புத்தக விழா 6

சிலர் என்னைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார்கள். சிலர் கட்டியணைக்காமல் முத்தமிடுகிறார்கள். சிலர் பாதம் தொட்டு வணங்குகிறார்கள். பாக்யராஜ் என்ற வாசகர் “உங்கள் கன்னத்தைக் கிள்ளிக் கொள்ளவா?” என்று கேட்டார். இதில் ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இல்லை. இருபாலரும். இது யாவற்றையும் ஒன்றே போல் கருத என்னைப் பக்குவப்படுத்து பெருமாளே என்று வேண்டிக் கொண்டேன். அதிலும் பாதம் தொட்டு வணங்கும் போது என்னிடம் உள்ள ஒருசில ஆசாபாசங்கள் கூட என்னை விட்டு அகல்வதை உணர்கிறேன். என் பாதம் பணிவதை என்னைப் புனிதனாக்குவதற்கான ஆன்ம சோதனையாக்கிக் கொள்கிறேன்…