பூச்சி 102

நேற்று சீனியிடம் பேசினபோது இந்த அம்மா விஷயம் பற்றி ஒருசில அவதானிப்புகளைச் சொல்லி, எனக்கும் ஒருசில விஷயங்களை ஞாபகப்படுத்தினார்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் மூலவியாதியால் மிகவும் அவஸ்தைப் பட்டேன்.  அதற்கு அவந்திகா ஒரு கை வைத்தியம் பண்ணினாள்.  அப்போது நாங்கள் சின்மயா நகரில் வசித்தோம்.  மூலத்துக்குப் பன்றிக்கறி மருந்து.  அதிலும் அதில் உள்ள வார் என்ற பகுதி.  பன்றிக்கு தோலிலிருந்து உள்ளே சதைப் பகுதிக்குப் போவதற்கு முன்னால் இடையில் பட்டையாக ஒரு பகுதி கொழுப்பாக இருக்கும்.  அதுதான் வார்.  அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டால் மூலம் போகும்.  பன்றிக் கறி எங்கே கிடைக்கும்?  இப்போது போல் அலங்காரமாக வெண் பன்றி இறைச்சியெல்லாம் இங்கே சாந்தோம் பகுதியில்தான் உண்டு.  சின்மயா நகர் அப்போது ஒரு சுடுகாடு.  இட்லி தோசைக்கே வழியில்லாத பகுதி.  அங்கே எங்கே பன்றிக் கறிக்குப் போவது?  போனாள்.  கோயம்பேடு அருகே ஒரு குடிசைப் பகுதியில் ஒருத்தர் கருப்புப் பன்றிக் கறி விற்பார். அங்கே போய் வாங்கி வருவாள்.  வாரா வாரம்.  நான் போனால் என்னை ஏமாற்றி விடுவார்கள் அல்லது நான் சரியாக வாங்க மாட்டேன் என்று அவளே போவாள்.  மீன் வாங்கவும் அவள்தான்.  வாரா வாரம் சமைத்துக் கொடுப்பாள்.  மீன் வாங்கி கருவாடு போட்டதெல்லாம் ஒரு விஷயம் அல்ல, பன்றிக் கறியை தானே சேரிக்குப் போய் வாங்கி சமைத்ததை விட.  இது பற்றி முன்பு எப்போதோ எழுதியிருந்ததால், நான் மறந்து போனதை, சீனி எடுத்துக் கொடுத்தார்.  இது அல்ல விஷயம்.  இதே விஷயத்தை – இதே பன்றிக் கறியை – இதே அவந்திகா அய்யங்காராக இல்லாமல் ஒரு மாற்று மதத்தைச் சேர்ந்தவளாக இருந்திருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும்?  அவந்திகாவையும் என்னையும் கொன்றிருப்பார்கள்.  முதலில் காட்டிக் கொடுத்து ஆய்வுக் கட்டுரை எழுதுவது ராஜன் குறை போன்ற ஆய்வாளராக இருக்கும்.  ”பாருங்கள், எப்படிப்பட்ட ஒடுக்குமுறையைச் செய்கிறார் சாரு நிவேதிதா” என்று.  அல்லது, அவந்திகா ஒரு குறிப்பிட்ட இந்து சாதியைச் சேர்ந்தவளாக இருந்திருந்தாலும் இரண்டு பேரும் கொலைதான்.  பன்றிக் கறிக்காக அல்ல.  அந்த சாதிக்கு ஒவ்வாத ஏதோ ஒரு வேலையை அவள் எனக்காகச் செய்தால்.  செய்திருந்தால்.  ஆனால் ஒரு பிரபல எழுத்தாளனின் அய்யங்கார் மனைவி கருவாடு செய்ததற்கும் பன்றிக் கறி சமைத்ததற்கும் அவளுடைய வீட்டில் எதிர்வினை காட்டவில்லை.  அந்த சமூகமும் எந்த எதிர்வினையும் செய்யவில்லை.  அப்படியே கடந்து போய் விட்டார்கள்.  அதனால்தான் அவர்கள் சுந்தர் பிச்சைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  நாம் கீழே கிடந்து நக்கிக் கொண்டிருக்கிறோம்.  இதை மட்டும் சீனி சொல்லவில்லை.  நானாக சேர்த்துக் கொள்கிறேன்.  இப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வந்தால் – அதுவும் அவள் தன் குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு என்னையே நம்பி வருகிறாள் – அவள் குடும்பத்தில் என்னை நம்பவில்லை (ஆரம்பத்தில்) – அவளை என் அம்மா அவமானப்படுத்தினால் அம்மா என்பதற்காக நான் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? 

சாஸ்திரங்கள் அப்படித்தான் சொல்கின்றனவா?  நான் சில உதாரணங்களைத் தருகிறேன்.  எல்லாமே ஏற்கனவே எழுதியதுதான்.  அசோகமித்திரனின் இருவர்.  வாலா இளம் வயதில் விதவை.  அம்மா வீட்டுக்கு வருகிறாள்.  வலுக்கட்டாயமாகக் கொண்டு வரப் படுகிறாள்.  மாமியார் வீட்டில் சௌக்கியமாக இருக்கலாம்.  ஆனால் அது வழக்கம் இல்லை.  அம்மா வீட்டில் மொட்டைப் பாப்பாத்தி.  யார் எதிரிலும் வந்தால் கூட அபசகுனம்.  பொழுது புலர்வதற்குள் குளித்து விட்டு அடுக்களைக்குள் புகுந்து விட வேண்டும்.  ஒருநாள் அவள் வீட்டு விலக்காக இருக்கும்போது அவளை அடி அடி என்று அடித்து ஜன்னி வரவழைத்துக் கொன்று விடுகிறான் அண்ணன்.  இதுதான் இந்து சம்பிரதாயம்.  குறிப்பாக பிராமண சம்பிரதாயம்.  செல்லப்பாவின் ஜீவனாம்சமும் இதைத்தான் சொல்கிறது.  அதில் வரும் சுசீலாவும் இளம் வயதில் விதவையாகிறாள்.  இளம் வயதிலா?  மணம் ஆகி நாலே மாதத்தில்.  அதிலும் இந்து சம்பிரதாயப்படி அம்மா வந்திருக்கும் நேரத்தில் வயல்காட்டுக்குப் போன கணவன் கிணற்றில் தவறி விழுந்தோ என்னவோ செத்துப் போனான்.  அவனுடைய உடலைக் கூட அவள் பார்க்கவில்லை.  காட்டில் செத்தவனை வீட்டுக்கு எடுத்து வரக் கூடாது என்று அங்கேயே அப்போதே எரித்து விடுகிறார்கள்.  அவனுடைய முகத்தைக் கூட அவள் சரியாகப் பார்த்திருக்கவில்லை.  அவனோடு ஒரு வார்த்தை கூட அவள் பேசியதில்லை.  அவள் மாமியார் அவளைத் தன் பெண்ணே போல் பார்த்துக் கொண்டாள்.  வீட்டுச் சாவியையே அவள் கையில் கொடுத்து விட்டாள் மாமியார்.  மாமனாரும் அப்படியே.  மைத்துனப் பையன் ஒரு சிறுவன்.  அவளிடம் ஒரு குழந்தையைப் போல் ஒட்டிக் கொண்டான்.  இத்தனை பேரோடும் அவளை ஒண்ட விடாமல் அவள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அவள் தன் சொந்தத் தந்தை போல் மதித்த மாமனர் மீது ஜீவனாம்சம் வழக்கு போட வைக்கிறான் அவள் அண்ணன்.  இருவர் கதையில் அண்ணன் வாலாவை அடித்துக் கொல்கிறான்.  ஜீவனாம்சத்தின் அண்ணன் அவளை வீட்டிலேயே வைத்திருந்து சித்ரவதை.  அதிர்ச்சியிலேயே மாமனாரும் போய் விடுகிறாள்.  அவளால் ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை.  கடைசியில்தான் கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டு மாமியாரிடம் போகிறாள்.

லாசராவின் பாற்கடலும் இப்படித்தான்.  ந. முத்துசாமியின் நீர்மை பயங்கரம்.  ஐந்து வயதில் திருமணம்.  பையனுக்குப் பத்து வயது இருக்கும்.  பதினோரு வயதில் பையன் சாகிறான்.  ஆறு வயதுக் குட்டிக்கு மொட்டை போட்டு மொட்டைப் பாப்பாத்தி ஆக்கி அடுக்களைக்குள் முடக்கி விட்டார்கள்.  95 வயது வரை அவள் நீரிலேயே கிடந்தாள் என்பதுதான் நீர்மை கதை.  எப்பேர்ப்பட்ட ஒடுக்குமுறை.  இதையெல்லாம் சாஸ்திரம் செய்தது என்றால், அந்த சாஸ்திரத்தைத் தூக்கிப் போட்டுக் கொளுத்துங்கள். 

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களை மாமியார் வீட்டில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள்.  வரதட்சணை போதவில்லை என்று.  சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்ட ஒரே காரணத்தினால் அது மட்டுப்பட்டது.  எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்.  சாருஆன்லைனில் எழுத ஆரம்பித்த புதிது. அப்போது அமெரிக்காவிலிருந்து பல கடிதங்கள் வரும்.  அதில் ஒரு கடிதத்தில் ஒரு பெண் எழுதியிருந்தார்.  அவருடைய மாமியார் வந்ததும் ஆறு மாதக் கைக்குழந்தையோடு இரவு பத்து மணி அளவில் வீட்டை விட்டு விரட்டி விட்டானாம்.  கையில் ஒரு டாலர் கூட இல்லை.  கையில் போன் இல்லை.  கையில் பாஸ்போர்ட் இல்லை.  எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டான்.  அவன் ஐஐடியில் கோல்ட் மெடலிஸ்ட்.  கொடுமை என்னவென்றால், இந்தப் பெண்ணும் ஐஐடியில் படித்தவர்.  ஆனால் வாழ்க்கை பற்றி எதுவுமே தெரியவில்லை.  அங்கெல்லாம் டொமெஸ்டிக் வயலன்ஸ் என்று போலீஸை அழைத்தால் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவார்களே, உங்கள் கணவரையும் மாமியாரையும் கைது பண்ணி உள்ளே தள்ளி விடுவார்களே என்றேன்.  அது கூட அந்தப் பெண்ணுக்குத் தெரியாதாம்.  கையில் போனும் இல்லை.  அந்த இரவில் நடுக்கும் குளிரில் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்தே பக்கத்து அபார்ட்மெண்ட்டில் இருந்த தன் தோழி வீட்டுக்கு வந்து எப்படியோ இந்தியா வந்து சேர்ந்து எனக்குக் கடிதம் எழுதினார்.  இப்படி நூற்றுக் கணக்கான கடிதங்கள்.  பேச்சுக்கள்.  இப்படிப்பட்ட கதையைச் சொல்லாத எந்தப் பெண்ணையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.  அவந்திகா உட்பட.  அவளுடைய முதல் கணவன் அப்படித்தான்.  குழந்தை கையில் இல்லை.  வயிற்றில்.  நிறைமாத கர்ப்பிணியை உதைத்து வீட்டுக்கு வெளியே தள்ளி விடுவான்.  மணிக் கணக்கில் அங்கேயே நிற்பதைப் பார்த்து எதிர்வீட்டுக்கார பாயம்மா வந்து தம்பி தம்பி என்று கெஞ்சிக் கூத்தாடி அவளை உள்ளே ஏற்கச் செய்வாராம்.  ”என்ன காரணம்?” என்று கேட்டால், அலுவலகத்திலிருந்து தாமதமாக வீட்டுக்கு வந்தது என்பாள்.  ஏன் தாமதம்?  மவுண்ட் ரோட்டிலிருந்து அரும்பாக்கத்துக்கு நடக்க வேண்டும்.  பஸ்ஸில் போக காசு இருக்காது.  ஏன், போஸ்டாஃபீஸில்தான் வேலை பார்த்தாய்?  அந்த சம்பளப் பணம்?  அதை அவன் எடுத்துக் கொள்வான்.  ஆனாலும் அவன் என் அப்பாவை விடப் பரவாயில்லை.  ஐயோ ஏன்?  சின்மயா நகர் அரும்பாக்கத்திலிருந்து இன்னும் இரண்டு கிலோமீட்டர் அதிகம்.  அதனால் வீட்டுக்குப் போக இன்னும் நேரம் ஆகும்.  எவண்ட்டடி படுத்துட்டு வர்றே தேவ்டியா முண்டேன்னு கேட்டு நடுரோட்டிலேயே போட்டு அடிப்பார் அப்பா. இவன் பரவாயில்லை. 

ஒருநாள் அவளுடைய பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவளுடைய தலைமுடி இடுப்புக்குக் கீழே தொங்குவதைப் பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டேன்.  நான் பார்த்த காலத்தில் அவள் ஆங்கிலோ இந்தியர்களைப் போல் பாப் முடி வைத்திருந்தாள்.  அவள் சொன்ன பதில்: கணவன் இறந்ததும் மொட்டை அடித்தார்கள்.  இனிமேல் முடியே வேண்டாம் என்று இருந்து விட்டேன். 

இப்படி ஆயிரம் பக்கங்களோடுதான் என் அம்மா முன் அவந்திகாவோடு நிற்கிறேன்.  என் அம்மா அவந்திகாவை பாப்பாத்தி என்கிறார்கள்.  ரொம்பத் தந்திரமாக அவமதிக்கிறார்கள்.  இனிமேல் சாகும் வரை முகத்தில் முழிப்பதில்லை என்றுதான் இருந்தேன்.  ஏழு ஆண்டுகள்.  இருக்கிறார்களா செத்தார்களா என்று கூடத் தெரியாது.  போவதாகவும் இல்லை.  பிறகு ஒரு நண்பர்தான் என் மனதை மாற்றி போகச் செய்தார்.  என்னை நம்பி வந்தவள் எனக்கு என் அம்மாவை விட முக்கியம்.  சாமானை ஆட்டிக் கொண்டு வலம் வரும் அத்தனை ஆம்பிளை அயோக்கியனும் இப்படி நினைத்திருந்தால் இன்று பெண் இனம் இந்த அளவுக்குத் துன்பப்பட்டிருக்காது.  திரும்பவும் நீங்கள் எல்லோரும் அன்னையர் தினத்தன்று அம்மா பற்றி நான் எழுதிய பதிவைப் படித்துப் பாருங்கள்.  அம்மாக்களால்தான் இந்தியாவில் பெண்கள் இத்தனை துயரங்களை அனுபவிக்கிறார்கள்.  ஆண் குழந்தைகளை கிரிமினல்களாக வளர்ப்பது அம்மாக்கள்தான்.  குடும்பத்திலிருந்துதான் ஒரு ஆண் மகன் பெண் என்பவள் தனக்கு அடிமை என்பதைக் கற்றுக் கொள்கிறான்.  அப்பா அவளை வேலைக்காரியாக நடத்துவதைப் பார்த்து பயின்று அவனும் அப்படி நடத்துகிறான்.  அதை அவள் ஊக்குவிக்கிறாள்.  ஆம்.  அதை அவள் ஊக்குவிக்கிறாள்.  அதிலிருந்து ஆரம்பிக்கிறது ஒரு சமூக விரோதியின் வளர்ச்சி.  வெளியில் வந்தும், சமூக வெளியில் வந்தும் அவன் எல்லாப் பெண்களையும் தன் அம்மாவைப் போலவே வேலைக்காரியாகப் பார்க்கிறான்.  ஆனால் அம்மாவோடு காமம் கொள்ள முடியாது.  வெளிப் பெண்களோடு அது சாத்தியம்.  அழைக்கிறான்.  மறுத்தால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்து.  இல்லாவிட்டால் படித்தவன் வேறு மாதிரி செய்கிறான்.  வெளியில் வந்து பணி புரியும் எத்தனை நூற்றுக் கணக்கான பெண்கள் என்னிடம் கதை கதையாய்ச் சொல்கிறார்கள்.  சென்ற ஸூம் மீட்டிங்கில் கூட ஒரு பெண் சொன்னார்.  மீட்டிங்கின் போதே ஒரு தெரியாத ஆள் வந்து அவரிடம் ஹாய் என்று சொல்லியிருக்கிறார்.  எதற்கு?  அந்தப் பெண் அடுத்த சந்திப்புக்கு வருவாரா?  இது அத்துமீறல்தானே?  இல்லையடா கண்ணே, அது உன் உரிமை என்ற கருத்து அவனுக்கு அவன் அம்மா மூலம் சிறு பிராயத்திலிருந்தே ஊட்டுவிக்கப்படுகிறது. 

அதனால்தான் அம்மா அவந்திகாவை அவமதித்த போது நான் அம்மாவை நிராகரித்தேன்.  என்னை நம்பி வந்த பெண்ணை நான் ஒருபோதும் கண் கலங்க வைக்கலாகாது.  அதுதான் என் தர்மம்.  அதுதான் நான் கற்ற சாஸ்திரம்.  மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும் எரித்துக் கொளுத்தப்பட வேண்டியவை.  ஏனென்றால், நான் என் அம்மாவின் முன்னே அசோகமித்திரனின் வாலாவாக, செல்லப்பாவின் சுசீலாவாக, முத்துசாமியின் மொட்டைப் பாப்பாத்தியாக, லாசராவின் கைம்பெண்ணாக நின்று கொண்டிருக்கிறேன்.  நெருப்பு போல்.  பொசுக்கி விடுவேன்.  ஒரு வாக்கியத்தில் சொல்கிறேன்.  கலைஞனிடம் சாமான்யர்களிடம் பேசுவது போல் பேசாதீர்கள். 

இன்னொரு விஷயம்.  இத்தனை சாஸ்திர சம்பிரதாயம் பேசும் பிராமண குலம் இப்போது எப்படி இருக்கிறது என்று இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.  காலம் பூராவும் அம்மாக்கொண்டுவாக வளரும் அம்பிகள் எல்லாம் கடைசியில் தன் அம்மாக்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடுகிறான்கள்.  சோதித்துப் பாருங்கள் நான் சொல்வதை.  ஒரு முதியோர் இல்லத்தில் ஐம்பது பெண்கள் இருந்தால் அதில் 35 பேர் பிராமணக் கிழவிகள். நாற்பதாகக் கூட இருக்கலாம்.  இது ஏன் நடக்கிறது?  அபிராமணர்கள் அடியோ உதையோ அம்மாவை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதில்லை.  இன்னொன்று.  அமெரிக்க பிராமணர்கள்.  மூன்றாவது தலைமுறையில் அவர்கள் அமெரிக்கராக மாறி பன்றிக் கறியும் மாட்டுக் கறியும் தின்று கொண்டிருக்கவில்லையென்றால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்.  என்ன கலாச்சார அடையாளம் இருக்கிறது?  தமிழ் தெரியாது.  சம்ஸ்கிருதம் தெரியாது.  தெரிந்த பரதமும் மூன்றாவது தலைமுறையில் போய் விடும்.  2000 ஆண்டுகளாக ஆண் தடியர்களிடம் பட்ட கொடுமைக்கு பிராமணப் பெண்கள் கொடுக்கும் பதிலடி இது.  சாஸ்திரமாவது வெங்காயமாவது. 

***

நகுலன் சந்திப்பின் போது ஒரு வாசகர் என்னைப் படித்தால் எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள் என்று சொன்னதற்கு அதிகாரத்தைக் கைக்கொள்ளுங்கள், அம்மாதிரி இடத்தை அடையுங்கள் என்று எழுதியிருந்தேன்.  ஆனால் அது நடைமுறையில் அத்தனை சாத்தியம் இல்லாதது.  உதாரணமாக, ஒரு டிரைவர்.  ஒரு முதலாளி.  அந்த டிரைவரால் எப்படி எப்போது முதலாளியாக முடியும்?  அதெல்லாம் இந்தியாவில் சாத்தியம் இல்லை.  அர்விந்த் அடிகாவின் ஒய்ட் டைகர் நாவலில் வரும் டிரைவர் மாதிரி மாறினால் முதலாளி ஆகலாம்.  ஆனால் அது லட்சத்தில் ஒன்றுதான் நடக்கும்.  எனக்குத் தெரிந்த ஒரு டிரைவர் ஒரு ஆன்மீகவாதியின் சீடர்.  முதலாளிக்கு அந்த ஆன்மீகவாதியைப் பிடிக்காது.  எப்போதும் அந்த ஆன்மீகவாதியைத் திட்டிக் கொண்டும் கிண்டல் செய்து கொண்டும் இருப்பார்.  அப்போது அந்த டிரைவரால் என்ன செய்ய முடியும்?  இடத்தையும் மாற்ற முடியாது.  முதலாளி ரொம்ப ரொம்ப நல்லவர்.  நல்ல சம்பளம்.  அந்த டிரைவருக்கு இப்போது இரண்டே சாத்தியங்கள்தான் உள்ளன.  ஒன்று, அடப் போய்யா, லூசு, என் குரு பற்றி உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.  நீ ஒரு முட்டாள் என்று உள்ளுக்குள் சிரித்து விட்டுக் கடந்து விடலாம்.  அப்படித்தான் கடக்க வேண்டும்.  இரண்டாவது சாத்தியம், முதலாளி நல்ல மனநிலையில் இருக்கும்போது, என் குரு பற்றி நிந்திப்பது என்னை மிகவும் வருத்தமுறச் செய்கிறது, அது என் அம்மாவை நிந்திப்பது போல என்று எடுத்துச் சொல்லலாம். 

இந்த மாதம் எப்போதும் வருவது போல சந்தா வரவில்லை. ஏனென்றும் தெரியவில்லை. முடிந்தால் கவனியுங்கள்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai