முன்னோடிகள் – 19

கோபி கிருஷ்ணன் உரைக்காக முழுமூச்சில் படித்துக் கொண்டிருக்கிறேன்.  கோபி கிருஷ்ணனை அல்ல.  அவரை ஏற்கனவே பலமுறை படித்து விட்டேன். வெறுமனே புரட்டினால் போதும்.  நான் படிப்பது, இப்போதைய என் பேச்சு ஒரு ஒப்பீட்டு ஆய்வு போல் இருக்கும்.  ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்தப் பேச்சைத் தவற விடாதீர்கள்.  முக்கியமான Gerard de Nerval மற்றும் Arthur Rimbaud.  இவர்கள் பெயரை ஷெரார் தெ நெர்வால் என்றும் ஆர்த்தர் ரேம்போ என்றும் உச்சரிக்க வேண்டும்.  தயவுசெய்து ழெரார் என்றும் ரிம்பாட் என்றும் சொல்லாதீர்கள்.  போர்ஹேஸின் பெயரை எல்லோரும் போர்ஹே போர்ஹே என்று எழுதும்போதும் சொல்லும்போதும் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருக்கிறது.  தமிழ்நாட்டு ஃப்ரெஞ்ச் புலவர்களே Jeanஐ ழான் ழான் என்று எழுதும்போது முட்டிக் கொண்டு சாகலாம் போல் தோன்றுகிறது.  Je என்பது ழ அல்ல.  ஜவும் அல்லதான்.  ஜவும் ஷவும் சேர்ந்த ஓர் உச்சரிப்பு.  எனவே அதை ஜ எனச் சொல்லுதலே தகும்.  ழ கொலை. 

ஜெரார் தெ நெர்வாலின் முக்கியமான படைப்புகளைப் படித்தேன்.  அதேபோல் ஆர்த்தர் ரேம்போ.  மற்றும், Shoshana Felman எழுதிய Writing and Madness என்ற முக்கியமான புத்தகத்தையும் படித்து முடித்தேன்.  இது மிகவும் கடினமான, மிகவும் ஆழமான புத்தகம்.  தெரிதா, ஃபூக்கோ இருவரது எழுத்தோடும் நல்ல பரிச்சயம் இருந்தால்தான் புரியும்.  எத்தனை கடினமாக புத்தகம் என்பதற்கு ஒன்றிரண்டு உதாரணங்கள்:

புத்தகத்தின் ஆரம்ப வாக்கியம் இது:  Blindness is the distinctive characteristic of madness.  What characterizes madness is thus not simply blindness, but a blindness blind to itself, to the point of necessarily entailing an illusion of reason.  But if this is the case, how can we know where reason stops and madness begins, since both involve the pursuit of some form of reason?  If madness as such is defined as an act of faith in reason, no reasonable conviction can indeed be excempt from the suspicion of madness.  Reason and madness are thereby inextricably linked…

ம்ஹும்.  கடினமாக பகுதி என்று பார்த்தால் உதாரணம் ரொம்ப சுலபமாக இருக்கிறது.  சரி, மீதியை சனிக்கிழமை உரையின் போது பார்த்துக் கொள்ளலாம்.  மேற்கண்ட புத்தகம் ஒரு 304 பக்கம் இருந்தது.  ஆனால் என் வாசிப்பு முறை வேறு மாதிரியானது.  ஒரு புத்தகத்தில் இன்றியமையாத reference இருந்தால் அதையும் படிக்க வேண்டும்.  அப்படி நெர்வாலின் (Gerard de Nerval) Aurélia, Mémoires d’un fou, Sylvie ஆகிய மூன்றையும் படித்து முடித்தேன்.  இதில் ஒரேலியா நெர்வாலின் சுயசரிதை.  இரண்டாவது, பைத்தியக்காரனின் நினைவுக் குறிப்புகள்.  ஒரு குறுநாவல்.  சில்வீ மற்றொரு குறுநாவல்.  மூன்றையும் படித்து முடித்தேன். 

எவ்வளவு கடினமான விஷயங்களையும் என்னால் வெகு எளிதாக விளக்க முடியும்.  எனவே இந்த உரை மிக முக்கியமானதாகவும் ஃப்ரெஞ்ச் இலக்கியத்துக்கான ஒரு திறப்பாகவும் இருக்கும். நூறு பேர் மட்டுமே அளவு.  ஸூம்.  சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து.  பதினொன்றரை வரை போகும் என்று நினைக்கிறேன்.  ஏன் இத்தனை நேரம், இரண்டு மணி நேரத்தில் முடித்து விடுங்கள் என்றார் ஒரு தோழி.  பெண்களால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்திருக்க இயலாதாம்.  பௌதீகரீதியாக அல்ல; வீட்டில் சந்தர்ப்ப சூழ்நிலை இடம் தராது.  அப்படி இருந்தால் இரண்டு மணி நேரம் மட்டும் கேட்டு விட்டு, மீதியை எனக்குக் கட்டணம் அனுப்பி, ஒளிப்பதிவை வாங்கி அரை மணி அரை மணியாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.  ஆனால் நான்கு மணி நேரமே வேண்டாம் என்று சொல்ல இயலாது.  இது பற்றி நான் பலரையும் விசாரித்தபோது இன்னும் அரை மணி நேரம் கூடப் போகலாம் என்றார்கள் என்றேன் தோழியிடம்.  அவர்கள் நான் கேட்பதால் என்னை மகிழ்விப்பதற்காகச் சொல்கிறார்கள் என்றார். 

இதில் என்னுடைய பார்வை என்ற ஒன்று இருக்கிறது.  ஒரு உரையாடல் அல்லது ஒரு உரை என்பது பனிரண்டு மணி நேரம் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.  வாசகர் வட்ட சந்திப்புகளில் அப்படித்தான் இருக்கும்.  மாலை ஆறு மணியிலிருந்து காலை ஆறு வரை.  பிறகு மூன்று நேரம் தூங்கி விட்டு பத்திலிருந்து மூன்று வரை போகும்.  அரட்டைக் கச்சேரி அல்ல.  மிகத் தீவிரமான உரைகள்.  உரையாடல்கள்.  மதுரையில் பலமுறை நேசமித்திரன், ஆத்மார்த்தி போன்ற நண்பர்கள் இதில் கலந்து கொண்டிருக்கிறார்.  நேசமித்திரன் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் பேசுவார்.  அத்தனையும் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் போல்தான் இருக்கும்.

மௌனி தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் பேசுவாராம்.  இடைக்கிடையே போய் கொஞ்சம் சாராயம் போட்டு விட்டு வருவார்.  மற்றவர்கள் யாருமே குடிக்க மாட்டார்கள்.  அவர் சாராயம் போடுவது கூட யாருக்கும் தெரியாது.  கமுக்கமாகப் போய் விட்டு கமுக்கமாக வந்து விடுவார்.  தேவதச்சனை இதில் யாருமே மிஞ்ச முடியாது.  நாள் கணக்கில், மாதக் கணக்கில் பேசுவார்.  சாக்ரடீஸ் மட்டுமே உங்கள் அளவுக்குப் பேசியிருக்கிறார் என்று தேவதச்சனிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்.  அவருடைய விசேஷம் என்னவென்றால், எல்லோருக்கும் அவர் பேச்சு பிடிக்கும்.  ஜெயமோகனும் நாட்கணக்கில் பேசக் கூடியவர்.  எனவே தத்துவவாதிகளின் உரையாடல் என்பது மூவாயிரம் ஆண்டு பாரம்பரியம் உடையது.  நான் ஏதோ புதிதாகச் செய்வது அல்ல.  தமிழ்நாட்டில் ஆன்மீகப் பேச்சாளர்கள் பலரும் ஜாகுவார் காரில் வருகிறார்கள்.  லட்சக் கணக்கில் காசு கிடைக்கிறது.  பத்து நாள் சொற்பொழிவு.  அதற்கும் அறத்துக்கும் சம்பந்தம் கிடையாது.  நாங்களோ ஆதி சங்கரர் செய்ததைச் செய்து கொண்டிருக்கிறோம்.  சாக்ரடீஸ் செய்ததைச் செய்து கொண்டிருக்கிறோம். 

தயாராகுங்கள்.  வரும் சனிக்கிழமை.  29-ஆம் தேதி.  இந்திய நேரம் இரவு எட்டு மணி.   

Here is the meeting invitation details for Aug 29th.

Satheesh waran is inviting you to a scheduled Zoom meeting.


Topic: Session with Charu – GopiKrishnan
Time: Aug 29, 2020 08:00 PM India

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/5482651592?pwd=VWNqRGx1VjZ3aTZmSnlKNnA4TWlnUT09

Meeting ID: 548 265 1592
Passcode: G74SYe
One tap mobile
+13126266799,,5482651592#,,,,,,0#,,568489# US (Chicago)
+16468769923,,5482651592#,,,,,,0#,,568489# US (New York)

Dial by your location
        +1 312 626 6799 US (Chicago)
        +1 646 876 9923 US (New York)
        +1 301 715 8592 US (Germantown)
        +1 253 215 8782 US (Tacoma)
        +1 346 248 7799 US (Houston)
        +1 408 638 0968 US (San Jose)
        +1 669 900 6833 US (San Jose)
Meeting ID: 548 265 1592
Passcode: 568489
Find your local number: https://us04web.zoom.us/u/fbClfmbAUq