லேப்டாப் நரசிம்மனுக்கு ஒரு கேள்வி

நீ என்னை நேரில் பேசுவது போலவே வா போ என்று உரிமையில் பேசியிருப்பதால் நானும் உன்னை ஒருமையில் பேச அனுமதிப்பாய் என்று நினைக்கிறேன். இப்போது கடும் நெஞ்சு வலியுடன் இதை எழுதுகிறேன். நெஞ்சுவலி முற்றி ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால் என் நண்பர் எக்ஸ்தான் காரணம். ஏனென்றால், அவர்தான் நீ முகநூலில் வாந்தி எடுத்ததைப் பற்றி எனக்குச் சொன்னவர். மற்றபடி ஒரு நீண்டநாள் மனநோயாளியாகிய நீ எழுதிய எதையும் நான் படிப்பதில்லை என்பது உனக்கே தெரியும். நீ என்னைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறாய்.

இலக்கியம் உன் ஏரியாவே இல்ல. இங்க வந்து அசோகமித்திரன் தி ஜானகிராமன் சுந்தர ராமசாமினு என்னத்தையாவது உளறிவெச்சு ஏன் அசிங்கப்படறே சாரு. 72ல வந்த அசோகமித்திரன் சிறுகதைத் தொகுதி இதான். இப்ப எவனோ போட்ட புக்க வெச்சுக்கிட்டு ஹிஸ்டரிய எழுதறே. உன்னைக் கூப்ட்டு எழுதச்சொன்ன தினமணிய அடிக்கணும்‬.

லேப்டாப் நரசிம்மா, உனக்கு என்ன தாண்டா வேணும்? ஏண்டா இப்படி நாப்பது வருஷமா நீ இலக்கியவாதி இல்லே, இலக்கியவாதி இல்லே என்றே கத்திக் கொண்டிருப்பாய்? நாப்பது வருஷமாவா ஒருத்தன் இதையே கத்துவான்? நான் இலக்கியவாதி இல்லை என்று சொல்ல வெறும் ப்ரூஃப் ரீடரான உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்னுடைய இலக்கியத் தகுதியை ஜட்ஜ் பண்ண உன்னால் இந்த ஜென்மத்தில் முடியாது. அதற்கு நீ எக்கச்சக்கமாகப் படிக்க வேண்டும். சரி, ஒரு பேச்சுக்கு நான் இலக்கியவாதி இல்லை என்று வைத்துக் கொண்டாலும் அப்புறம் என்ன ———— நீ என் வீட்டுக்கெல்லாம் வந்து வந்து என்னை ரோட்டிலேயே நின்று நின்று கூப்பிட்டாய்? என்ன வெங்காயத்துக்கு எனக்கு அத்தனை முறை போன் செய்தாய்? மனநோயாளிகளின் போனை நான் எடுப்பதில்லை என்பதால் நான் எடுக்கவில்லை என்றதும் சீனிக்கு போன் செய்து ஏம்ப்பா உன் ஃப்ரெண்ட் என் ஃபோனை எடுக்க மாட்டேங்கிறார் என்று புகார் சொல்கிறாய்? அதை விடு. என்ன வெங்காயத்துக்கு என் இலக்கியம் இல்லாத நூல்களை ஈ புக்காகக் கொண்டு வருவதற்கு மணிக்கணக்கில் செலவிட்டாய்? இத்தனை நோய்மையும் பொச்சரிப்பும் பொறாமையும் கொண்ட உன்னை உன் சக மனிதர்கள் எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? அந்நியன் படத்தில் வருகிற மாதிரி அவர்களிடம் பக்காவாக நடந்து கொள்கிறாயா? இலக்கியவாதிகளிடம்தான் வேலையா? 25 வயதில் எழுதிய ஒரே ஒரு கதையை வைத்துக் கொண்டு இன்னும் பஜனை பண்ணிக் கொண்டிருக்கிறாயே உன்னை விட நான் லட்சம் மடங்கு உயரத்தில் இருக்கிறேன் நரசிம்மா. ஒருத்தனைப் பார்த்து நீ இலக்கியவாதி இல்லை என்று எந்தத் தகுதியும் இல்லாத நீ சொல்கிறாயே, உன்னை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்…அப்படிப்பட்ட அறம் எல்லாம் இந்த உலகில் இன்னும் உயிரோடு இருந்தால்… மற்றபடி அந்த அசோகமித்திரன் புத்தகத்தின் தலைப்பு என்னுடைய பதிப்பில் விமோசனம் என்றுதான் இருக்கிறது. இன்னொரு விஷயம், உன்னை நான் படிப்பதில்லை. ஆனால் நீ விடாமல் என்னைப் படிக்கிறாய். அது உன் சாபம். அந்த ஒன்றே உனக்கு நீ கொடுத்துக் கொள்ளும் தண்டனையாக இருக்கும். ஏனென்றால் நீ என்னைப் படிக்கப் படிக்க உன் மனநோய் முற்றும்… விரைவில் நீ ஏதேனும் ஒரு மனநோய் விடுதியில்தான் சாரு இலக்கியவாதி இல்லை சாரு இலக்கியவாதி இலை என்றுதான் பாயைப் பிறாண்டிக் கொண்டிருக்கப் போகிறாய். ஒருவேளை இப்போதே உன் வீட்டில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாயோ என்னமோ