அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (3)

சென்ற இரண்டு கட்டுரைகளையும் சற்றே கடும் தொனியில் எழுதியிருந்தேன்.  காரணத்தை அந்தக் கட்டுரைகளிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  ஒரே ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன்.  இந்தப் பண விஷயத்தை என் நெருங்கிய நண்பர்கள் தங்களுக்காகவும் என்று எடுத்துக் கொள்வது தவறு.  அஸ்வினி குமாரை நான் பார்த்ததில்லை.  15 ஆண்டு நண்பர்.  ஆல்ஃப்ரட் தியாகராஜனும் அப்படித்தான்.  20 ஆண்டுகளாகத் தெரியும்.  சமீபத்திய நண்பர் வித்யா சுபாஷ்.  அவர் என் மொழிபெயர்ப்பாளர்.  மொழிபெயர்ப்புக்கு எத்தனை மணி நேரம் செலவாகும்… பணத்தை விட நேரத்தின் மதிப்பு அதிகம்.  இவர்கள் அனைவரும் என் குடும்பம்.  எனவே இவர்களிடம் பணம் வாங்குவது அவந்திகாவிடமும் ராம்ஜியிடமும் காயத்ரியிடமும் வாங்குவது போன்றது.  எனவே மற்றவர்களுக்காக எழுதுவதை என் நெருங்கிய நண்பர்கள் பொருட்படுத்தலாகாது.  சிலரது பெயரைத்தான் இங்கே குறிப்பிட்டேன்.  இன்னும் பத்து பேர் இருக்கிறார்கள்.  அக்டோபருக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  அமெரிக்காவில் என் சுற்றுப் பயணத்தைத் திட்டமிட வேண்டும்.  ஏதாவது ஒரு கரீபியத் தீவு அல்லது நிகாராகுவாவுக்கு  யார் என்னோடு வர முடியும்?  ஒரு வாரம்.  இத்தோடு இதை முடிக்கிறேன்.  தென்னமெரிக்கப் பயணத்தில் உடன் வந்த ரவி ஷங்கரை ஒரு விஷயத்தில் ரொம்பவும் பாராட்ட வேண்டும்.  என்னோடு சீலேயைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏழு லட்சத்தை செலவு செய்து வந்தார் பாருங்கள்…  என் நண்பர்களில் வேறு யாருமே முன்வரவில்லையே?  கருப்புசாமி வந்திருப்பார்.  அவரிடம் நான் முன்கூட்டியே சொல்லவில்லை.  அது என் தவறுதான்.  எனவே அந்த வகையில் நண்பர் ரவி ஷங்கர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.  எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com