அராத்து, ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்

சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்குப் பிறகு வந்த காமெடியில் வடிவேலு மட்டும்தான் என் மனதில் நிற்கிறார். பிறகு அவர் வில்லனாக மாறின பிறகு அவரும் மனதிலிருந்து நீங்கி விட்டார்.  ஆக, வாழ்க்கையில் காமெடிக்குப் பஞ்சமான நிலைமைதான்.  வாசகர் வட்டத்திலும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் யாரும் இல்லை.  சீனி ஒரு புத்திசாலி.  புத்திசாலிகளுக்குக் காமெடி வராது.  ஜக்கியும் புத்திசாலி.  அவருக்கும் காமெடி வராது.  இப்படிப்பட்ட காமெடி வறட்சி மிகுந்த பாலைவனத்தில் ஒரு சோலையாக விளங்குபவர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்.  எனக்கு … Read more

சென்னை வாழ்க்கை

இந்தியாவிலேயே சென்னைதான் மனிதர்கள் வாழவே முடியாத நகரமாக மாறியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா என்று தெரியாது. நான் முப்பத்தைந்து ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளாக இப்படித்தான் கதை. நான் எழுதப் போவது சென்னைவாசிகளுக்கும் சென்னைக்குக் குடியேறிய எழுத்தாள சிகாமணிகளுக்கும் பிடிக்காது. ஏனென்றால், அப்படி வந்த எழுத்தாளர்கள் ஏதோ சென்னையை ஒரு சொர்க்கலோகம் மாதிரி எழுதித் தள்ளுகிறார்கள். மைலாப்பூரில் ஒரு பிராமணர் (ஐயர்) முடிதிருத்தும் கடை வைத்திருக்கிறார். கர்னாடக இசை ஒலிக்கும். முகப்பில் மஹா பெரியவரின் பெரிய படம். … Read more

La ultima niebla

மேற்கண்ட ஸ்பானிஷ் தலைப்பின் நேரடி அர்த்தம் The Ultimate Fog. சீலே தேசத்தைச் சேர்ந்த Maria Luisa Bombal 1934இல் எழுதி வெளிவந்த இந்தக் கதையை சில ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் சற்று விரிவாக்கி The House of Mist என்ற தலைப்பில் வெளியிட்டார் போம்பல். விரிவாக்கிய பதிப்பை நான் படிக்கவில்லை. முப்பது பக்கங்களே கொண்ட இந்தக் கதையைப் போல் ஒரு கதையை நான் படித்ததில்லை. தமிழில் சி.சு. செல்லப்பா எழுதிய ஜீவனாம்சம் கதையை மட்டுமே லா … Read more

மைலாப்பூரில் கூழ் கிடைக்குமா?

ஃபேஸ்புக்கில் சீனி ஒரு மதிய வேளையில் கூழ் குடித்தது பற்றி எழுதியிருந்தார். என்ன ஆச்சரியம், நான் ஒரு நான்கு தினங்களாக கூழ் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இருபது வயது வரை கோதுமை, கேழ்வரகு பற்றி எதுவுமே தெரியாது. பார்த்தது கூட இல்லை. கம்பு பற்றி கேள்வியே பட்டதில்லை. இருபது வயதுக்கு மேல்தான் காட்பாடி பக்கம் வந்த போது அங்கே கேழ்வரகு கூழ் குடிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு நான் கூழுக்கு அடிமையாகி … Read more

பாராட்டும் திட்டும்

டியர் சாரு, ”நீங்கள் திட்டினால் திட்டு வாங்குபவர் அரிவாளால் தன் நெஞ்சைப் பிளந்து இதயத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு கதறுவார்கள்” என்று ஒருமுறை அராத்து நம்முடைய கலந்துரையாடலின்போது சொன்னார். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லாமல் மிகவும் மென்மையாகி விட்டீர்கள் என்றும் கூடவே சேர்த்துக்கொண்டார். ஆனால் இன்னொரு விஷயத்தை நான் கவனித்திருக்கிறேன். நீங்கள் யாரையாவது பாராட்டினால் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. சாமியாரிலிருந்து ஆரம்பித்து ”இப்போது” வரை அதுதான் நடக்கிறது. இந்த விதியிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே ஒருவர் … Read more