பிக் பாஸ் – 7

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டு செய்த அயோக்கியத்தனம் பற்றி நான் தொடர்ந்து சில பதிவுகளைப் போட்டேன். அயோக்கியத்தனம் என்று சொன்னது அவர் லாஸ்லியாவைத் தடவுவது பற்றி அல்ல. அதை ஆட்சேபிக்க வேண்டியது லாஸ்லியாவே தவிர நான் அல்ல. நான் ஆட்சேபித்தது, கவினையும் லாஸ்லியாவையும் சேரன் அடக்க நினைத்ததை. அவர்கள் இருவரையும் அவர் தன் அடிமைகள் போல நடத்த முனைந்ததை. சேரன் என் மீது கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்தால் அலைச்சல்தான் எனக்கு. இருந்தாலும் ஒரு பொது நிகழ்ச்சியில் கண்ணுக்கு முன்னே பச்சையான அடிமைத்தனத்தை ஒருவர் நிகழ்த்திக் காட்டுகிறார் என்பதாலேயே கோபப்படுகிறேன். எனக்கு இருக்கும் வேலைப்பளுவில் நான் 60-ஆவது எபிசோடிலிருந்து பார்க்க ஆரம்பித்து அதிலும் ஒவ்வொரு எபிசோடையும் ஐந்தாறு நிமிடங்களே பார்க்கிறேன். அதனால் இப்போது அங்கே சேரன் இருக்கிறாரா, தடவுகிறாரா என்றெல்லாம் தெரியாது. இந்த நிலையில் அராத்துவின் பதிவு ஒன்றைப் பார்த்தேன். அதை கீழே பகிர்கிறேன். அதில் அவர் நான் எழுதிய ஒன்றை சுஜாதாவோ அல்லது வேறு யாரோ எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அநியாயம். எல்லா காரியத்தையும் அப்பன்களே செய்து விட்டால் அப்புறம் எங்களுக்கு என்னடா இருக்கு என்று ஒரு காதலன் தன் காதலியிடம் கேட்கிறான். அவன் அவளுக்கு பாண்டீஸ் பிரா எல்லாம் வாங்கும் போது அதையெல்லாம் இதுவரை என் அப்பாதான் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று அவள் சொல்கிறாள். இன்னொரு முறை அவளுக்கு அவன் மீனின் முள்ளை நீக்கி விட்டு ஊட்டி விடும் போதும் இதுக்கு முன் எங்க அப்பாதான் இப்படிக் கொடுத்திருக்கிறார் என்பாள். அப்போது அவன் வயிறு எரிந்து சொல்லும் வார்த்தை அது. அதுதான் அராத்துவின் ஞாபகத்தில் சுஜாதா எழுதியதாகப் போய் விட்டது. அதை விட துரதிர்ஷ்டம் என்னவென்றால், மேலே சொன்ன மீன் ஊட்டி விடல், ப்ரா பாண்டீஸ் வாங்கிக் கொடுத்தல் எல்லாமே web chatஇல் தான் நடக்கும். காதலனும் காதலியும் நேரில் சந்தித்ததே இல்லை.

போகட்டும். அராத்துவின் பதிவை இங்கே பகிர்கிறேன்.

பிக் பாஸ் – சேரப்பா – கேம் அப்பா

சேரன் நிஜ லாஸ்லியாவின் நிஜ அப்பா அம்மா எதிரே லாஸ்லியாவை அணைத்துக்கொண்டார். லாஸ்லியாவின் தோள் மீது கை போட்டு கைகளினூடாகவே படர்ந்து லாஸின் உள்ளங்கைக்குள் தன் கையை புதைத்து , அவரின் விரல்களை தனது விரல்களால் நிரடிக்கொண்டு இருந்தார். விஜய் டிவி இந்த காட்சிகளை க்ளோஸ் அப்பில் காட்டிக்கொண்டு இருந்தது. எந்த அளவு க்ளோஸ் அப் என்றால் , திரை முழுக்க இருவரது உள்ளங்கைகளும் விரல்களும் மட்டும் தான். சேரன் லாஸ்லியாவின் விரல்களை பிடித்து விட்டும் நிரடிக்கொண்டும் இருக்கிறார்.

ஒரு ரசனையான போர்னோகிராஃபி படத்தில்தான் இதைப்போன்ற காட்சிகளை வைப்பார்கள். ஹீரோ ஹீரோயினின் கைகளை தடவிக்கொண்டே போய் அவளின் விரல்களை பிடித்து சொடக்கெடுத்து உருவி விட்டுக்கொண்டு இருக்கையில் , அவள் ஹார்னி ஆகி கண்கள் சொருக , இப்படி செய்து கொண்டிருப்பவனின்….சரி சரி வேண்டாம் விடுங்கள்.

என்ன எழவு கூத்து இது ? கண்றாவி ! உறவைக் காட்ட , பாசத்தைக் கொட்ட , உடல் விளையாட்டு தான் பிரதானமா ?சேரன் தன் மன சாட்சியைத் தொட்டு சொல்ல வேண்டும். தன் சொந்த மகளை இப்படி செய்திருக்கிறாரா ? லாஸ்லியாவை தந்தை என்ற போர்வையில் இறுக்கிக்கொண்டு தடவுகையில், மனதில் எந்த உணர்வும் இல்லாமல்தான் இருந்ததா ? பச்சையாக சொல்வதானால் , சேரனுக்கு ஏதும் உடல் சிக்கல் இல்லையெனில் விரைத்திருக்கும். அல்லது விரைக்க முற்பட்டிருக்கும் !

ஒரு அன்பான அணைப்புக்கிற்கு நான் எதிரியல்ல. அது ஒரு நாகரீகம். பட்டும் படாமல் தோள்கள் மட்டும் ஒட்டி எடுக்கும்படிக்கு இருக்க வேண்டும்.

முலைகள் தெறிக்க , ஈருடல் ஓருயிர் போல இறுக்கி அணைக்கவும் , தடவவும் , சொடக்கெடுக்கவும் , எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கவும் , கண்ட இடங்களில் கையை விட்டு குடாயவும் காதலி , மனைவி , கள்ளக் காதலி என பல உறவுகள் இருக்கின்றனவே ! இல்லை , அப்படி ஏதும் இப்போதைக்கு இல்லை எனில் விலைமாதுவிடம் போவது உத்தமம். அக்கா , தங்கச்சி , அம்மா , மகள் என்றெல்லாம் பாச தடவுதல் கேவலமானது.

இதைச்சொன்னால் என்னையே பர்வர்ட் என்பார்கள். லாஸ்லியா – நிஜ அப்பா அணைத்தலே கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. அப்பா – மகள் இடையே இவ்வளவு அணைப்புத் தேவையில்லை. அவரும் , லாஸ்லியா கைகளைக் கோர்த்துக்கொண்டார். என்ன சின்ன கையாக இருக்கிறதே என்றார். இதுவா சின்னக் கை என்று லாஸ்லியா கொஞ்சினார். இந்த விஷயத்தில் இதை நான் சேரன் போலத் தவறாகச் சொல்லவில்லை , தவிர்க்க வேண்டும் என்கிறேன்.

சுஜாதா எழுதியதா அல்லது ஏதேனும் திரைப்படத்தில் வந்ததா என்று மறந்து விட்டேன். அதில் ஒரு அப்பா பாசத்துடன் தன் மகளுக்கு எல்லாம் செய்து கொண்டிருப்பார். காதலன் காதலியின் அப்பாவிடம் கேட்பான் ……”எல்லாத்தையும் அவளுக்கு நீங்களே செஞ்சிட்டா ….நான் அவளுக்குச் செய்ய என்னதான் மிச்சம் இருக்கு ?”

வெறும் மேட்டர் செய்வதற்கு மட்டும்தான் காதலன் / கணவனா ?

அதை மட்டும் தான் மிச்சம் வைப்பீர்களா மாடர்ன் அப்பாக்களே ?