தலைமுறைகள்

இம்மாத உயிர்மையில் வந்த சாருவின் “தலைமுறைகள்” விமர்சனம் வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் வந்த சில வரிகளை சாதாரணமாகக் கடந்து வந்துவிட முடியவில்லை.

“தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்துவிட்டார்கள். நதியையும் நிலவையும் தாவரங்களையும் இழந்துபோன ஒரு தலைமுறையை இன்றைய நவீன நகரத்து வாழ்க்கை உருவாக்கி இருக்கிறது.”

எத்தனை சத்தியமான உண்மை. எங்களின் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருக்கிறது அய்யனார் கோவில் ஆறு. உள்ளங்கையில் நீரை அள்ளிக்கொண்டால் முகம் பார்த்துத் தலை வாரலாம். அவ்வளவு தூய்மை. அவ்வளவு தண்மை. பள்ளி முடியும் காலம் வரை முதல் நாள் சின்னதாக ஒரு தூறல் போட்டால் கூட இரண்டு மூன்று பஸ் நிறைய ஆட்களைத் திரட்டிக் கொண்டு, ஆடு வெட்டி, சமைத்து, அருவியில் குளித்து இயற்கையோடு இயைந்திருந்ததெல்லாம் ஒரு காலம். தாவரவியலை புத்தகத்தையும் தாண்டி புரிந்து கொண்ட காலமது.

என் பிள்ளைக்குக் காட்டுவதற்கு அங்கே இப்போது கொஞ்சம் கூழாங்கற்கள் மிச்சம் இருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் (வாசகர் வட்டத்தில் எழுதியுள்ள குறிப்பு)

Comments are closed.