புத்தக விழா 4

பிரமாதமான எலந்த வடை கிடைத்து விட்டது. காதி க்ராமோத்யோகில் வாங்கினாராம். இனி எலந்தவடை வேண்டாம்.

பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் முரடர்களாகவும் வழிப்பறிக் கொள்ளையரைப் போலவும் நடந்து கொள்கிறார்கள். நேற்று மைலாப்பூரிலிருந்து நந்தனம் போக 150 ரூ வாங்கிக் கொண்டு வாசலிலேயே விட்டுவிட்டுப் போய் விட்டார். வாசலிலிருந்து உள்ளே போக ஒரு கிலோமீட்டர். சிரமப்பட்டு நடந்தேன். 100 ரூ. தூரம். இதில் பாதியிலேயே இறக்கி விட்ட கொடுமை.

இன்று சரியாக மாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவேன். யாரேனும் பைக்கிலோ காரிலோ ஆட்டோவிலோ என்னை அழைத்துச் செல்ல முடியுமா? நான்கு மணிக்கு சாந்தோம் நெடுஞ்சாலை ஜாக்கி ஷோரூம் வாசலில் நிற்பேன்.

மேற்கண்ட பதிவை இரண்டு மணி நேரத்துக்கு முன்பு முகநூலில் பதிவிட்டேன். நண்பர் பிரபு வந்து அழைத்துச் செல்வதாக சொன்னார். இன்னும் வீட்டில் மதிய உணவே கிடைக்காததால் சாப்பிடவே மூன்று ஆகும் போல் தெரிகிறது. இப்போதுதான் இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி எல்லாம் நறுக்கிக் கொடுத்தேன். அதனால் நாலரை மணிக்குக் கிளம்பி புத்தக விழாவுக்கு ஐந்து மணிக்கு வந்து விடுவேன். வந்து என்ன? ஈ ஓட்ட வேண்டியதுதான். நேற்று என்னோடு சேர்ந்து அய்யனார் விஸ்வநாத்தும் ஓட்டினார்.