பிடித்த எழுத்தாளர்

தமிழில் சமகால எழுத்தின் மீது என் அதிருப்தியை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.  இருப்பினும் ஓரிருவர் என் மனம் கவர்ந்தவர்களாக இருக்கின்றனர்.  அவர்களில் ஒருவர் என். விநாயக முருகன்.  ஏற்கனவே இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  இவரது எழுத்தை முகநூலில் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இவரது கவிதைகளும் எனக்குப் பிடிக்கும்.  உரைநடை அதை விடப் பிடிக்கும்.  இவர் எழுத்தில் உள்ள பகடி அலாதியானது.  பகடி செய்வது தான் மிகப் பெரிய பிரச்சினை.  சிலர் பகடி என்று நினைத்துக் கொண்டு எழுதுவதைப் பார்த்தால் நமக்கு அழுகைதான் வரும்.  விநாயக முருகனின் எழுத்து அப்படி அல்ல.  முதல் காரணம், அவர் தன்னையே பகடி செய்து கொள்வார்.  அவரிடம் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம், அடக்கம்.  ரெண்டு வரி எழுதி விட்டு ஏதோ உலக இலக்கியத்துக்கு சவால் என்று சொல்லித் திரியும் சண்டியர்கள் மலிந்த இலக்கிய உலகில் விநாயக முருகனின் பொறுமையும் அடக்கமும் பாராட்டத்தக்கது.  எதற்கு இவ்வளவு சொன்னேன் என்றால், இன்றுதான் அவர் ஒரு ப்ளாக் வைத்திருக்கிறார் என்பதே எனக்குத் தெரியும்.  ஓவர் அடக்கம்.  படித்துப் பாருங்கள்.

http://nvmonline.blogspot.in/