்கிறது பதிப்பக நிலை!!! தஞ்சை ப்ரகாஷின் கதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதால் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்) காயத்ரி இது பற்றிக் கேட்டதால் இதை எழுத நேர்ந்தது.