புத்தகங்களில் என் கையெழுத்து வாங்குவதற்கு…

நான் புத்தக விழாவுக்கு வர முடியாத நிலையில் இருக்கிறேன். எனவே உங்கள் புத்தகங்களில் என் கையெழுத்து வாங்குவதற்கு உங்களால் முடிந்தால் என் வீட்டுக்கு வரலாம். என் வீட்டைக் கண்டு பிடிப்பது மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி. கட்டிடத்தைக் கண்டு பிடிப்பதைப் போல. சாந்தோம் ஹை ரோடில் ஒரு பிரபலமான ஷோரூமின் மாடியில் இருக்கிறது என் அபார்ட்மெண்ட். எனக்கு ஒரு மெயில் போட்டால் முகவரியும் போன் நம்பரும் அனுப்புகிறேன். மாலை நான்கு மணியிலிருந்து எட்டரைக்குள் வந்தால் நலம். போன் நம்பரில் … Read more

மரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு

காந்தியின் அஹிம்சைத் தத்துவத்தை குறைந்த பட்சம் அவரது சீடர்களாவது பின்பற்றினார்கள்.  ஆனால் அவர்களுக்கும் அவ்வப்போது அதில் சந்தேகம் வந்து விடும்.  ஒரு குறிப்பிட்ட  சூழ்நிலையில் அஹிம்சையை எப்படிப் பிரயோகப்படுத்துவது என்பது குறித்த சந்தேகம்.  ஆள் ஆளுக்கு ஒரு யோசனை சொல்வார்கள்.  பிறகு எதிலுமே திருப்தி காணாமல் காந்தியையே நாடுவார்கள்.  அப்போது அவருக்கு வருத்தம் ஏற்படும். நான் போதிக்கும் தத்துவம் உங்கள் குருதி நாளங்களுக்குள் சென்றிருந்தால் இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் எப்படி ஹிம்சையைத் தவிர்த்து நடந்து கொள்வது என்று … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு & Inception

அன்பிற்குரிய சாரு, முகமூடிகளின் பள்ளத்தாக்கு வாங்கிவிட்டேன். புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த நண்பர் ஒருவர் புத்தகத்தை வாங்கி ஹைதராபாத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளார். கையோடு முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நீங்கள் நூல் அறிமுகத்தில் கூறியது போலவே, நாவலின் நடை அபாரமான கவித்துவத்துடன் நவீன கவிதையை வாசிப்பது போலவே உள்ளது. அத்துடன், நுண்ணிய விஷயங்கள்,  அற்புதமான உவமைகளுடன் கூடிய சித்தரிப்புகளாக மாறியுள்ளதும், வாசிப்பில் புதிய அனுபவத்தை அதாவது fresh dimension-ஐத் தந்துள்ளது. கிரிஸ்டோபர் நோலனின் Inception படத்தைப் போல ஒரு … Read more

இச்சா : ஷோபா சக்தி

ஷோபா சக்தியின் இச்சா படித்தேன். தமிழின் பத்து முக்கியமான நாவல்களில் இச்சாவும் ஒன்று என நிச்சயமாகச் சொல்வேன். இது பற்றி விரைவில் விரிவாக எழுதுவேன். இதுவரையில் அவர் எழுதிய நாவல்கள் அனைத்தும் இதை எழுதுவதற்கான பயிற்சியோ என்று தோன்றும் அளவுக்கு ஒரு அற்புதமான நாவல் இச்சா. ரசித்து ரசித்துப் படித்தேன். நாவலில் ஒரு இடம் வருகிறது: மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கும் என் உடல் எழுத்துகளாகவும் ஆன்மா அசப்பியக் குறிகளாகவும் வடிவம் கொள்கின்றன. அன்பும் வெறுப்பும் காதலும் … Read more

27 feb 2021 zoom meeting 7 pm

நாளை இந்திய நேரம் மாலை ஏழு மணிக்கு சேனன் எழுதிய சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் என்ற நாவல் பற்றிப் பேசுகிறேன். லண்டனில் உள்ள திரள் சமூக கலை இலக்கியக் குழுமம் நடத்துகிறது. நேரில் நடந்திருந்தால் பெரிய அடிதடி ரகளை எல்லாம் அரங்கேற்றம் ஆகியிருக்கும். நான் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குத் தகுந்த பாதுகாப்போடுதான் போவது வழக்கம். ஒருமுறை புத்தக விழாவில் உயிர்மை நடத்திய கூட்டத்தில்தான் மிகப் பெரிய ரகளை நடந்து எனக்குக் கொலை மிரட்டலும் விடப்பட்டது. இது ஸூம் … Read more

சிங்கப்பூர்

என் மகன் கார்த்திக் மரீன் எஞ்ஜினியர் என்பதால் அவன் போகாத நாடு இல்லை.  ஆனால் அவன் வசிக்கும் ஊர் மும்பை.  என்னை அடிக்கடி மும்பை வரச் சொல்லுவான்.  நான் மும்பைக்கே சென்று விட வேண்டும் என்பது அவன் ஆசை.  அவன் வீட்டில் அல்ல. தனி விட்டில்தான்.  நான் அதற்கு அவனிடம் பதில் சொல்ல மாட்டேன்.  அவந்திகாவிடம் சொல்வேன்.  ”எங்காவது ஐரோப்பிய நகரிலிருந்து கொண்டோ அமெரிக்காவில் இருந்து கொண்டோ கூப்பிட்டால் இன்றைய தினமே என் ஜாகையை மாற்றிக் கொண்டு … Read more