இட்லி சாப்பிடுவது எப்படி? பிச்சைக்காரனோடு ஒரு விவாதம்.

பிச்சை:

சாருவின் madness தமக்கு சாதகமாக அமையும்போது அதை ரசிப்பவர்கள் பாதகமாக அமையும்போது ரசிப்பதில்லை . ஒரு நடிகர் தன் அனுமதியில்லாமல் தன்னை ஃபோட்டோ எடுத்துவிட்டார் என்பதற்காக அவரை திட்டி அவரை எதிரியாக்கிய சாரு போல வேறோர் எழுத்தாளர் செய்திருக்க மாட்டார் . ஒரு முறை சாருவுடன் பேசிக்கொண்டிருந்தேன் . அப்போது நான் மிகவும் மதிக்கும் விஐபி சாருவை பார்க்க வந்தார் . நாம் இருப்பது நாகரிகமல்ல என கிளம்ப எத்தனித்தேன் . ஆனால் சாரு என்னை போகவிடவில்லை . இவர் என் நண்பர் என அறிமுகப்படுத்தி அங்கேயே இருக்கச்செய்தார் . அந்த விஐபி என்னை சாருவின் நண்பர் என்ற வகையில் உயர்ந்த இடத்தில் வைத்து உரையாடியது சற்று கூச்சமாக இருந்தது . இன்னொரு சந்தர்ப்பத்தில் நான் இட்லியை சாம்பாரில் குழைத்து சாப்பிடுவதற்காக கடுமையாக கோபித்தார் . இது ஒரு பிரச்னையா என நான் நினைத்தேன் . மேற்கண்ட இரு நிலைகளிலும் சாரு போல யாரும் நடந்திருக்க மாட்டார்கள் . நான் இரண்டையுமே ரசித்தேன் . பெரும்பாலானோர் முதல் நிகழ்ச்சியை மட்டும் ரசிப்பார்கள் . அதன் பலனை மட்டும் அனுபவித்து கொள்வார்கள்…

சாரு:

பலரும் இட்லியை சாம்பாரில் குழைத்து சோறு போல் ஆக்கி சாப்பிடுகிறார்கள். ஒரு பர்வர்ஷனுக்காக தன் காதலியைக் கையைக் காலைக் கட்டி கலவி கொள்வார்கள் சிலர்… காதலியின் அனுமதியோடு என்று கேழ்விப் பட்டிருக்கிறேன். அதேபோல் காதலியும் காதலனின் கையைக் காலைக் கட்டிச் செய்வாளாம். அதுவும் கேழ்விதான். அப்படியே இட்லியையும் ஆக்கினை செய்வதை ஒரு பர்வர்ஷனுக்காக ஒரு முறை ரெண்டு முறை அனுமதிக்கலாம். அதுக்காக எப்போதுமே காதலியின் கையைக் காலை சீ… இட்லியின் வடிவத்தையே மாற்றி சோறு மாதிரி சாம்பாரோடு கலந்து கலந்து அடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இட்லியை பின்னமாக எடுத்து சாம்பாரில் செமயாக முக்கிச் சாப்பிடுவதே முறை.

வாசகர் வட்டத்தில் நடந்த இந்த உரையாடலுக்கு கணேஷ் அன்பு ஒரு எதிர்வினை செய்திருக்கிறார்.  அது மட்டும் இங்கே சென்ஸார்.