பூனைகள்

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 15 பூனைகளுக்கு உணவிட்டு வருகிறோம். அதற்காக நாங்கள் வாங்கும் ஏச்சும் பேச்சும் கொஞ்சநஞ்சம் அல்ல. இன்னும் அடி வாங்காத குறைதாம். அந்தப் பூனைகள் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு விட்டு எங்கோ போய் பதுங்கி விடும். யார் கண்ணிலும் படாது. இருந்தாலும் எங்களைக் கரித்துக் கொட்டுகிறார்கள். நிற்க. இதனிடையில் புஸ்ஸி ஒரு மாதம் முன்னால் 3 குட்டி போட்டு மூன்றையும் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டு விட்டது. மழையிலும் கார் சக்கரத்தாலும் குட்டிகள் செத்து விடுவது எங்கள் குடியிருப்பில் வழக்கம். அப்படித்தான் ஸிஸ்ஸியின் இரண்டு குட்டிகள் மழையில் சிக்கி செத்தன. இத்தனைக்கும் ஸிஸ்ஸியின் முதல் பிரசவத்தில் பிறந்த குட்டிகள் அவை. அப்போது ஸிஸ்ஸி அழுத அழுகை கல்லையும் கரைக்கக் கூடியது. ஒரு வாரம் தொடர்ந்தது அதன் அழுகையும் துயரமும். இப்போது இந்த மூன்று குட்டிகளும் மழையில் செத்து விடாமல் இருக்க அவந்திகா எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டாள். இந்த மூன்று குட்டிகளும் யாருக்காவது வேண்டுமா? அல்லது பூனைக் காப்பகம் ஏதேனும் உள்ளதா? எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
பூனை உணவும் தேவை. Whiskas. Kitten food. Whiskas adult food. DRY Sea food. Or tuna.
and whiskas adult WET tuna food.