Pithy thoughts – 17

பூஜ்யம் ஒன்று பூஜ்யமும் ஒன்றும் பூஜ்யம் பூஜ்யமும் ரெண்டும் பூஜ்யம் பூஜ்யமும் மூணும் பூஜ்யம் பூஜ்யமும் பூஜ்யமும் பூஜ்யம் ஒன்றும் பூஜ்யமும் ஒன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று ஒன்றும் ரெண்டும் ஒன்று ஒன்றும் மூணும் ஒன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று ஒன்று பூஜ்யம் ஒன்று பூஜ்யம் ஒன்றுக்குள் பூஜ்யம் பூஜ்யத்துக்குள் ஒன்று பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் ஒன்று ஒன்று ஒன்று

Pithy thoughts – 16

பிரம்மனின் கனவில் மழை பெய்து கொண்டிருக்கிறது மழையில் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது அழிந்து போன உலகத்தில்   திரும்பவும் தலையெடுக்கிறது காலம் பிரம்மனின் கனவில் மேகங்கள் திரள்கின்றன…

Pithy thoughts – 15

நேற்று வந்த வெர்னரின் கடிதத்தைப் படித்ததிலிருந்து பாவ்லோ கொய்லோவின் சாகசத் தனிமை ஞாபகத்தில் வந்து மோதுகிறது தென் ஃப்ரான்ஸில் மனித வாடையற்ற ஒரு நிலப்பகுதியில் ஆறு மாதம் பிறகு ப்ரஸீலில் குடும்பத்தோடு ஆறு மாதம்  வால்டன் வனத்தில் தோரோ வாழ்ந்தது இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் இரண்டு நாட்கள் வனம் அலுத்ததும் நகரத்துக்குச் சென்று விட்டார் தோரோ என் ஜெர்மானிய நண்பன் வெர்னர் முப்பத்து மூன்று வயது  ஆய்வு மாணவன் குடும்பமில்லை உற்றமில்லை சுற்றமில்லை தேசமுமில்லை பணம் … Read more

Pithy thoughts – 14

ஆயுதங்கள் மாறின தேசங்கள் மாறின குதிரை விமானமாயிற்று ஆனாலும் காதலில் தோல்வியுற்ற மனிதன் இன்னமும் மதுவைத்தான் நாடி ஓடிக் கொண்டிருக்கிறான் கணவனின் துரோகம் தாங்க முடியாத பெண் இன்னமும் அரளி விதையைத்தான் அரைத்துக் கொண்டிருக்கிறாள் இன்னமும் ஒரு குழந்தை தாயைத் தேடி அழுது கொண்டிருக்கிறது

172. டிஸம்பர் 18

அந்நியன் சமாச்சாரத்தை இனி ஒருபோதும் எழுத மாட்டேன்.  அது என் வாசகர்களுக்குக் கொஞ்சம் மனக்கிலேசத்தை அளிப்பதாக அறிகிறேன்.  இவர் ஏன் இதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதாகவே பல கடிதங்கள் வந்துள்ளன.  இனி அந்த சப்ஜெக்டைத் தொட மாட்டேன்.  அதுவே கடைசி.  நான் தீபாவளி அன்று ஊரில் இருக்கத் தேவையில்லை; பொங்கலுக்கும் இருக்க வேண்டாம்; ஏன், ஊரே கொண்டாட்டமாய்க் கிடக்கும் ஜனவரி ஒன்று கூட ஊரில் இல்லாமல் போனால் அத்தனை பிரச்சினை வராது.  ஆனால் டிசம்பர் 16 நான் … Read more

Pithy thoughts – 13

பால்வீதி பார்க்க அந்த அராபியப் பாலைவனத்துக்கு சகாக்களுடன் சென்றிருந்தேன் அரபுச் சட்டத்துக்கு அஞ்சி மதுபானம் எடுத்துப் போகவில்லை ஆனாலும் கில்லாடி பிரபு எனக்காகக் கொண்டு வந்திருந்த ஒரே ஒரு போத்தலை தீர்த்தம்போல் குடித்துத் தீர்த்தோம் எல்லாரும் மூத்தவன் என்பதால் என் பங்கு அதிகமாச்சு மணலில் படுத்தால் தேள் வரும் பாலைவனத் தேள் உயிரைக் குடிக்குமென்று உள்ளே போகச் சொல்லி கூடாரத்தைக் காண்பித்தான் பிரபு பால்வீதிக்கு முன்னால் உயிரும் மயிரும் ஒண்ணு என்று சொல்லி துண்டை உதறி மணலில் … Read more