இன்னும் கொஞ்சம்… (5)

ஒற்றுப் பிழைக்கும் இலக்கணக் கொலைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏன் எழுத வருகிறீர்கள்?  நாவலில் 200 பக்கம் வரை ஒரு வாக்கியம் கூட இலக்கணத்தோடு எழுதப்படவில்லை.  ”நான் நேற்று அவனைப் பார்ப்பேன்” என்று எழுதுவது ஒற்றுப் பிழையா?  ஒற்றுப் பிழைக்காக ஒருவரை தமிழை ரேப் செய்து விட்டார் என்று எழுதுவேனா?  வயது கம்மி என்றால் மூளையுமா வேலை செய்யாது?  ஒற்றுப் பிழையைக் குறிப்பிடும் ப்ரூஃப் ரீடர் அல்ல நான்…    ஒரே இலக்கணக் கொலை.  இங்க்லீஷ் மீடியத்தில் படிக்கும் அஞ்சாம் வகுப்பு மாணவன் தமிழ் எழுதினால் எப்படித் தமிழை கொலை செய்வானோ அப்படி ஒரு கொலை நடந்திருக்கிறது.  ஒருவேளை ஜனவரி அஞ்சாம் தேதி உங்களுக்குக் கிடைக்கும் பிரதியில் இந்த இலக்கணக் கொலைகள் திருத்தப்பட்டிருக்கலாம்.  என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியின் ஒரு பக்கத்தை புகைப்படம் எடுத்துத்தான் நான் நிரூபிக்க வேண்டியிருக்கும்.  தமிழைக் கொலை செய்யுங்கள்.  எத்தனையோ பேர் எவ்வளவோ அட்டூழியங்களைச் செய்கிறார்கள்.  நான் ஒன்றும் தமிழின் காவல்காரன் அல்ல.  ஆனால் ஒற்றுப் பிழையைத்தான் சாரு சொல்கிறார் என்று ஊரை ஏமாற்றாதீர்கள் இளம் எழுத்தாளரே!  உங்களைப் போல் இன்னும் பத்து பேர் நாவல் எழுதினால் தமிழ் அழிந்து விடும்.  தமிழை ரேப் செய்திருக்கிறார் என்பதால் தான் நான் இவ்வளவு கோபப்படுகிறேன்.  சமூக விரோத நாவல் அல்ல; தமிழை அழிக்கும் நாவல்.  எப்படியாவது போங்கள்.  தமிழே எழுதத் தெரியாமல் போனதற்கு 40 வருட தமிழ் அரசியல்தான் காரணம்.  உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.

Comments are closed.