மாயா இலக்கிய வட்டம் – ஞாயிறு சந்திப்பு

Maya Ilakkiya Vattam is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Maya Ilakkiya Vattam’s Zoom Meeting
Time: May 10, 2020 06:00 PM Singapore

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/77904041480…

Meeting ID: 779 0404 1480
Password: 015564

சென்ற வாரம் போலவே நாளை ஞாயிறு மாலை இந்திய நேரம் மூன்றரை மணிக்கு, சிங்கப்பூர் நேரம் ஆறு மணிக்கு நான் உரையாற்றுகிறேன். உரையைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறும். முதல் ஒரு பத்து நிமிடம் குறுநாவலின் வரலாறு. அதற்கடுத்து புதிய எழுத்தின் சவால்கள் என்பது குறித்து பேசுவேன். Challenges of new narrative அல்லது Towards a new narrative என்பதுதான் தலைப்பு. நெரேட்டிவ் என்பதற்குத் தமிழில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. டிஸ்கோர்ஸ் என்பதை சொல்லாடல் என்று சொல்வதுண்டு. நெரேட்டிவ் என்பதற்குத் தெரியவில்லை. அதனால் புதிய எழுத்தின் சவால்கள் என்று வைத்துக் கொண்டேன். சந்திப்பு பற்றிய என்னுடைய முந்தைய அறிவிப்பில் Turin Horse படத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் உரையில் இலக்கியத்தை விட சினிமா பற்றி நிறைய பேசுவேன் என்று நினைக்கிறேன். அல்லது பேச்சு எங்கே இட்டுச் செல்லுமோ அங்கே சஞ்சரிக்கலாம். ஏன் சினிமா என்றால், சினிமாவிலிருந்து இலக்கியமும் இலக்கியத்திலிருந்து சினிமாவும் பெற்றுக் கொள்ளவும் கொடுக்கவும் அதிகம் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது பொருந்தாது. லெனின், செழியன், வெற்றிமாறன், ராம், தமிழ் ஸ்டுடியோஸ் அருண் போன்று விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே சினிமாவுக்கும் இலக்கியத்துக்குமான தொடர்பு இருந்து கொண்டிருக்கிறது. அதிலும் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், உதாரணமாக உதவி இயக்குனர்கள் இலக்கியத்தின் பக்கமே திரும்புவதில்லை. அம்மாதிரி நண்பர்கள் தயவுசெய்து நாளை நடக்கும் இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம், இந்தச் சந்திப்பில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் உங்களுக்கோ சினிமாவுக்கோ அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. எனவே இலக்கியத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். நான் ஏற்கனவே குறிப்பிட்ட கதைகளைப் படித்து சினிமாக்களைப் பார்த்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. வெறுமனே வந்து கேட்டுக் கொண்டிருக்கலாம். இது என்ன பரீட்சைக் கூடமா? அப்படி ஒன்றும் இல்லை. படித்திருந்தால் நான் பேசுவது இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் புரியும். முடிந்தால் Turin Horse பாருங்கள். பீச் கதையைப் படியுங்கள். படம் பார்க்க நேரம் இல்லை என்றால், பீச் கதையையாவது படியுங்கள். ஐந்து நிமிடம்தான் ஆகும். இதை முடிந்த அளவு முகநூலில் பகிருங்கள்.