மீண்டும் மீண்டும் மீண்டும் மன்னிப்பு… (4)

சாரு: நூற்றுக்குநூறுஅந்தநாவலைஉத்தமத்தமிழ் எழுத்தாளர்தாக்கிஎழுதுவார். அதில்எனக்குச்சந்தேகமேஇல்லை. உத்தமத்தமிழ்எழுத்தாளரும்நானும்எப்போதாவதுசந்தித்துக்கொள்வோம்புலிகள்விஷயத்தில்அப்படிநடந்தது. இப்போதுஇந்தநாவல்விஷயத்திலும்அப்படியேநடக்கும். …’’

மனுஷ்ய புத்திரன்: இதற்குஎன்னஅர்த்தம்என்றுதெரியவில்லை. ஜெயமோகனுக்குஇந்தநாவல்பிடிக்காதுஎன்றுஎந்தஅடிப்படையில்அவர்முடிவுக்குவருகிறார்? அல்லதுபிடித்துவிடக்கூடாதுஎன்றுநினைக்கிறாரா? இப்படிதமிழ்இலக்கியத்தின்சக்திவாய்ந்தஇரண்டுஆளுமைகள்சேர்ந்துகூட்டாகஎதிர்க்கப்படவேண்டியஅளவுஅதுசமூகவிரோதநாவலா?

சாரு: ஒரு நண்பரின் வீட்டுக்குச் செல்கிறீர்கள். அங்கே உங்களை காஃபி குடிக்கச் சொல்கிறார்கள்.  நீங்கள் மறுக்கிறீர்கள்.  அவர்களோ மறுபடியும் அன்புத் தொல்லையைத் தொடர்கிறார்கள்.  குடிங்களேன்.  கொஞ்சமா குடிங்களேன்.  என்னதான் அன்புத் தொல்லை கொடுத்தாலும் விடாப்பிடியாக தங்கள் கொள்கையில் உறுதியோடு நிற்கும் எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.  மனுஷ்ய புத்திரன் அப்படிப்பட்டவர்தான்.  எத்தனையோ முறை இன்னொரு பெக் சாப்பிடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறேன்.  ம்ஹும்.  மனிதர் அசைந்து கொடுக்க மாட்டார். ரெண்டு பெக் என்றால் ரெண்டு பெக் தான்.  அதற்கு மேல் ஒரு ட்ராப் கூட உள்ளே போகாது.  அராத்துவும் அப்படித்தான்.  ஒரே ஒரு நாள் என் பேச்சைக் கேட்டு ரெண்டு பெக் அதிகமாகச் சாப்பிட்டு தொடர்ந்து 20 மணி நேரம் தூங்கி எல்லோரையும் பதற்றம் கொள்ளச் செய்தார்.  ஆனால் நான் எப்படியென்றால், இவர்கள் இருவருக்கும் மாறானவன்.  ஒருமுறை மறுத்துப் பார்ப்பேன்.  கேட்கவில்லை என்றால் என் பிடிவாதம் தளர்ந்து விடும்.  அப்படித்தான் இளம் எழுத்தாளர் விஷயத்தில் அமைதி காத்தேன்.  நான் முகநூலில் எதுவுமே எழுதவில்லை.  ஹமீதிடம் போனில் சொன்னேன். எனக்கு அந்த நாவல் பிடிக்கவில்லை.  ரொம்ப ஸாரி.  வந்து பேச முடியாது.  ஹி… ஹி…  ஹமீதுதான் அதை முகநூலில் எழுதினார்.  எழுத்தாளனுக்கு personal space-ஏ கிடையாதா?  போனில் சொன்னதைக் கூட முகநூலில் ஆயிரம் பேருக்கு முன்னே பகிர்ந்து கொள்ள வேண்டுமா?  சரி.  அதற்கும் பதில் சொல்லி மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன்.  அதுவரை நாங்கள் பேசிக் கொள்வது எந்த நாவல் பற்றி என்பது தெரியாது.  என்னுடைய ஒரே கரிசனம், நாவல் வெளிவருவதற்கு முன்பு அது பற்றி எதிர்மறை விமர்சனம் வரக் கூடாது என்பதுதான்.  ஆனால் இளம் எழுத்தாளர் ஹமீதை விட மேலே போய் துள்ளோ துள்ளு என்று துள்ளுகிறார்.  நான் அமைதியாக இருக்க இருக்க அவர் மேலே மேலே எழுதிக் கொண்டே போகிறார்.  என்னை என் மனைவிக்குப் பிடிக்காது; ஏன், எனக்கே என்னைப் பிடிக்காது.  என் நாவல் ஒபாமாவுக்குப் பிடிக்காது.  ஏன், கடவுளுக்கே பிடிக்காமல் போனாலும் போகும். 

ஆமாம், நான் கேட்கிறேன்.  நான் பாட்டுக்கு வாயையே திறக்காமல்தானே கிடக்கிறேன்.  ஜனவரியில் எப்போதாவது ஒரு காஃபி ஷாப்பில் வைத்து நாவலில் என்ன பிரச்சினை என்று உங்களிடம் பேசுகிறேன் என்றுதானே சொன்னேன்?  எந்த எழுத்தாளனாவது இவ்வளவு சிநேகமாகச் சொல்வானா?  அந்த நட்புக் கரத்தை ஏன் தட்டித் தட்டி விடுகிறீர்கள்?  இவ்வளவுக்கும் உங்களின் முகநூல் எழுத்துக்கு நான் ரசிகன் என்று வேறு ஒவ்வொரு பதிவிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  அதைப் பற்றியும் நீங்கள் கவலையே படவில்லை.  நேற்று கூட தன் பால்ய கால சிநேகிதிக்கு அரசமரத்து இலையை எடுத்து பீப்பீ ஊதிக் காட்டியதாக எழுதியிருந்தார்.  அட்டகாசம், அட்டகாசம் என்று ரசித்தேன்.  நாவல் என்று வரும் போது பல்பு ஆகி விடுகிறது.  இதற்கு நான் என்ன செய்ய? 

நேற்று அவரது முகநூலில் எழுதியிருந்ததைப் படித்து நான் மிகவும் அவமானம் அடைந்தேன்.  எழுத ஆரம்பிக்கும் போதே இரண்டு சீனியர் எழுத்தாளர்களைப் பார்த்து நக்கல் பண்ணுவதைப் பார்த்து வருத்தம் அடைந்தேன்.  அதாவது, நானும் மனுஷ்ய புத்திரனும் அவர் நாவலை முன்வைத்து அடித்துக் கொள்கிறோமாம்.  விநாயக முருகனின் முகநூல் பதிவு பின்வருவது:

”அமைதிப்படைபடத்தில்ஒருகாட்சிவரும். சத்யராஜ் (அப்பாகேரக்டர்) அவர்வசிக்கும்கிராமத்தில்இரண்டுஜாதிஆட்களுக்குஇடையில்சண்டையைமூட்டிவிடுவார். கிராமம்பற்றிக்கொண்டுஎரியும். குடிசைகள்எரியும். ஆட்கள்வெட்டிக்கொன்றுசாவார்கள். சத்யராஜ்நிதானமாகவீட்டின்ஊஞ்சலில்ஆடியபடியேவிஸ்கிசாப்பிடுவார். பரதநாட்டியம்பார்ப்பார். குளத்தில்மீன்களுக்குபொரிபோடுவார். இசையைகேட்பார். அதுபோல்சற்றுமுன்னர்வேடியப்பன்கடைக்குசென்றுஒருஒருபுத்தகம்வாங்கிவந்துஜாலியாகபடித்துக்கொண்டிருக்கிறேன். பாதிபடித்துவிட்டேன். இடைவெளியில்இங்குவந்துபார்த்தால்எனதுஇன்பாக்ஸ், நண்பர்களின்பேஸ்புக்பதிவுகள்என்றுபற்றிக்கொண்டுஎரிகிறது.”

என்ன விநாயக முருகன் இது?  நீங்கள் உங்கள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?  நீங்கள் கொடுத்த அரைவேக்காட்டு நூலைப் படித்ததற்கு என்னைக் கிண்டல் செய்கிறீர்களா?  40 ஆண்டுகளாக வாசிப்பையே தொழிலாகக் கொண்டுள்ள ஒருவன் உங்கள் எழுத்தைப் படித்து, அதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி ஒரு காஃபி ஷாப்பில் வைத்து இரண்டு மணி நேரம் உங்களிடம் பேசுகிறேன் என்று சொன்னால் அதற்கு இதுதான் பதிலா?  நீங்கள் எப்படியாவது போய்க் கொள்ளுங்கள்.  இனிமேல் உங்கள் வழியிலேயே நான் குறுக்கிட மாட்டேன்.  என் நண்பர்களிடம் நேற்று சொன்னேன்.  ”அவரைப் பாராட்டுபவர்கள் அவருக்குக் குழி தோண்டுகிறார்கள்.  நான் தான் அவருக்கு அவருடைய பிரச்சினையை சுட்டிக் காட்டுகிறேன்.  அவர் என் மீதுதான் நன்றி பாராட்ட வேண்டும்” என்று. ஆனால் நீங்கள் பாராட்டுக்கு ஏங்குகிறீர்கள்.  உங்களைப் பாராட்ட நிறைய பேர் உண்டு.  வாழ்த்துக்கள்.    

இதற்கு இடையில் ஹமீது வேறு முகநூலில் என்னைப் பார்த்து “பயப்படுறியா குமாரு?” என்று கேட்கிறார்.  பயப்படுகிறேன் தான்.  ஒருமுறை ஹமீதிடம் ஒரு 20 வயதுப் பையன் “கவிதைன்னா என்னா அங்கிள்?” என்று கேட்டான்.  அதற்கு ஹமீது என்ன பயம் பயந்தார் தெரியுமா?  சில சமயங்களில் நீங்கள் பயந்துதான் ஆக வேண்டும்?  எதிரியைப் பார்த்து அல்ல; நண்பர்களைப் பார்த்து அல்ல.  Mediocrity-யைப் பார்த்து பயந்தே ஆக வேண்டும்.  கவிதைன்னா என்னா என்று உங்களைப் பார்த்துக் கேட்பவனைக் கண்டு நீங்கள் பயப்படுவீர்கள்தானே?

அப்படித்தான் விநாயக முருகன் எழுதிய ராஜீவ்காந்தி சாலை நாவலைப் படித்துப் பயந்தேன்.  ஒரு வாக்கியம் கூட இலக்கணமாக இல்லை.  தமிழை அவர் rape செய்திருக்கிறார்.  இலக்கணத்தை உடைக்கலாம்.  ஆனால் அதை பிரக்ஞாபூர்வமாகச் செய்ய வேண்டும்.  இலக்கணமே தெரியாமல் செய்யக் கூடாது.  ஒரு வாக்கியம் கூட வாக்கியமாக இல்லை.  இப்படி இன்னும் பத்து பேர் எழுதினால் தமிழ் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் செத்து விடும். 

நான் பேச விரும்பவில்லை என்று சொன்னதற்கு முதல் காரணம் இது. 

இரண்டாவது காரணம், நாவல் முழுவதும் template வாசகங்கள்.  முதல் பக்கத்திலேயே “அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது” என்று வருகிறது.  எத்தனை காலத்துக்குத்தான் ஐயா துக்கம் தொண்டையையே அடைக்கும்?  தொண்டைக்குக் கீழே எல்லாம் – நெஞ்சு குஞ்சு என்று போகாதா?

மூன்றாவது காரணம், எனக்கு ஜி. நாகராஜனையும் பிடிக்காது. (ஜி.என்.னை நான் புதிய பாதை சினிமா அளவுக்கே பார்க்கிறேன்.)  வண்ணதாசனையும் பிடிக்காது.  ராஜீவ்காந்தி சாலை ஜி. நாகராஜனின் உள்ளடக்கத்தை வண்ணதாசனின் மொழியில் சொல்கிறது.  ஆனால் சாரு நிவேதிதாவின் தாக்கம் உள்ளது என்ற ஒரு தோற்றத்தை அளிக்கிறது.  அது ஒரு பொய்த் தோற்றம்தான்.  அந்தப் பொய்த் தோற்றத்தை நம்பியே உத்தமத் தமிழ் எழுத்தாளர் இந்த நாவலைத் திட்டுவார் என்று எழுதினேன்.  ஏனென்றால், உ.த.எ.வுக்கு என் பெயரைக் கேட்டாலே அலர்ஜி.  அந்த அலர்ஜியில்தான் திட்டுவார் என்றேன். நான் மரியோ பர்கஸ் யோசாவைப் பாராட்டினால் அவர் யோசாவைத் திட்டுவார்.  நான் தருண் தேஜ்பாலைப் பாராட்டினால் அவர் தருணைத் திட்டுவார்.  இது இன்று நேற்று கதை அல்ல.  25 ஆண்டுகளுக்கு முன்னால் போர்ஹேஸைப் பாராட்டினேன்.  அவர் போர்ஹேஸைத் திட்டினார். அதேபோல் தான் வி.மு.வின் ராஜீவ்காந்தி சாலையில் தென்படும் என் நிழல்களைக் கண்டு இதைத் திட்டுவார் என்றேன்.  அதில் எனக்கு சந்தேகமே இல்லை.  பீகாரி ஒருத்தன் மணிமேகலை என்ற பைத்தியத்தைப் புணர்கிறான்.  அந்த ஒரு காட்சி போதும், உ.த.எ. இந்த நாவலைத் திட்டுவதற்கு.    

ஆனால் நான் இதை நிராகரிப்பதற்குக் காரணம், புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதால்.  மேலும், காரணங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்.  ஒரு அத்தியாயம் முழுக்க ஒரு குறிப்பிட்ட சாதி படு மட்டரகமாக வசை பாடப்படுகிறது.  கதாபாத்திரங்கள்தான் பேசிக் கொள்கிறார்கள் என்றாலும், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி விநாயக முருகனால் அப்படி எழுத முடியுமா?  தமிழ்நாட்டின் இரண்டு குறிப்பிட்ட சாதிகள் பற்றி அவரால் அப்படி எழுத முடியுமா?  அப்படியென்றால் இளிச்சவாயன் என்றால் மட்டும் போட்டு சாத்துவீர்களா?   

மேலும், நாவல் முழுக்க வெறும் வெறுப்பு மட்டுமே தெரிகிறது.  அன்பின் இழை கூடத் தெரியவில்லை.  ஒரு நாவலுக்கு உரிய nuances எதையுமே எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லை.  ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நாவலின் முதல் draft copy-யை எடுத்து வாசகர்களிடம் படிக்கக் கொடுப்பது அநியாயம், அராஜகம்.  போகிற போக்கில் இடது கையால் எழுதி விட்டுப் போன அஜாக்கிரதை ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.

மனுஷ்ய புத்திரன்: ஒருவருடையபுத்தகம்பிடிக்கவில்லைஎன்றால்அதைமேடையில்வந்துகிழிக்கும்அளவுதைரியம்படைத்தசாருஇன்றுஏன்ஒருஎழுத்தாளரைபுண்படுத்திவிடக்கூடாதுஎனஇவ்வளவுகஷ்டப்படுகிறார்? ( நான்கருத்துகளால்கிழிப்பதைசொல்லவில்லை. உண்மையாகவேபுத்தகத்தைஎடுத்துமேடையிலேயேடர்என்றுகிழிப்பது. நான்தான்அந்தவேலையைசெய்யச்சொன்னேன்என்றுஜெயமோகன்இன்றுவரைகுழந்தைத்தனமாகநம்பிக் கொண்டிருக்கிறார்)

புத்தகத்தைக் கிழித்தது உத்தமத் தமிழ் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனின் கவிதையில் வன்முறை வெளிப்படுவதற்குக் காரணம் அவருடைய உடல் ஊனம் என்று தன் புத்தகத்தில் முப்பது இடங்களில் சொன்னதுதான்.  இது தண்டனைக்குரிய குற்றம்.  அதனால்தான் கிழித்தேன்.

வி.மு.வும் கிட்டத்தட்ட தன் நாவலில் அதைத்தான் செய்திருக்கிறார்.  தமிழை வன்கலவி செய்திருப்பதைச் சொல்கிறேன்.  ஆனால் நான் இப்போது தியானம் அது இது என்று செய்து, ஆன்மீகத்தில் மூழ்கிக் கெட்டுப் போய் விட்டேன்.  அதனால்தான் விழாவுக்கு வரவில்லை என்று நைஸாக நழுவப் பார்த்தேன்.  ஆனால் இப்போது என் வாயைக் கிளறி விட்டு விட்டீர்கள்.  இன்னும் என்னுடைய ஆன்மீகப் பயிற்சி போதவில்லை என்று தெரிகிறது.  எவ்வளவு தூண்டினால் அமைதி காக்க வேண்டும்.  மஹா அவ்தார் பாபா எனக்கு அந்த அமைதியை நல்க வேண்டும்.

ஒரு வேண்டுகோள்.  அராத்து எழுதிய தற்கொலைக் குறுங்கதைகளுக்கும் இதேபோல் ஒரு சர்ச்சையைக் கிளப்பி விளம்பரப்படுத்த விநாயக முருகனும் மனுஷ்ய புத்திரனும் ஆவன செய்ய வேண்டும்.  அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும். 

(முடிந்தது)       

Comments are closed.