புத்தக விழா – 3

நேற்று புத்தக விழா முதல் நாள். ஆறு மணிக்குப் போனேன். எடப்பாடி மேடையில் நின்று படித்துக் கொண்டிருந்தார். திருவள்ளுவர் என்று காதில் விழுந்தது. எந்தக் கெடுபிடியும் இல்லை. ஏதோ முனிசிபல் கவுன்சிலர் ரேஞ்சுக்குத்தான் இருந்தது. இதுவே ஜெயலலிதா என்றால் காட்டு தர்பாராக இருந்திருக்கும். இதற்கே எடப்பாடிக்கு மக்கள் திரும்பவும் ஓட்டுப் போடுவார்கள் போல் தெரிகிறது.

சென்ற வருடமே புத்தக விழா ஈ ஓட்டியது என்றேன். இந்த ஆண்டோ அந்த ஈ கூட இல்லை. மயான அமைதி. புத்தக விழாவின் நேரமும் குறைக்கப்பட்டு விட்டது. இன்னமும் குறைக்கலாம். ஒரு ரெண்டு மணி நேரம் வைத்தாலே போதும் போல் தோன்றுகிறது. புத்தகம் வாங்க ஆளே இல்லையே? அதேபோல், புத்தக விழா நடக்கும் நாட்களையும் கம்மி பண்ணி விட்டார்கள். சென்ற ஆண்டு இரண்டு வாரம் இருந்தது. இந்த ஆண்டு அதை விடக் கம்மி. பேசாமல் இதையும் கம்மி பண்ணி சனி ஞாயிறு மட்டும் வைக்கலாம்.

நம் காரியத்தை நாம் பார்ப்போம். நேற்று எலந்த வடை வரவில்லை. கிடைக்கவில்லை என்று பல புகார்கள். அடையாறில் கிடைக்கும். நீல்க்ரீஸில் கிடைக்கும். மைலாப்பூரில் நாட்டு மருந்துக் கடைகள் அனைத்திலும் கிடைக்கும். இத்தனை சீக்கிரம் தமிழர் வாழ்விலிருந்து எலந்த வடை மறைந்து போனது துரதிர்ஷ்டவசமானதுதான். ஒரு நண்பர் கடலை மிட்டாய் வாங்கி வந்தார். அதுவும் பிடிக்கும்தான். ஆனால் நந்தினி ப்ராண்ட் வாங்கக் கூடாது. கோவில்பட்டி கடலைமிட்டாய் தான் ஓரளவுக்கு ஒரிஜினல் கோவில்பட்டி கடலைமிட்டாய் மாதிரி இருக்கும். மாதிரிதான். ஏதோ கொஞ்சம் கிட்டத்தில் வரும். நந்தினி கடலைமிட்டாயெல்லாம் சும்மா சக்கரைக்கட்டி.

இன்று அய்யனார் விஸ்வநாத் வருவதாகச் சொல்லியிருக்கிறார். கணேஷ் அன்புவும் வருகிறார். இவர்கள் இருவரும் அராத்துவின் நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் அவர்களுக்கு ஒரு பெரும் அனுபவமாக இருந்திருக்கும்…