பிறந்த நாள் அன்று வந்த ஒரு கடிதம்…

தமிழில் எழுத்தாளனாக இருப்பது, இந்தியாவில் பெண்ணாகப் பிறப்பதைப் போல.  எவன் எப்போது கையைப் பிடித்து இழுப்பான், பலாத்காரம் பண்ணுவான் என்று தெரியாது.  எழுத்தாளனுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை.  வேறு விதமான ஒரு பிரச்சினை இது.  தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும்தான்.  வேறு மொழி எழுத்தாளர்களுக்கு நான் சொல்வதே புரியாது.  நீங்கள் ஒரு மருத்துவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு விமானியும் வந்து நான் மருத்துவர் என்று சொல்ல மாட்டார்.  மருத்துவர் என்றால் மருத்துவர்தான்.  அதிலேயே சித்த மருத்துவர், ஆயுர்வேத … Read more

அ-காலம் : முன் வெளியீட்டுத் திட்டம்

ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது. கமாலும் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தான். இவர்கள் யாரும் இனிமேல் சிறுவர்கள் அல்ல. இவர்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். மனிதர்களின் குரல்வளையைக் கடித்துக் குதறும் நாய்களைப் போல் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கொலை செய்யும் போது இவர்களின் புருவம் கூட உயர்வது இல்லை . இந்தச் சிறுவர்களுக்கு இந்த உலகத்தில் பெற்றுக்கொள்ள எதுவும் இல்லை. … Read more

அருண்மொழி நங்கையின் நூல் வெளியீடு

நேற்று என் பிறந்த நாளை நான் கொண்டாடவில்லை. நாள் முழுவதும் ஔரங்கசீப்பின் அறுபத்தெட்டாவது அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். இந்த அத்தியாயத்தை எழுதி முடிக்க இரண்டு நாட்கள் ஆயின. இதோ இப்போதுதான் முடித்தேன். இப்போது 19.12.2021 காலை ஏழரை மணி. வாக்கிங் செல்லவில்லை. நேற்று மாலை மட்டும் வாசக சாலை நண்பர்கள் அளித்த பரிசை வாங்கிக் கொள்வதற்காக தக்கர் பாபா வித்யாலயம் சென்றேன். அதில் செல்வான இரண்டு மணி நேரத்தை இரவு கண் விழித்து சரி செய்தேன். என் … Read more

மிக வெறுக்கப்படும் அரக்கன் – சாரு நிவேதிதா: நேசமித்ரன்

மிக வெறுக்கப்படும் அரக்கன் – சாரு நிவேதிதா இதுவரை எந்த சாதியையும் உயர்த்திப் பிடித்ததாக தெரியவில்லை தமிழ் எழுத்துப் புலத்திற்கு உலக இசையை அறிமுகப் படுத்திய முதல் எழுத்தாளன் 3.காதலுக்கும் காமத்திற்கும் ஆன இடைவெளியை காலம் கடந்து கொண்டே இருக்கிறது.அதன் மானக்கேடான பக்கங்களை ( per version) தன் மொழித்திறத்தால் கடந்த ஒற்றை மனிதன் தான் நம்பிய உத்தியை நவீனத்துவத்தின் கூறுகளை இன்றும் அயல்நிலத்திலிருந்தும் பயின்று பார்க்கும் எழுத்தாளன் சிற்றிதழ் மரபு துயரார்ந்த வாழின் பாகங்களையே பேசிய … Read more

சாரு என்னும் சகாப்தம்: ஆர். அபிலாஷ்

முன்னோடிகளின் பாதையில் நடைபோடுவது சற்று சுலபம். தமிழில் ஏற்கனவே உள்ள செண்டிமெண்டுகள், இங்கு வெற்றி பெற்றுள்ள வடிவங்கள், உருவகங்களை பயன்படுத்தி வாசகரை சுரண்டுவதும் ஓரளவுக்கு எழுத்து கைவந்தவர்களுக்கு சுலபமே. ஆனால் இங்குள்ள கதைகூறல் மரபை முழுக்க உடைத்து விட முயல்வது, உரைநடை-புனைவு எனும் இருமையை அழிப்பது, அதன் வழி சுய அனுபவத்தை சொல்லுகிறவனும் ஒரு கற்பனைப் பாத்திரமே என நிறுவுவது, எதிர்க்கதை எனும் புதிய பள்ளியை இங்கு உருவாக்குவது, ஒரு புது அழகியலுக்கு. களம் அமைப்பது, அதற்கான … Read more