உலகின் மிக முக்கியமான புத்தகக் கடைகள் என்று ஐந்து கடைகளை எடுத்தால் அதில் ஒன்றாக வரும் kinokunia. அது முதலில் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன் என்னை இறை நம்பிக்கையாளனாக மாற்றிய The Blinding Absence of Light என்ற நாவலை சிங்கப்பூர் கினோகுனியாவில்தான் வாங்கினேன். அதன் கிளை துபயில் இருக்கிறது. இந்தக் கடை சிங்கப்பூரிலும் துபயிலும் மட்டுமே உள்ளது. செல்ல வேண்டும். யார் என்னோடு வருகிறீர்கள்? நீங்கள் புத்தகம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நானே பார்த்துக் கொள்கிறேன். உடன் வந்தால் போதும்.