எமிரேட்ஸ்/அமீரகம் நண்பர்களுக்கு…

அமீரகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலும், லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலும் தேவைப்படும் அமீரக நண்பர்கள் எனக்கு எழுதினால் அதை அமீரகத்தில் உள்ள ஒரு நண்பருக்கு அனுப்பி வைக்க முடியும். எத்தனை பிரதிகள் வேண்டும் என்ற விபரம் தெரிய வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வாங்காமல் இருந்தால் புத்தகங்கள் அமீரகத்திலேயே தங்கி விடும். அந்த சிரமத்தை மட்டும் அளிக்கக் கூடாது. இதற்கான விநியோக விஷயங்களைச் செய்ய என் நண்பர் ஒருவர் இசைந்துள்ளார். அவர் இலக்கியவாதி … Read more

லத்தீன் அமெரிக்க சினிமா

உலக சினிமா என்றால் அதிக பட்சமாக நாம் ஒருசில நாடுகளையே கவனிக்கிறோம்.  குறிப்பாக, ஹாலிவுட், கொரியா, ஜப்பான், மற்றும் ஒரு சில பிரபலமான ஐரோப்பிய இயக்குனர்கள்.  இவைதான் இந்தியாவில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் சுற்றிச் சுற்றி வருகின்றன.  திரைப்படக் கல்லூரிகளில் கூட மற்ற நாடுகளின் திரைப்படங்கள் பற்றிப் பேசப்படுவதில்லை.  மேலும், ஆவணப் படங்கள் என்று ஒரு தனிப் பிரிவே இருக்கிறது.  சினிமா பற்றிய நம்முடைய ஒட்டு மொத்த அனுபவத்தையே மாற்றக் கூடியவை ஆவணப் படங்கள். Ulrike … Read more

பிஸ்மில்லா கானும் முகமூடிகளின் பள்ளத்தாக்கும்…

முகமூடிகளின் பள்ளத்தாக்கு இன்று அச்சுக்குப் போய் விடும்.  எல்லா எழுத்தாளர்களுக்குமே தாங்கள் எழுதிய நாவல்தான் தங்கள் குழந்தை மாதிரி.  ஆனால் எனக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு அப்படி அல்ல.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், அப்படி ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் கண்டதில்லை.  இதை நான் மட்டுமல்ல, படிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுவேன்.  ஆஷிஷ் நந்தியும் அதையேதான் சொல்லியிருக்கிறார்:  இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை.   நான் … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

முகமூடிகளின் பள்ளத்தாக்கு வேலை முழுமையாக முடிந்து விட்டது. அச்சகத்தில் ஒத்துழைப்பு நல்கினால் இந்தப் புத்தக விழா முடிவதற்குள் நாவல் உங்கள் கைகளுக்குக் கிடைக்கலாம். நாவலை எடுத்தால் முடித்து விட்டுத்தான் கீழே வைக்க முடியும். ஜெட் வேகத்தில் பறக்கும். நாவலை ஒரு பத்து வயதுச் சிறுமியிலிருந்து நூறு வயது முதியவர் வரை படிக்கலாம். படித்தால் உங்களால் எக்காலத்திலும் மறக்கவே முடியாத நாவல். தாமரைச் செல்வியும் நானும் இணைந்து செய்த மொழிபெயர்ப்பு. அடுத்த வேலைகளில் முழுமையாக இறங்கி விட்டேன். முகமூடிகளின் … Read more

ஒரு பிரபல எழுத்தாளரின் புதிய பதிப்பகம்

எஸ். ராமகிருஷ்ணன் தனக்கென்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார்.  இன்னும் பல எழுத்தாளர்கள் தங்களுக்கென்று பதிப்பகம் வைத்திருக்கிறார்கள்.  நானோ குடிசைத் தொழில் மாதிரி என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்து வந்து கொண்டிருந்தேன், மனுஷ்ய புத்திரன் உயிர்மை ஆரம்பிக்கும் வரை.  ஒருவேளை அவர் அதற்கு முன்பு பணியில் இருந்த பதிப்பகத்திலேயே தொடர்ந்திருந்தால் ராம்ஜியும் காயத்ரியும் ஸீரோ டிகிரி பதிப்பகம் ஆரம்பிக்கும் வரை கூட என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  என்னுடைய நிலைமை அப்போது எப்படியிருந்தது என்றால் – … Read more

இஞ்சி சுக்கு கடுக்காய்

இஞ்சி சுக்கு கடுக்காய் என்ற புத்தகத்தைப் பிழை திருத்தம் செய்து ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்குக் கொடுத்து விட்டேன். 2012-2013 காலகட்டத்தில் எழுதியவை. இதை சப்ஜெக்ட் வாரியாகத் தொகுப்பது சாதாரண வேலை இல்லை. ஒரே சப்ஜெக்டாகத் தொகுக்க வேண்டும். தலை வெடித்து விடும். ஸ்ரீராம்தான் தொகுத்தார். அந்தத் தொகுப்பில் இந்தப் பாடல் பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு வயலினை விட ஜாஸ் மற்றும் பியானோ இரண்டும் பிடித்தவை. இந்திய வாத்தியங்களில் நாதஸ்வரம், ஷெனாய்.