27 feb 2021 zoom meeting 7 pm

நாளை இந்திய நேரம் மாலை ஏழு மணிக்கு சேனன் எழுதிய சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் என்ற நாவல் பற்றிப் பேசுகிறேன். லண்டனில் உள்ள திரள் சமூக கலை இலக்கியக் குழுமம் நடத்துகிறது. நேரில் நடந்திருந்தால் பெரிய அடிதடி ரகளை எல்லாம் அரங்கேற்றம் ஆகியிருக்கும். நான் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குத் தகுந்த பாதுகாப்போடுதான் போவது வழக்கம். ஒருமுறை புத்தக விழாவில் உயிர்மை நடத்திய கூட்டத்தில்தான் மிகப் பெரிய ரகளை நடந்து எனக்குக் கொலை மிரட்டலும் விடப்பட்டது. இது ஸூம் சந்திப்பு என்பதால் வன்முறைக்கு வழியில்லை. பேச விடாமல் ரொம்பத் தகராறு செய்தால் கட் பண்ணி விட்டுப் போக வேண்டியதுதான். நஷ்டம் எனக்கு இல்லை.

இந்தச் சந்திப்பில் என் உரை மிக முக்கியமானதாக இருக்கும். தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான நாவல்கள் வருவது குறைவு. மேலும் சேனனின் நாவல் போர்க்காலப் பதிவு. நாவல் குறித்து எனக்கு மிகவும் எதிர்மறையான கருத்துக்களும் அதே சமயம் நாவலைப் பற்றி ரொம்ப சிலாக்கியமான கருத்துக்களும் ஒருங்கே சொல்ல இருக்கின்றன. எனவேதான் என் பேச்சு முக்கியமானது. சந்திப்புக்கு வரும் முன் நான் மொழிபெயர்த்த பெய்ரூட் கொடுங்கனவுகள் நாவலிலிருந்து சில பகுதிகளைப் படித்து விட்டு வரவும். படிக்காதவர்கள் வர வேண்டாம். இந்தத் தளத்தில் அதை வெளியிட்டிருக்கிறேன்.

கூட்டத்தில் கலந்து கொள்ள விவரங்கள்:Zoom ID 346 719 5100

Password: 95100