பிக்பாஸ் 3

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற சில புத்திஜீவிகள் நினைப்பது போல் ஒரு முட்டாள்தனமான டிவி சீரியல் அல்ல. இந்த சமூகத்தைப் புரிந்து கொள்ள தமிழ் தினசரிகள் எப்படி ஒரு முக்கியமான சாதனமோ அதை விட பல நூறு மடங்கு முக்கியமான நிகழ்வாகத் தெரிகிறது.

ஆரம்பத்தில் நான் பார்க்காத 60 நாட்களையும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது பார்த்து விட வேண்டும் என்று பார்க்கிறேன். ஒரு மணி நேரத்தில் ஒரு பத்து நிமிடம். இல்லாவிட்டால் கஸ்தூரி மாதிரியான கேரட்கர்களை சினிமாவில் கூட பார்ப்பது அரிதாயிற்றே?

60இலிருந்து 88 வரை பார்த்த போது தர்ஷனும் சாண்டியும்தான் ஃபைனல்ஸில் வருவார்கள் என்றும், சாண்டி டைட்டிலை வெல்லலாம் என்றும் தோன்றுகிறது. இன்னும் பத்து நாள் performanceஇல் தர்ஷன் முன்னேறவும் வாய்ப்பு இருக்கிறது.

வாழ்க்கையில் ஒரு இலக்கியப் புத்தகத்தைக் கூட படித்திருக்க வாய்ப்பில்லாத சாண்டி இந்திய சராசரி மனிதனிடம் இன்னும் தங்கியிருக்கும் வெகுளித்தனத்தால் வெல்வார் என்று நம்புகிறேன்.