பூச்சி 120: வரும் போகும்

என் நண்பர்கள் இருவர் ஃப்ரெஞ்ச் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  நான் வழக்கம்போல் பாதியில் விட்டு விட்டேன்.  பாதியில் அல்ல; ஆரம்பத்திலேயே.  நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஃப்ரெஞ்சை விட அது முக்கியம்.  ஃப்ரெஞ்சில் இறங்கினால் தினம் இரண்டு மணி நேரம் வீட்டுப் பாடத்துக்கு ஒதுக்க வேண்டும்.  தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஒதுக்காவிட்டால் ஃப்ரெஞ்ச் அல்ல, எதுவுமே வராது.  அதனால்தான் பெண்களிடமிருந்தும், பூனைகளிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும் ஒதுங்கி இருக்கிறேன்.  ஆனால் நடைப் பயிற்சியின் போது முழுக்க முழுக்க ஃப்ரெஞ்ச் பாடல்கள்தான்.

உங்களுக்கு ஒரு விஷயத்தில் உடன்பாடு இல்லாவிட்டால் இந்த வரும் போகும் என்ற அத்தியாயத்தைப் படிப்பது வீண்.  அது, இசையை ரசிக்க மொழி தேவையில்லை.  உதாரணம்.  எனக்குக் கர்னாடக இசையின் ராக ஞானம் கிடையாது.  உள்விவகாரங்கள் எதுவுமே தெரியாது.  ஆனாலும் நான் ஒரு தேர்ந்த ரசிகன்.  இதை இலக்கணக்காரர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  எனக்கு அவர்களின் அங்கீகாரமும் தேவையில்லை.  சரி, ஜனரஞ்சக விஷயத்துக்கு வருவோம்.  மைக்கேல் ஜாக்ஸனின் பாடல்களுக்கு நான் அடிமை.  பல பாடல்களின் வரிகள் தெரியாது.  ஆனாலும் பிடிக்கும்.  தெரிந்தால் இன்னும் நன்று.  ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால் தெரியாமலும் ரசிக்க முடியும்.  அப்படித்தான் ஃப்ரெஞ்ச் பாடல்களும், ஸ்பானிஷ் பாடல்களும், அரபி பாடல்களும்.  மொழி தெரியாமலேயே ரசிக்கலாம்.  ஸ வா, ஸாவியா(ங்) என்ற இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.   வரும் போகும் என்று பொருள்.  அவ்வளவுதான் அர்த்தம் தெரியும்.  மேலே மேலே அர்த்தம் தெரியாமலே ரசிக்கலாம்.  மொழி தெரியாமல் இசை கூடாது என்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அத்தியாயத்தை மட்டும் படிக்காதீர்கள்.  எனக்கு ஓரளவு ஃப்ரெஞ்ச் மொழி பரிச்சயம் என்பதால் பாடல் பாடப்படும் போது அதன் லிரிக்ஸைப் பார்த்துக் கொண்டே கேட்பது வழக்கம்.  எனக்குப் பயனில்லை.  உங்களுக்கும் பயனில்லை.  ஆனால் ஃப்ரெஞ்ச் படிப்பவர்களுக்கு ரொம்பவே பயன்படும்.  முதலில் உச்சரிப்பு.  நான் ஆங்கிலத்தையும், ஆங்கில உச்சரிப்பையும் இப்படித்தான் கற்றுக் கொண்டேன்.  அமெரிக்க வெப் சீரீஸ் மூலம்.  அதேபோல் ஃப்ரெஞ்ச் உச்சரிப்பை இந்த லிரிக்ஸை பாடல் பாடப்படும் போது கவனிப்பதன் மூலம் பிரமாதமாகக் கற்றுக் கொள்ளலாம்.  உச்சரிப்பைக் கற்றுக் கொள்ள இது ஒரு சுலபமான வழி.  கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  கேட்டுக் கேட்டு சலிக்க வேண்டும்.  கீழே ஃப்ரெஞ்ச் லிரிக்ஸோடு பாடல்.  பாடியவர்கள் Vitaa & Slimane.   இதில் ஸ்லிமான் ஃப்ரான்ஸில் பிறந்து வளர்ந்த அல்ஜீரியர்.  முந்தின தலைமுறை அல்ஜீரியாவிலிருந்து வந்ததாக இருக்கும்.  அல்லது, அதற்கும் முந்தின தலைமுறை.  ஸ்லீமானைக் கேட்டுப் பாருங்கள்.  எனக்கு மிக மிகப் பிடித்த ஃப்ரெஞ்ச் பாடகர்.  ஃப்ரெஞ்ச் உச்சரிப்பு தமிழுக்கு மிகவும் அந்நியமானது.  ஃப்ரெஞ்ச் மொழி நன்கு தெரிந்தவர்கள் ஆங்கிலம் பேசும்போது கூட எம், என் என்ற முடிவு ஒலி வரும்போது உதட்டை விரித்து வைத்து விடுவதை கவனித்திருக்கிறேன்.  பெர்ஃப்யூம் என்றால் ம்-இல் நாம் இரண்டு உதடுகளையும் மூடுகிறோம் இல்லையா?  In, en, on என்று முடிந்தால் ஃப்ரெஞ்சில் ஆ(ங்), ஓ(ங்) என்று உதட்டையே மூடாமல் முடித்து விடுகிறார்கள்.  Mon மோன் அல்ல.  மோ(ங்).  ஆனால் Bonshommes என்று எம் எழுத்தைத் தாண்டி e, es வந்தால் எம்முக்கு உதடுகளை மூடி பிறகு திறக்கிறார்கள்.  சின்ன உதாரணம் தருகிறேன்.  ஸ்லீமான் என்றுதான் ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  ஆனால் ஃப்ரெஞ்சில் சரியான உச்சரிப்பு ஸ்லீமான் என்று சொல்லி ன்-ஐ அப்படியே மூடி விடாமல் நாக்கை மேல் அண்ணத்திலிருந்து விட்டு விட வேண்டும்.  சரி, எப்படியோ போங்கள்.  பாட்டைக் கேளுங்கள்.  ஃப்ரெஞ்ச் படிப்பவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.  ஃப்ரெஞ்ச் லிரிக்ஸை பாட்டு கேட்கும்போது பாருங்கள்.  உச்சரிப்பு பிரமாதமாக வரும். 

இன்னொரு நிலை இருக்கிறது.  இந்தியாவிலேயே இருந்து உயர்நிலை ஃப்ரெஞ்ச் படித்தாலும் ஃப்ரான்ஸ் போகும் வாய்ப்பு இல்லாதவர்கள், ஃப்ரெஞ்ச் ஆட்களோடு பேசிப் பழக வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஃப்ரெஞ்சுக்காரர்கள் சடுதியில் பேசுவதும், கத்தாமல் கிசுகிசுப்பாகப் பேசுவதும், ஃப்ரெஞ்ச் படங்களும், வெப் சீரீஸும் முழுசாகப் புரிவதற்கு ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கும்.  அவர்கள் இப்படிப்பட்ட பாடல்களை லிரிக்ஸ் இல்லாமல் கேட்டுக் கேட்டுப் பழகினால் வெகு சீக்கிரத்தில் அவர்கள் ஃப்ரெஞ்சுக்காரர்களோடு வெகு சரளமாக உரையாட முடியும்.  அவர்கள் பேசுவது புரியும்.

இதை ஏன் ரொம்ப மெனக்கெட்டு எழுதுகிறேன் என்றால் ஃப்ரெஞ்சில் பெரிய பெரிய டாக்டர் பட்டம், டபுள் டாக்டரேட் வாங்கியவர்கள் எல்லாம் (தமிழர்கள்) ஃப்ரெஞ்சின் r-ஐ உச்சரிக்கும்போது கொலை செய்கிறார்கள்.  ஃப்ரெஞ்சில் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத நானே r-ஐ ஃப்ரெஞ்சுக்காரர்கள் மாதிரியே உச்சரிப்பேன்.  அது ஒரு கம்ப சூத்திரமே இல்லை.  ஒரு மணி நேரம் r உச்சரிப்புக்கான காணொலிகளைப் பார்த்து விட்டு ஒரு நாள் பூராவும் சொல்லிக் கொண்டே இருந்தேன்.  அவந்திகா என்ன கேட்டாலும் ப்ராக்டிஸ் காரணமாக ஹ்ர ஹ்ர என்று சொல்லி விட்டே பதிலை ஆரம்பித்தேனா, உனக்குத் தொண்டையில் என்ன பிரச்சினை என்று ஆரம்பித்து விட்டாள்.  இல்லம்மா, ஃப்ரெஞ்ச் r-ஐ உச்சரிக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்ன பிறகு என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போய் விட்டாள்.  அது ஒன்றுமில்லை.  France இருக்கிறதா.  அது ஃப்ரான்ஸ் இல்லை.  ஃப்ஹ்ரான்ஸ்.  சொல்லிப் பாருங்கள்.  சுளுவாக வரும்.  ஆர் சொல்லும்போது அதன் முன்னால் நாம் காறி உமிழும்போது (உதாரணத்துக்கு மன்னிக்கவும், வேறு நல்ல உதாரணம் தெரியவில்லை) அடித் தொண்டையில் ஏதோ பண்ணுவோம் இல்லையா, அப்படி ஹ சொல்ல வேண்டும்.  சொல்லுங்கள்.  ஹ்ர.  ஹ்ர.  ஃப்ஹ்ரான்ஸ்.  அவ்ளோதான்.  ஆனால் பல இந்திய ஃப்ரெஞ்ச் பேராசிரியர்கள் ஆர்-இல் திணறுகிறார்கள்.  நம்முடைய Gérard de Nerval இருக்கிறார் இல்லையா, அவர் Aurélia என்று ஒரு சுயசரிதை எழுதியிருக்கிறார்.  அவர் பெயரிலேயே மூன்று ஆர் வருகிறது, ஒரேலியாவில் ஒரு ஆர்.  ஆனால் பேராசிரியர் கவலையே படவில்லை.  ஜெரார்த் தெ நெர்வால், ஒரேலியா என்று தமிழ் மாதிரியே அடித்து விட்டார்.  ஆனால் இந்த (ஹ்)ர் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.  தமிழர்களுக்கு எப்படி ழ வரவில்லையோ அதேபோல் ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் இப்போது ஹ்ர் வரவில்லை.  ஹ ஹ என்று அடித்து விடுகிறார்கள்.  எங்கே ஃப்ரான்ஸ் என்று சொல் என்று ஒரு ஃப்ரெஞ்சுக்காரனைக் கேட்டால் ஃப்ஹான்ஸ் என்கிறான்.  ஹ சொல்லும்போதே ர-வும் கொஞ்சம் வந்து விடுகிறதாம்.  ஆனால் தமிழர்கள் jeவைக் கொலை பண்ணுவது பற்றித் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.  இந்த je கொஞ்சம் நம்முடைய ழ மாதிரி.  ழவும் இல்லை.  ஷவும் இல்லை.  ஜவும் இல்லை.  ஆனால் மூணும் கலந்தது.  Je என்றால் நான், என் என்று பொருள்.  போ(ங்)ஷூர் bonjour என்றால் good day என்று பொருள்.  பொதுவாக ஹலோ என்பதற்குப் பயன்படுத்துவார்கள்.  போ(ங்) என்பதே சரி.  போன் என்று முடிக்கக் கூடாது.  போ(ங்)ஷூர்.  இதை நம் ஆட்கள் போஞ்சூர் போஞ்சூர் என்று சொல்லும்போது செங்கல்லாம் மூஞ்சியில் தேய்ப்பது போல் இருக்கிறது.  ஃப்ரெஞ்சில் டபுள் பிஹெச்டியே இப்படித்தான் இருக்கிறது.   

மொழி என்பது மூளை சமாச்சாரம் மட்டும் அல்ல.  செவிகளால் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  பாடலின் காணொலி முதலில் வருகிறது.  அதன் கீழே அதன் ஃப்ரெஞ்ச் லிரிக்ஸ்.  அதைப் பார்த்துக் கொண்டே பாடலைக் கேளுங்கள். 

Ça va ça vient

Dis le moi

Dis le moi si tu te sens seul

Au milieu de la foule

Quand plus rien ne sait toucher ton coeur

Dis le moi

Dis le moi si ça fait trop mal

On t’a tellement déçu

Que tu dis qu’avoir mal c’est normal

Tu sais, dans la vie on s’est tous planté

C’est vrai, combien de fois on à dû se relever

Personne n’est parfait, on est tous sorti du chemin

Tu sais dans la vie, ça va ça vient

Ça va ça vient

Ça va ça vient

Ça va ça vient

Ça tient à rien

Dis le moi, dis le moi encore

Ça va ça vient

Ça va ça vient

Ça tient à rien

Au fond tout va bien

Dis le moi, dis le moi

Si plus rien n’a de sens

Si tu n’a plus la foi

Plus rien a donner

Dis le moi, dis le moi

Si t’as tout essayé, tout tenté

Espéré que ton monde change

Tu sais, dans la vie on s’est tous planté

C’est vrai, combien de fois on à dû se relever

Personne n’est parfait, on est tous sorti du chemin

Tu sais dans la vie, ça va ça vient

Ça va ça vient

Ça va ça vient

Ça va ça vient

Ça tient à rien

Dis le moi, dis le moi encore

Ça va ça vient

Ça va ça vient

Ça tient à rien

Au fond tout va bien

On est pas bien là, alors

On est pas bien

On est pas bien là, en vrai

Qu’est ce qu’on est bien

On est pas bien là, en vrai

On est pas bien là, en vrai

Qu’est ce qu’on est bien

Tu sais dans la vie, ça va ça vient

Ça va ça vient

Ça va ça vient

Ça va ça vient

Ça tient à rien

Dis le moi, dis le moi encore

Ça va ça vient

Ça va ça vient

Ça tient à rien

Au fond tout va bien

On est pas bien là, alors

On est pas bien

On est pas bien là, en vrai

Qu’est ce qu’on est bien

On est pas bien là, alors

On est pas bien

On est pas bien là, en vrai

Qu’est ce qu’on est bien