தம்ரூட் – சிறுகதை – மேலும் சில எதிர்வினைகள்

தருமபுரி, 12..03..21 சற்றே நீண்ட கடிதம். பொறுத்துக் கொள்ளுங்கள். அன்புள்ள சாரு, இக்கடிதம் பல நாட்களுக்கு முன்பாகவே தங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியது.  என்னுடைய 59 வயதில் நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தினை எழுதுகிறேன். தங்களது வலைப்பக்கத்தில்தான் எனது நாள் துவங்குகிறது. இது எனது வழக்கம். சில நாட்களுக்கு முன்பாக வளனது கடிதத்தினைப் படித்தேன். அது அளித்த உந்துதலே இக்கடிதம். தங்களது எழுத்து யாருக்கு வாழ்வின் எப்பக்கத்தையெல்லாம் திறக்க வைக்கிறது என்பதற்கு வளனின் கடிதம் ஒரு சிறந்த உதாரணம். … Read more

தம்ரூட் சிறுகதை – சில எதிர்வினைகள்

ஸ்ரீராம், என் சிறுகதைகளைத் தொகுக்கும்போது அந்தக் கதைக்கு வந்த எல்லா எதிர்வினைகளையும் தொகுத்து விடுங்கள்.  தொகுப்போடு வந்தால் சரியாக இருக்கும்.  இன்னும் பல எதிர்வினைகள் வந்தன.  அவற்றில் அ. மார்க்ஸ் அவர் தளத்தில் எழுதியிருந்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்.  என்ன இருந்தாலும் பின்நவீனத்துவவாதி அல்லவா? * * * இன்று மாலை சாரு நிவேதிதாவின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள  “நமக்கு வாய்த்தது” என்ற சிறுகதையில் சில வரிகள்: * * * “ஆனா அது ஒரு பெரிய வேலை.  அ. … Read more

ரத்தனங்கள் பற்றி ரத்தினம் சொன்ன கதை

இந்தக் கதைக்கு நான் a wonderful world of gems என்றுதான் தலைப்பு வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் அதில் இரண்டு பிரச்சினைகள் இருந்தன.  சீனியிடம் நான் அடிக்கடி அல்லது தினமுமே ஆங்கிலம் கலவாமல் தமிழ் எழுதுங்கள் என்று சொல்லி வருகிறேன்.  அல்லது சண்டை போட்டு வருகிறேன்.  என் எழுத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், நான் மொழித் தூய்மைவாதி அல்ல என்று.  ஆனாலும் தேவையில்லாத இடங்களில் – அருமையான தமிழ் வார்த்தை இருக்கும் இடங்களில் கூட … Read more

நல்ல பேரை வாங்க வேண்டும், பிள்ளைகளே…

அன்புள்ள அப்பா, தம்ரூட் சிறுகதை வந்தவுடன் வாசித்துவிட்டேன். சமீபமாக உங்களுடைய சிறுகதைகள் அனைத்தும் – இதற்கு முன்பு எழுதியதும் – எப்போதும் என்னுடன் பயணித்துக் கொண்டேயிருக்கும். இந்தச் சிறுகதையைப் படித்தவுடன் எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வேலைப்பளு அதிகம். இப்போதுகூட இதை வகுப்புகளின் இடைவெளியில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய எழுத்துகளைக் குறித்து நான் சந்திக்கும் எல்லோரிடமும் உரையாடிக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துகளை உங்களுக்கான துதிப்பாடல் என்றே நினைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் பூனைகள் குறித்தும் நாய்கள் குறித்தும் … Read more

சில கடிதங்களும் பதிலும்…

அன்பு மிக்க சாரு, உங்களுடைய நேற்றைய சிறுகதை தம்ரூட் மற்றும் இன்றைய சிறுகதை நமக்கு வாய்த்தது படித்தேன். இது முற்றிலும் தன் அனுபவக் கதைகள்.. நேரடி சாட்சியமாக, காட்சியாக எழுதுவது.. இது முற்றிலும் கிட்டத்தட்ட உண்மையும், சில புனைவுகளும் சேர்ந்து வந்திருக்கிறது… இது படிப்பதற்கு எந்தத் தடையும் இல்லாமல் செல்லும் தன்மையுடைய சிறுகதைகள்… கிட்டத்தட்ட பிற்காலத்தில் எடுத்துப் பார்த்தால் ஒரு ஆவணமாக தெரியும்.. நகைச்சுவை உணர்வும் வருவது மிக அழகாக இருக்கிறது… நாளைய சிறுகதைக்காக காத்திருக்கிறோம்…  முத்து … Read more

நமக்கு வாய்த்தது (சிறுகதை)

நேற்று தம்ரூட் சிறுகதையை எழுதிக் கொண்டிருந்தபோது யாரோ ஒரு நண்பர் ஜெயமோகன் எழுதிய படையல் சிறுகதையை அனுப்பியிருந்தார்.  என் கதையை நிறுத்தி விட்டு படையலைப் படிக்க ஆரம்பித்தேன்.  இன்று காலை பார்த்தால் புதிதாக வேறு ஒரு சிறுகதை.  பிறகுதான் தெரிந்தது, அவர் தினமும் ஒரு சிறுகதை எழுதுகிறார் என்பது.  ஆச்சரியம் அது அல்ல.  படையல் சிறுகதைக்கு இன்று வெளியாகியிருந்த ஒரு டஜன் கடிதங்கள்.  எல்லா கடிதங்களுமே கதையை விடப் பெரியது. ஒரே ஒரு கடிதம்தான் சின்னது.  அது … Read more