புத்தக விழா – 4

இன்று 5-1-2019 காலை ஏழு மணிக்கு புத்தகச் சந்தைக்குப் போயிருந்தேன். சன் நியூஸ் பேட்டிக்காக. அந்தப் பேட்டி இன்று இரவு பத்து மணிக்கு சன் நியூஸில் ஒளிபரப்பாகும். 5-1-2019 இன்று மதியம் மூன்று மணியிலிருந்து இரவு ஒன்பது வரை ஸீரோ டிகிரி பப்ளிஷிங் & எழுத்து பிரசுரம் அரங்கில் இருப்பேன். என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் சந்திக்கலாம். அரங்கு எண் 696 & 697. ஒரு நல்ல இங்க் பேனா தேடிக் கொண்டிருக்கிறேன். … Read more

புத்தக விழா – 3

இன்று (4 ஜனவரி)  மதியம் மூன்று மணியிலிருந்து இரவு ஒன்பது வரை ஸீரோ டிகிரி பப்ளிஷிங் & எழுத்து பிரசுரம் அரங்கில் இருப்பேன். என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் சந்திக்கலாம். அரங்கு எண் 696 & 697

புத்தக விழா – 2

சென்னை புத்தக விழா இன்று தொடங்கி விடும். என் நண்பர்கள் ராம்ஜியும் காயத்ரியும் ஆரம்பித்த ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் எழுத்து பிரசுரம் பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 696 & 697. வலமிருந்து பார்த்தால் முதல் வரிசையிலேயே இருக்கும். இடமிருந்து பார்த்தால் கடைசி வரிசை. வரிசையின் இடது பக்கம் 696 & 697. கண்டு பிடிக்க சுலபம்தான். அரங்கு எண்களை ஞாபகம் வைத்துக் கொள்வதும் சுலபம்தான். எனக்குப் பிடித்த, நான் அடிக்கடி குறிப்பிட்டு வந்த Hermit of … Read more

பொண்டாட்டி

அராத்துவின் புதிய நாவல் பொண்டாட்டி பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல இருக்கிறது. டால்ஸ்டாய், வ்ளதிமீர் நபகோவ் போன்ற மேதைகள் ஆண் பெண் உறவுச் சிக்கலை பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். சமகால இலக்கியத்தில் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இன்றைய வாழ்க்கையில் ஆண் பெண் உறவு எப்படி இருக்கிறது, எவ்வளவு சிக்கலாகவும் சிடுக்குகள் மிகுந்தும் இருக்கிறது என்று உலக இலக்கியத்தில் பொண்டாட்டி நாவல் அளவுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஆக உலக அளவிலேயே இன்றைய பெண் … Read more

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…

குமுதத்தில் நான் எழுதிய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் தொடர் இப்போது நூலாக வர இருக்கிறது. தொகுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்தின் வெளியீடாக வெளிவரும். குமுதத்தில் எழுதினாலும் உயிர்மையில் எழுதினாலும் ஒரே விஷயத்தைத்தான் எழுதுவேன். பின்வரும் கட்டுரை கனவு கேப்பச்சினோ தொடரில் வந்தது. இதன் முதல் பிரதி யாருக்கும் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com முதல் பிரதிக்கு நீங்கள் செலுத்தக் கூடிய தொகை எவ்வளவு  என்பதை நீங்களே தீர்மானியுங்கள். அடுத்த … Read more

நேசமித்திரனின் புதிய தொகுதி

வெளிவர இருக்கும் நேசமித்திரனின் கவிதைத் தொகுதிக்கு நான் எழுதியுள்ள முன்னுரையின் ஒரு பகுதி. தொகுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்திலிருந்து வெளிவர உள்ளது. அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளும் ஆண் பெண் உறவுச் சிக்கல்களுமே இன்றைய தமிழ்க் கவிதையின் பாடுபொருளை பெருமளவுக்கு ஆக்ரமித்திருப்பதாகத் தோன்றுகிறது. தமிழ்நாட்டைப் போன்ற ஒரு பைத்தியக்கார வாழ்வியல் வெளியில் அதற்கான முழு நியாயமும் கூட இருக்கிறது. கலாச்சாரத்தை முற்றாக இழந்து விட்டு அதை இழந்தது கூடத் தெரியாமல் பணத்தையும் போலி சந்தோஷங்களையும் தேடி … Read more