கலகம் காதல் இசை

கலகம் காதல் இசை என்ற நூலை பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  ஒரு நாளில் முடிக்க வேண்டிய நூல்.  பிழைகளும் அதிகம் இல்லை.  ஆனால் நான் பிழை திருத்தம் செய்யும் போது அந்த நூலைத் திரும்பவும் ஒருமுறை எழுதுவதாகவே சொல்ல வேண்டும்.  உதாரணமாக, ”Sleimane Benaissa என்ற அல்ஜீரிய நாடகாசிரியர்” என்று வரும் போது அதில் ஒன்றும் பிழை இல்லையே என நான் தாண்டிப் போக மாட்டேன்.  அல்ஜீரியப் பெயர்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு அதில் e வராது என்று தெரியும்.  என்னிடம் கலகம் காதல் இசை மூல நூல் இல்லை.  இருந்தாலுமே மூல நூலை மட்டும் பார்க்க முடியாது.  அதிலும் பிழை இருக்கலாம்.  கூகிளில் பார்க்க வேண்டும்.  ‘e’ கிடையாது. Slimane Benaissa தான் சரி. 

நான் எழுதியுள்ள நூறு நூல்களில் மிக முக்கியமான ஐந்து நூல்கள் என்று எடுத்தால் அதில் ஒன்றாக வரும் கலகம் காதல் இசை.  இதை 15 ஆண்டுகளுக்கு முன் மாத்ரு பூமி மலையாள வார இதழில் தொடராக எழுதினேன்.  ஞாபகம் இருக்கிறது.  பைபாஸ் சர்ஜரி செய்து மருத்துவமனையில் கிடந்த போது டிக்டேட் செய்து அனுப்பினேன்.  நான் சொல்லும் தமிழை அவந்திகா எழுதுவாள்.  ஆனால் அப்போது அவந்திகாவுக்கு சரியாக தமிழ் எழுத வராது.  அதனால் வேறு சில நண்பர்களை வரவழைத்து டிக்டேட் செய்தேன்.  அதுவுமே பிழையாக இருந்ததால் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும்.  இருந்தாலும் மருத்துவமனையில் இருந்த காலகட்டத்திலும் ஒரு வாரம் கூட பிசகாமல் கட்டுரை போய்க் கொண்டிருந்தது.  அதே காலகட்டத்தில் கலா கௌமுதி பத்திரிகையில் ராஸ லீலா நாவலும், மாத்யமம் பத்திரிகையில் தப்புத் தாளங்கள் தொடரும் எழுதி வந்தேன்.  ஒரே வாரத்தில் மூன்று பத்திரிகைகளுக்குத் தர வேண்டும்.  ராஸ லீலாவாவது நாவல்.  மற்ற இரண்டும் மிக கனமான ஆய்வுக் கட்டுரைகள்.  எல்லாமே தடங்கல் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.  டிக்டேட் செய்யப்பட்டதை ஒருவர் தட்டச்சு செய்து ட்டி. டி. ராமகிருஷ்ணனுக்கு அனுப்புவார். அவர் அதைப் பேய் வேகத்தில் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்.  என்னிடம் மூக்கு வலி, முதுகு வலி, ஜுரம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வேலைக்கு விடுப்பு எடுப்பவர்களைப் பார்த்தால் கோபமாக வரும்.  பைபாஸ் சர்ஜரி 15 ஆண்டுகளுக்கு முன்னால் எத்தனை கடினமான விஷயமாக இருந்தது.  சர்ஜரி முடிந்து நெஞ்சில் சளி கோர்த்து விட்டால் உயிராபத்து.  ஆனால் அனஸ்தீசியா கொடுத்தால் கன்னாபின்னா என்று சளி சேரும்.  அந்த ஒருநாள் கொஞ்சம் ஆபத்தான கட்டம்தான். 

எதற்குச் சொல்கிறேன் என்றால், மூன்று வாரப் பத்திரிகைகளிலுமே ஒரு வாரம் கூட இடைவெளி கொடுக்கவில்லை.  அனுப்பிக் கொண்டேயிருந்தேன்.  உங்கள் பணி உங்களுக்குப் பிடித்ததாக இருந்தால் பேய் மாதிரி வேலை செய்ய வேண்டும். 

ஆனாலும் கலகம் காதல் இசை தமிழில் அதிகம் பேரால் வாசிக்கப்படவில்லை.  ஏனென்றால், தமிழில் எழுதப்பட்டு மலையாளத்தில் அல்லவா வெளிவந்தது?  மாத்ரு பூமிக்கு அப்போது ஒரு லட்சம் வாசகர்கள் இருந்தனர்.  படித்தார்கள். ஆனால் தமிழில் ஒருத்தர் கூட படிக்க வாய்ப்பு இல்லை.  எந்த வெகுஜனப் பத்திரிகையும் இத்தனை கனமான கட்டுரைகளை வெளியிடத் தயாராக இல்லை. 

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரம் மூலம் இந்த நூல் இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்குக் கிடைக்கும். வெறும் 150 பக்கங்களே உள்ள இதைப் படித்து முடிக்க ஒருவருக்கு ஒரு ஆயுள் போதாது என்றே சொல்வேன். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படித்து முடிக்க ஒரு நாளோ ரெண்டு நாளோ ஆகலாம்.  ஆனால் இந்த நூலை அப்படி வாசிக்க முடியாது.  இது உங்களின் வாழ்நாள் பூராவுக்குமான நூல்.  எப்படியென்றால்,

இந்த நூலில் Merzak Allouache என்ற அல்ஜீரிய இயக்குனர் பற்றிய குறிப்பு வருகிறது.  இந்த நூலை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன்.  அப்போது என்னிடம் கணினி வசதி இல்லை. இதை நீங்கள் ஞாபகம் வைக்க வேண்டும்.  அல்ஜீரியாவிலிருந்து பாரிஸுக்குப் புலம்பெயர்ந்து வாழும் இவர் படங்கள் பல திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றிருக்கின்றன.  இவருடைய ஒரு படத்தைப் பார்த்து நான் கலகம் காதல் இசையில் எழுதியிருக்கிறேன்.  Bab El-oued City (1994) என்பதுதான் அது.  இவரைப் பற்றி இரண்டு பத்திகள் கலகம் காதல் இசையில் உள்ளன.  ஆனால் இந்த நூலை ஒருவர் சரியாக வாசிக்க வேண்டுமானால் அவர் மர்ஸாக் அலூச்சியின் ஒரு படத்தையாவது பார்க்க வேண்டும் இல்லையா?  அதனால்தான் இந்த நூல் ஒருவரின் வாழ்நாள் முழுமைக்குமான நூல் என்று சொன்னேன்.  மேலே குறிப்பிட்ட படம் ஒரு மத அடிப்படைவாதியைப் பற்றியது.  இதை அவர் அல்ஜியர்ஸ் நகரில் எடுத்துக் கொண்டிருந்தபோது இவரது நெருங்கிய நண்பரான நாவலாசிரியர் தாஹர் ஜௌத் (Taher Djaout) கொல்லப்பட்டார்.  அதே உயிராபத்து அலூச்சிக்கும் இருந்ததால் அவர் பாரிஸுக்குப் புலம் பெயர்ந்து விட்டார்.  அல்ஜியர்ஸில் இவர் அந்தப் படத்தை (Bab El-oued City) எடுக்க முடியாமல் போனது பற்றி இவர் Bab El-oued என்ற தலைப்பிலேயே ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். 

தாஹர் ஜௌத் கொல்லப்படுவதற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இது:  Slimane Benaissaவும் தாஹர் ஜௌத்தும் நண்பர்கள்.  இவர்கள் இருவரும் பாரிஸில் உள்ள ஒரு கஃபேவில் உரையாடிக் கொண்டிருந்த போது பனைஸா தன் சமீபத்திய நாடகம் ஒன்றை ஜௌத்திடம் விவரிக்கிறார்.  நாடகத்தில் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்கள்.  ஒருவன் மத அடிப்படைவாதிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்திரிகையாளன்.  இன்னொருவன், அப்பத்திரிகையாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றப் போகிறவன்.  பத்திரிகையாளனின் கடைசி நான்கு நாட்களைப் பற்றியதே நாடகம்.  அதே நான்கு நாட்களில் அப்பத்திரிகையாளனைக் கொல்லப் போகிறவனின் கதையும் நாடகத்தில் சொல்லப்படுகிறது. 

கேட்டுக் கொண்டிருந்த தாஹர், பனைஸாவிடம் சொல்கிறார்: “ஜாக்கிரதையாக இருங்கள்; இல்லாவிட்டால் அவர்கள் உங்களையும் கொன்று விடுவார்கள்.  கடந்த மூன்று ஆண்டுகளில் நான் இப்படி முப்பது நண்பர்களை இழந்திருக்கிரேன்.  அதில் ஒன்பது பேர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.”

இந்தச் சந்திப்புக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாஹர் ஜௌத் கொல்லப்பட்டார்.

இப்படித்தான் செல்கிறது கலகம் காதல் இசை.  சரி, இதைப் படிக்கும் நம்மால் ஸ்லிமான் பனைஸாவின் அந்தக் குறிப்பிட்ட நாடகத்தைப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா?  ஆனால் பனைஸா பற்றிய குறிப்புகளைக் கூட கூகிளில் அதிகம் பார்க்க முடியவில்லை.  நான் குறிப்பிட்டிருக்கும் நாடகம் பற்றிய குறிப்புகள் கூட ஃப்ரெஞ்சில்தான் உள்ளன. 

இந்தக் குறிப்பையே நான் காயத்ரிக்காகத்தான் எழுத ஆரம்பித்தேன்.  காயத்ரி கனடிய ஃப்ரெஞ்ச் இலக்கியத்தில் கவனம் செலுத்துபவள்.  ஆனால் பாரிஸில் புலம்பெயர்ந்து வாழும் அல்ஜீரியர்களின் ஃப்ரெஞ்ச் இலக்கியம் அவர்கள் சிந்திய ரத்தத்தால் எழுதப்பட்டது.  பல பிரதிகள் ஆங்கிலத்திலேயே கிடைக்கவில்லை.  ஃப்ரெஞ்சுக்காரர்கள் எழுதிய இலக்கியமெல்லாம் தமிழில் மொழிபெயர்க்க பலர் இருக்கிறார்கள்.  ஆனால் Francophone இலக்கியத்தை – அதிலும் குறிப்பாக அல்ஜீரிய-ஃப்ரெஞ்ச் இலக்கியத்தைத் தமிழில் கொண்டு வர ஆட்களே இல்லை.  காயத்ரி இதைச் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

கலகம் காதல் இசை உங்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும்.   

***

கடந்த இரண்டு மாதங்களாக சந்தாத் தொகை எதுவும் வரவில்லை. நானும் ஒன்றும் ஞாபகப்படுத்தி எழுதவில்லை என்பதால் இருக்கலாம். கவனியுங்கள்.

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai