ஆனந்த விகடனில் இன்று என்னுடைய நேர்காணல் வெளியாகியுள்ளது. என்னையும் என் பிரியத்துக்குரிய என் ஆருயிர் ஸோரோவையும் அழகான புகைப்படத்தில் காண்பித்ததற்கு விகடனுக்கு நன்றி. பேட்டியில் இரண்டு முக்கியமான விடுபடல்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஜெயலலிதா பற்றிய என் பதிலில் அவருடைய நிர்வாகம் நன்றாக உள்ளது; ஆனால் ஊழலுக்குப் பழக்கப்பட்டு விட்ட அதிகார வர்க்கத்தையும், இலவசங்களுக்குப் பழக்கப்பட்டு விட்ட மக்களையும் ஒற்றை மனிதரால் மாற்றுவது கடினம். இலவசங்களை ஒழித்தால்தான் சீர்திருத்தம் பற்றி யோசிக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் ”தனி மனுஷியா ஜெயலலிதா எதுவும் செய்ய முடியாது” என்று தலைப்பிட்டு பேட்டி வெளியாகி உள்ளது. இது மிகவும் எதிர்மறையான ஒரு தலைப்பு. நான் மனுஷி என்றே யாரையும் குறிப்பிடுவதில்லை. மனிதர் என்றே சொல்வேன். இரண்டு, மிஷ்கினின் படம் பற்றி நான் சொன்னது: அது ஒரு fake படம். fake என்றால் போலி. மிஷ்கினின் போலித்தனம்தான் மிகவும் எரிச்சலூட்டுவதாக உள்ளது. மற்றபடி க்ராஃப்டே இல்லாத சினிமா என்று சொல்லவில்லை. அதில் க்ராஃப்ட் இருந்தது. ஆனால் content மிகவும் போலியாக இருந்தது.
விகடனில் ஒரு சிறிய விளக்கம் போட்டார்கள் என்றால் நன்றியுடையவன் ஆவேன்…
Comments are closed.