பூச்சி – 16

நேற்று முழுநாளும் பூச்சியின் பக்கம் வரவில்லை.  வர முடியாமல் வேறு ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தேன்.  இப்போது கொஞ்சம் எழுதி விட்டு அந்த வேலையின் பக்கம் போக வேண்டும்.

எல்லா உயிர்களும் பிரம்மத்தின் அம்சங்களே.  ஒரு கூழாங்கல் கூட ஏதோ ஓர் அர்த்தத்தில்தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அம்சமாக நம் காலடியில் கிடக்கிறது.  இது பற்றிய ஒரு வசனத்தை ஃபெலினியின் La Strada (தெரு) படத்தில் காணலாம்.  அப்படியானால் கூழாங்கல்லும் வைரமும் ஒன்றா?  என்னைப் பொறுத்த வரை ஒன்றுதான்.  ஏதோ எழுதுவதற்காக பந்தாவாக சொல்லவில்லை.  எனக்கு ஒன்றுதான்.  எனக்கு மட்டும் அல்ல; தன் சொத்தையெல்லாம் விற்று இலக்கியப் பத்திரிகை நடத்திய, எந்தப் பிரதிபலனும் இல்லாமல் எழுதிய, எழுதிக் கொண்டும் இருக்கின்ற அத்தனை தமிழ் எழுத்தாளர்களுக்கும் கூட அப்படித்தான்.  ஆனால் கூழாங்கல்லுக்கும் வைரத்துக்குமான வித்தியாசம், கூழாங்கல் எங்கே பார்த்தாலும் இறைந்து கிடக்கிறது.  வைரம் அபூர்வமாக இருக்கிறது.  இந்த அபூர்வத்தன்மையினால்தான் அதன் விலையும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறது.

எத்தனையோ எழுத்தாளர்கள் தமிழில் உண்டு.  தமிழ் மொழி அளவுக்கு இத்தனை பிரமாதமான எழுத்தாளர்கள் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை.  அங்கே வாசகர் எண்ணிக்கை அதிகம்.  இங்கே எழுத்தாளர் எண்ணிக்கை அதிகம்.  ஒரு காலகட்டத்தில் எந்த அளவு ருஷ்ய எழுத்தாளர்களின் கூட்டம் நட்சத்திரக் கூட்டத்தைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்ததோ அந்த அளவு எழுத்தாளர்கள் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே தமிழில் இருந்தார்கள்.  இப்போது அந்த அளவுக்கு இல்லை என்றாலும் மற்ற மொழிகளை ஒப்பிடும்போது தமிழில் அதிகம்தான். ஒரு புத்தக விழாவின்போது எனக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த வண்ணநிலவனைப் பார்த்து காயத்ரியிடம் அறிமுகப்படுத்தி வைத்து லெஜண்டரி ரைட்டர் என்று சொன்னேன்.  வண்ணநிலவன் என்னை அதிர்ச்சியோடு பார்த்தார்.  எஸ்தர் என்ற கதையையும் அதுபோல் எத்தனையோ கதைகளையும் எழுதிய ஒருவரை லெஜண்டரி என்று சொல்வதில் என்ன தப்பு?  மெக்ஸிகோவின் யுவான் ருல்ஃபோவும் வண்ணநிலவனும் எனக்கு ஒன்றுதான்.  இப்படி வண்ணநிலவன் ஒருத்தர் மட்டும் அல்ல; அசோகமித்திரன் இருக்கிறார்; இந்திரா பார்த்தசாரதி, சா. கந்தசாமி, ந. முத்துசாமி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  இத்தனை எழுத்தாளர்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது அது ஏன் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என்று மூவரை மட்டும் தனியாக வைத்துப் பேசுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?  இந்த மூவரும்தான் இளைஞர்களோடு உரையாடுகின்றனர்.  இந்த மூவரும்தான் சமகாலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.  இந்த மூவரும்தான் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் உருவாக்குகிறார்கள். இப்படி இருந்தவர் பாரதி.  பிறகு ஜெயகாந்தன்.  பிறகு சுந்தர ராமசாமி.  அவருக்குப் பிறகு இந்த மூவர்.  சு.ரா. காலத்தில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தார்கள்.  ஏன், அசோகமித்திரனின் பக்கத்தில் வருவது கூட சு.ரா.வின் படைப்பில் சாத்தியம் இல்லை.  ஆனால் அகிலனுக்கு ஞானபீடம் கொடுத்தால் அசோகமித்திரன் ”சரி, விடுங்கோ, போனால் போகிறது” என்று பம்மி விடுவார்.  ஆனால் சு.ரா. அகிலனை மலக்கிடங்கு என்று எழுதினார்.  அந்த வார்த்தைகளின் மூலம் சு.ரா. என் காலத்து இளைஞர்களின் மனதில் ஒரு பொறியை ஏற்றி வைத்தார்.  அந்தப் பொறிதான் இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.  இப்படியாக சு.ரா. தன் வாழ்நாள் முழுவதும் இளைஞர்களோடு உரையாடிக் கொண்டே இருந்தார்.  இது வெறும் இளைஞருடனான உரையாடல் மட்டுமல்ல; ஒரு எழுத்தாளர் தன் சமகாலத்தோடு நிகழ்த்தும் உரையாடல்.  இதை ஃப்ரெஞ்ச் சமூகத்தில் சார்த்தரும், பிறகு ஃபூக்கோவும் அதற்குப் பிறகு ஃப்ரெஞ்ச் பெண்ணியவாதிகளும் நிகழ்த்தினார்கள். 

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் காஃப்காவின் மெட்டமார்ஃபஸிஸ் குறுநாவல் பற்றி எழுதியிருந்தேன்.  அது பற்றி எனக்கு ஒரு கடிதம் வந்தது.  எழுதியவர் அர்ஜுன்.  சென்ற ஆண்டு வரை மாணவர்.  இப்போது திரைத்துறையில் பணி.  எத்தனை வயது இருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம்.  அவர் கடிதம்:

I’ve come to know from your blog post that you have purchased Susan Bernofsky’s translation of Kafka’s Metamorphosis.   I’d also request you to have a take on Joachim Neugroschel’s translation which is considered superior , as Joachim consciously sacrifices his perfect sentences in order to bring across the essence of the text. Joachim has qouted “I’ve suspired and festinately drowned in German just like Kafka”.  But Susan’s translation is equally good , she attends to some important trivial like: both the adjective ungeheuer (meaning “monstrous” or “huge”) and the noun Ungeziefer are negations—virtual nonentities—prefixed by un.”  Ungeziefer, a term from Middle High German, describes something like “an unclean animal unfit for sacrifice,” belonging to “the class of nasty creepy-crawly things.” It suggests many types of vermin—insects, yes, but also rodents. “Kafka,” writes Bernofsky, “wanted us to see Gregor’s new body and condition with the same hazy focus with which Gregor himself discovers them.”

I’m awaiting eagerly for your appraisal of Kafka’s works…..

P.s. Your books have some of the finest translations in English , sir.

இப்போது நான் Bernofskyயின் மொழிபெயர்ப்பை முடித்து விட்டு Joachim Neugroschel-இன் மொழிபெயர்ப்பையும் படிக்க இருக்கிறேன்.  யோவாக்கிம் ஃப்ரெஞ்ச், ஜெர்மன், ஆங்கிலம், இத்தாலி, ருஷ்யன், யிட்டிஷ் போன்ற பல மொழிகளில் நிபுணராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார்.    

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai