சில குறிப்புகள்

கடைசியில் கொடுத்துள்ள விபரங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  மீட்டிங் ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் அதிலேயே உள்ளன.  என் பேச்சைப் பதிவு செய்த விடியோவை மறுநாள் யூட்யூபில் போடுவது பற்றி ஸ்ரீராம் என்னோடு பேசினார்.  பேசுகின்ற நேரத்தில் கலந்து கொள்பவர்கள் நூறு பேர்தான் என்றாலும் மறுநாள் அதை யூட்யூபில் இரண்டாயிரம் மூவாயிரம் பேர் பார்க்கிறார்கள்; அது முக்கியம் இல்லையா, எழுத்து ஜனநாயகப்படுத்தப்பட வேண்டாமா, பலரையும் சென்றடைய வேண்டாமா, மட்டுமல்லாமல் நீங்கள் தரும் ஞானம் வெறும் நூறு பேருக்கு மட்டும்தானா என்றெல்லாம் ஸ்ரீராம் அபிப்பிராயப்பட்டார்.  கருத்து ரீதியாக அவர் சொல்வதில் எனக்கு நூற்றுக்கு நூறு உடன்பாடு உண்டு.  ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னே அரசர்களின் சபைகளில் அரசர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுக் கொண்டு போனார்களே சங்கப் புலவர்கள், அவர்களின் வாரிசாக நான் யோசிக்கிறேன்.  ஔவைதான் என்று நினைக்கிறேன், அரசன் அவளுக்குப் பரிசு தராமல் விரட்டி விடுகிறான்.  வாயிற்காப்போனிடம் அரசனை நிந்தனை செய்து பாடி விட்டுப் போகிறாள்.  அந்தக் கஞ்ச அரசனின் மகன் தான் பெரிய வள்ளலாக இருந்தான் என நினைக்கிறேன்.   பெயர்கள் ஞாபகம் இல்லை.  இப்போது போய் அதில் ஆராய்ச்சி செய்யவும் நேரம் இல்லை.  ஆனால் விஷயம் இதுதான்.  ஞானம் எல்லோரையும் சென்றடையத்தான் வேண்டும்.  ஆனால் நமது entertainersக்கு – நம் பொழுதை ஜாலியாகக் கழிக்கும் மிமிக்ரி தாமு, கஞ்சா கருப்பு, விஜய், அஜித், கமல் போன்றவர்களுக்குக் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து விட்டு, யூட்யூபில் இலவசமாகக் கேட்காமல் ஒரு பத்து ரூபாய் கொடுக்கலாமே என்பதுதான் என் கருத்து.  2000 பேர் பார்க்கிறார்கள், எல்லோருமே பத்து ரூபாய் கொடுக்க மாட்டார்கள்.  ஒரு நூறு பேர் நூறு ரூபாய் கொடுத்தால் பத்தாயிரம் ஆயிற்றே?  ஒரு மாத காலம் உழைத்துப் பேசுபவனுக்கு அது ஒரு சன்மானம் இல்லையா?  மீண்டும் சொல்கிறேன், மூவாயிரம் ஆண்டுப் பாரம்பரியத்தில் நான் தான் முதல்முதலாகக் கூச்சத்தை விட்டு இதைச் செய்கிறேன்.  கூச்சத்தை விட்டு என்பதை கவனியுங்கள்.  பணம் என்றதும் எல்லோரும் கூசுகிறார்கள்.  ஏனென்றால், எல்லோரும் பணத்தைப் புனிதமான விஷயமாக, ஒரு பெண்ணின் கற்பைப் போல் பார்க்கிறார்கள்.  பணமா ஐயோ என்று பதறுகிறார்கள்.  அதாவது, பணத்தைக் கொடுப்பதற்கு அல்ல; வாங்குவதற்குக் கூட.  நாம் என்ன லஞ்சமா வாங்குகிறோம்? 

ஆனால் ஸ்ரீராம் சொல்வது போல் பணம் வாங்கிக் கொண்டு பேச்சு அடங்கிய ஒலி/ஒளித் தகட்டை எப்படிக் கொடுப்பது,  யூட்யூபில் நம் பேச்சைப் போடுவதற்கு எப்படிக் கட்டணம் வசூலிப்பது என்ற தொழில்நுட்ப விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது.  சீனியைத்தான் கேட்க வேண்டும்.  இது விஷயத்தில் என்னுடைய கருத்து மிகவும் எளிமையானது. புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்குகிறோம்.  ஒன்றரை மணி நேரப் பேச்சும் அதைப் பேசுபவனின் intellectual property தானே? அதையும் ஒரு குறைந்த விலை கொடுத்து வாங்கலாமே?  எனக்கு தஸ்தயேவ்ஸ்கி பற்றிய எஸ்.ரா.வின் ஒன்றரை மணி நேரப் பேச்சை இலவசமாகக் கேட்டதே பெரும் உறுத்தலாக இருக்கிறது.  ஆடியோ புத்தகங்கள் வருகிறது இல்லையா, அதைப் போல இந்தப் பேச்சும் உரையாடலும்.  இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும் ஸ்ரீராம்.  35 ஆண்டுகளாக இலவசமாக எழுதிக் கொண்டிருந்தேன் இல்லையா, இப்போது அறுபத்தாறாவது வயதில்தானே கட்டணம் வைத்திருக்கிறேன்? 

அதனால் என்னைக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.  மேலும், சினிமாவில் சம்பாதித்தால் எழுத்தையும் பேச்சையும் இலவசமாகவே கொடுக்கலாம்.  சினிமாவில் நுழைய நிறைய சமரசங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.  ஜெயமோகனுக்கோ எஸ்.ரா.வுக்கோ அந்தச் சூழ்நிலையே வரவில்லை.  அதாவது, அவர்கள் சினிமாவை விமர்சிப்பவர்கள் அல்ல.  அதனால் எந்த சிக்கலும் இல்லை.  நானோ குருதிப் புனலிலிருந்து கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.  சரி, உலக இலக்கியம் தெரிந்த, ”இளையராஜாவும் சாரு நிவேதிதாவும் என்னை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; அந்த உரிமையை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று வெளிப்படையாகப் பத்திரிகையில் பேட்டி கொடுத்த மிஷ்கினுடனாவது நட்புடன் இருப்போம் என்று பார்த்தேன்.  ஆனால் சமீபத்தில் வந்த மிஷ்கினின் படத்தால் ரொம்பவே மன உளைச்சலாகி எதுவுமே திட்டாமல், விமர்சிக்காமல் வெறுமனே குட்பை மிஷ்கின் என்று மிகுந்த மன வருத்தத்தோடு ஒரு மெஸேஜ் அனுப்பி முடித்துக் கொண்டேன்.  பிறகு என்ன, கதை, காட்சி எல்லாவற்றையுமே இரண்டு மூன்று படங்களிலிருந்து உருவிப் போட்டு படம் எடுப்பவரிடம் நான் எப்படி நட்பு பாராட்ட முடியும்?  அது அறம் அல்லவே?  நேர்மையை என்னுடைய வாழ்க்கையில் மட்டும்தான் கடைப்பிடிப்பேன்; என் நண்பர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன் என்று இருக்க முடியுமா?  அது அறமா?  மோசமான, படு மோசமான படம் எடுக்கலாம், தவறே இல்லை.  திருடி எடுக்கக் கூடாது இல்லையா?  அதுவும் இந்தக் காலத்தில்?  படம் வெளிவந்த அடுத்த கணமே புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள்.  இப்படிப்பட்ட காலகட்டத்தில் திருட வேண்டுமானால் வெறும் திமிர் மட்டுமேதான் காரணம்.  நான் சினிமாக்காரன், நான் என்ன செய்வேன்.  என்னைக் கேட்க எந்தக் கொம்பனாலும் முடியாது.  அப்படிப்பட்டவர்களோடு என்னால் பழக முடியாது; எவ்வளவுதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும். 

இந்தக் காரணத்தினால்தான் என்னால் சினிமாவிலும் எழுதி சம்பாதிக்க முடியாது.  மேலும், என்னுடைய இயல்புக்கும் சினிமா ஒத்து வராது.  சொல்லுங்க மிஸ்டர் கமல் என்றுதான் ஆரம்பிப்பேன்.  அப்படிப்பட்ட வார்த்தையை அவர் வாழ்நாளிலேயே கேள்விப்பட்டிருக்க மாட்டார்.  சார் என்றுதான் அழைக்க வேண்டும்.  நமக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது.  கோடியே கொடுத்தாலும் வராது.  ஏய்யா, அவர் என்ன என்னை சார் என்கிறாரா என்று கேட்பேன்.  நான் எதற்கு ஒருவரை சார் என்று அழைக்க வேண்டும்?  ரஜினியையும் சொல்லுங்க மிஸ்டர் ரஜினிதான்.  பாலு மகேந்திராவையே பாலு என்றுதான் அழைப்பேன்.  இது அகந்தையோ மரியாதையற்ற செயலோ அல்ல.  சமமான நபர்களை அவர்களின் அந்தஸ்துக்காக சார் போடுவதில்லை.  இப்படியெல்லாம் இருக்கும் ஒரு ஆள் தங்களை தேவபுத்திரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சினிமாக்காரர்களோடு ஒரு நிமிடம் பேசுவதே கடினம்.  அதனால்தான் நம்முடைய எழுத்து மற்றும் பேச்சு உலகோடு நிறுத்திக் கொள்வது.  அதனால்தான் இதில் கொஞ்சம் கறாராகவே இருந்து கொள்வது.  விளக்கி விட்டேனா ஸ்ரீராம்? 

முன்பு நான் மனோகரன் சொன்னதைக் கேட்டு எத்தனை பேர் வேண்டுமானாலும் ஸூமில் பங்கு பெறலாம் என்று சொன்னது தவறு.  நூறு பேர்தான் கலந்து கொள்ள முடியும்.  எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ள கட்டணம் கட்ட வேண்டும்.  அது நம்மால் முடியாது.  இந்தத் தகவலை மனோ சொல்லவில்லை.  இனிமேல் எனக்குத் தகவல் சொல்பவர்கள் முழுமையாகச் சொல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.     

31-ஆம் தேதி சந்திப்போம்.  கீழே விபரங்கள்:

Topic: Session with Charu Nivedita
Time: May 31, 2020 06:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5659890949?pwd=ZzZJVE94Z1BwcDN1cW1MZkhLMklodz09

Meeting ID: 565 989 0949
Password: 123654
One tap mobile
+19292056099,,5659890949#,,1#,123654# US (New York)
+13017158592,,5659890949#,,1#,123654# US (Germantown)

Dial by your location
        +1 929 205 6099 US (New York)
        +1 301 715 8592 US (Germantown)
        +1 312 626 6799 US (Chicago)
        +1 669 900 6833 US (San Jose)
        +1 253 215 8782 US (Tacoma)
        +1 346 248 7799 US (Houston)
Meeting ID: 565 989 0949
Password: 123654
Find your local number: https://us02web.zoom.us/u/kdDFd7TYBg

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai