இன்று மதியம் ஒரு மணிக்கு சன் டிவியில் இன்றைய வாசிப்புப் பழக்கம் பற்றி ஒரு முக்கியமான பேட்டி அளித்திருக்கிறேன். சமீபத்தில் நான் அளித்த பேட்டிகளில் இதுவே எனக்கு மனநிறைவைத் தந்த பேட்டி ஆகும். இது பேட்டி என்பதை விட ஒரு உரையாடலாக அமைந்தது. இதன் சிறப்புக்கு முழுக் காரணமும் சன் டிவி நெல்சனையே சாரும். தொடர்ந்து சொற்பொழிவு பாணியில் பேசுவதை விட கேள்விகள் கேட்பதன் மூலம் என்னிடம் உள்ள சிறப்பானதை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதைக் கண்டு பிடித்து என்னிடம் சொன்னவர் அராத்து. அதனால் ஏப்ரலில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்க இருக்கும் நாவல் வெளியீட்டு விழாவிலும் என் பேச்சு கேள்வி பதில் பாணியிலேயே அமையும். இன்றைய பேட்டி சன் டிவியில் மதியம் ஒரு மணிக்கும், மாலை ஐந்து மணிக்கும், இரவு பத்தரை மணிக்கும் மூன்று முறை ஒளிபரப்பாகும். தயவுசெய்து கேளுங்கள். முடிந்தால் இதைப் பதிவு செய்வதும் நலம். நெல்சனுக்கு என் நன்றியும் பாராட்டுகளும்… இதில் கலந்து கொள்ளச் சொல்லி சிபாரிசு செய்த மனுஷ்ய புத்திரனுக்கும் என் நன்றி. அவர் சொல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சி பற்றி எனக்குத் தெரிந்திருக்காது. விவாத மேடை என்பது நிகழ்ச்சியின் பெயர். முதலில் மனுஷ்ய புத்திரன் வருவார். அதற்கு அடுத்து நான். தவற விடாதீர்கள்…
Comments are closed.