180. நாளைய சந்திப்பு (2)

ஒரு முக்கியமான விஷயத்தை எழுத மறந்து போனேன்.  உங்களுக்கு என்ன வேண்டும், சொன்னால் வாங்கி வந்து கொடுத்து விட்டுக் கிளம்புகிறேன் என்று மனோ கேட்டபோது எதுவுமே ஞாபகம் வரவில்லை.  ஆனால் அவர் கிளம்பிய அடுத்த கணம் ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தது.  நான் ஒரு தஞ்சாவூர்க்காரன் என்பதால் ஏற்பட்ட பழக்கம்.  இன்னமும் போகவில்லை.  எப்போதும் போகாது.  ஏனென்றால், நான் எதற்குமே அடிக்ட் ஆவதில்லை.  பயங்கரமான அடிக்‌ஷன் குணமுள்ள கஞ்சாவுக்கே அடிக்ட் ஆகவில்லை.  உணவில் மட்டும் காஃபிக்கும் … Read more

179. நாளைய சந்திப்பு

பாதிரியாரான வளன் நேற்றைய பதிவைப் படித்து விட்டு, குடும்பம் என்றால் இத்தனை பிரச்சினை இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.  அவந்திகாவின் version-ஐ அவன் கேட்கவில்லை.  அதைக் கேட்டால் இன்னும் பயங்கரமாக இருக்கும்.  “எழுத்தாளர்களையே கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது.  நண்பர்களாகப் பழகலாம்.  கல்யாணம் மட்டும் பண்ணிக் கொள்ளவே கூடாது” என்பாள்.  ”கடவுளே மனிதனாகப் பிறந்து ஒரு கணவனாக வாழ்ந்தால் எப்படி வாழ்வானோ அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்தா இப்படிச் சொல்கிறாய்?  சரி, அப்படி உனக்கு என்னதான் … Read more

178. இசை கேட்கும் காலம்

என்னுடைய புதுமைப்பித்தன் உரைகள் இரண்டும் எல்லோருக்கும் வந்து சேர்ந்து விட்டதா?  இல்லையென்றால் எழுதுங்கள். பதினெட்டாம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை ஏழு மணிக்கு ஸூமில் என்னைச் சந்திக்க விரும்புபவர்கள் எனக்கு எழுத வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ஏனென்றால், இது ஒரு கலந்துரையாடல் என்பதால் பெரும் கூட்டமாக இருந்தால் யாருமே உரையாடவோ பேசவோ முடியாது.  ஒரு இருபத்தைந்து பேர் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.  அதனால் பாஸ்வேர்ட் போன்ற தகவல்களை பொதுவில் வைக்கவில்லை.  வர விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டும் அனுப்புகிறேன்.  … Read more

177. ஓஷோ

அன்புள்ள சாரு, நான் சமீபத்தில் உங்களது சில புத்தகங்களை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் மூலம் வாங்கினேன். அவற்றில் ஃபேன்ஸி பனியன் மற்றும் பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 1 இரண்டையும் படித்து முடித்து விட்டேன். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்து இருந்தன. ஃபேன்ஸி பனியன் நாவல் மிகவும் புதுமையாக இருந்தது. நான் இதுவரை பல நாவல்கள் படித்திருந்தாலும் இது வித்தியாசமானதாக தோன்றியது. இது சுயசரிதை போலவும் இருக்கிறது அதே சமயம் புனைவு போலவும் இருக்கிறது. எது எவ்வளவு … Read more

176. பண உறவு

என் நைனா ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாராக இருந்து உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார்கள்.  ஆறு குழந்தைகள்தான் வாழ்வின் ஒரே பொழுதுபோக்கு.  ஒரே இன்பம்.  பைசா பைசாவாகச் சேர்த்து, உலக மகா கஞ்சனாக வாழ்ந்து சென்னை கௌரிவாக்கம் அருகே ஒரு ரெண்டு கிரௌண்டு நிலம் வாங்கி குடிசை போட்டுக் கொண்டு இன்பமாக வாழ்ந்தார்கள்.  என் கடைசித் தம்பிக்கு சுழி சரியாக இல்லாததால் உருப்படவில்லை. அதனால் அந்த நிலத்தையும் வீட்டையும் அவன் பெயரிலேயே எழுதி வைத்து விட்டு இறந்து போனார்கள்.  கூடவே அம்மாவும் … Read more

பூச்சி 175: ஆஞ்சநேயர்

S.Y. Krishnaswamy எழுதிய Thyagaraja: Saint and Singer என்ற புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  யாருக்கும் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் எழுதுங்கள்.  கிண்டிலில் கிடைத்தாலும் பரவாயில்லை.  அல்லது, ஏதாவது நூலகத்தில் இருக்கிறதா?  இசை தொடரை இன்றும் எழுத நிறைய உத்வேகம் கிடைத்தது.  இசை தொடருக்குக் கிடைத்தது போன்ற உற்சாகமான பாராட்டு இதுவரை என் வாழ்நாளில் பார்த்திராதது.  இன்றும் ஒரு பன்னிரண்டு மணி நேரக் கட்டுரைக்கு வேலை இருந்தது.  அசோகாவில் உட்கார்ந்து விட்டேன்.  மார்ச்  கெடு என்று … Read more