Zoom meeting

வரும் 31-ஆம் தேதி (31.5.2020) இந்திய நேரம் காலை ஆறு மணி முதல் எட்டரை வரை வாசகர்களை Zoom meeting-இல் சந்திக்க இருக்கிறேன்.  இதுவரை மாயா இலக்கிய வட்டம் (சிங்கப்பூர்) சார்பாக நடந்த சந்திப்புகள் இந்திய நேரம் மாலை மூன்று மணிக்கு நடந்ததால் அதில் அமெரிக்க வாசகர்கள் கலந்து கொள்ள இயலவில்லை.  அங்கே அவர்களுக்கு அதிகாலையாக இருக்கும்.  அதை உத்தேசித்து அவர்களுக்காகவே இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  எட்டரைக்கு மேல் இங்கே cat factory ஆரம்பமாகி விடும்.  பாத்திரம் … Read more

பூச்சி 61

மது விற்பனைக்குத் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வெற்றியும் பெற்ற ஃபாஸிஸ்டுகள் இப்போது நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவார்களா?  உச்சநீதி மன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்று சொல்லி விட்டது.  எங்கேயாவது ஒரு நாகரீகமான சமூகத்தில் மதுக்கடைகளை மூடச் சொல்லி நீதிமன்றத்தில் தடை வாங்குவார்களா?  இதைச் செய்தவர்களில் ஒருவர் சினிமா உலகில் புத்திஜீவி என்று கருதப்படும் கமல்ஹாசன்.  இவர்கள் அதற்கு சொன்ன காரணம், கொரோனா ஊரடங்கு காலத்தில் கடையில் குடிகாரர்களெல்லாம் கூட்டமாகக் கூடுகிறார்கள் என்பது.  ஊரடங்கு … Read more

பூச்சி 60

இப்போதெல்லாம் ஒரு புதிய வழக்கம் உண்டாகி இருக்கிறது.  ஆனால் அதற்கு முன்னால் வேறொரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.  என் நண்பரின் மகன் – அவன் எனக்கும் நண்பன் தான் – அங்கிள், தமிழ்ல எத்தனை ரைட்டர்ஸ் இருப்பிங்க என்று கேட்டான்.  வாஸ்தவத்தில் அவன் என்னைக் கேட்ட கேள்விகளையெல்லாம் மறந்து விடாமல் தொகுத்திருந்தால் அராத்துவின் ஆழி கதைகளைப் போல் கேஷவின் கேள்விகள் என்று ஒரு புத்தகமே கொண்டு வந்திருப்பேன்.  தோன்றாமல் போயிற்று.  அத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறான்.  அவனுடைய நண்பனும் … Read more

பூச்சி 59

இத்தனைக்கும் அந்த மக்கய்யங்கார் தி. ஜானகிராமனையெல்லாம் படித்திருக்கிறதுதான். படித்தும் இப்படி மக்காக இருப்பதுதான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவர் அண்ணனோ தம்பியை ஜீனியஸ் என்கிறார்.  எனக்கு என்னவோ அண்ணன்தான் புத்திசாலி என்று தோன்றுகிறது. அண்ணனோடு மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் சலிப்பே தோன்றாது.  அடிக்கடி தனது நாத்திகக் கருத்துகளை உதிர்ப்பார்.  அதை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன்.  தியாகய்யர் தஞ்சாவூர் தெருக்களில் பிச்சை எடுத்தார் என்று சொல்லி இருந்தது அல்லவா, தி. ஜானகிராமன் மோகமுள்ளில் … Read more

பூச்சி 58

இப்போது நான் சொல்லப் போவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்; ஒப்புக் கொள்ளவே முடியாததாக இருக்கலாம்; வக்கிரமான கருத்தாகத் தோன்றலாம்; உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கல்வியோ படித்த புத்தகங்களோ உங்களுக்குக் கற்பிக்காததாக இருக்கலாம்; சமூகமோ தலைவர்களோ ஆன்மீகவாதிகளோ நீதி நூல்களோ இதை உங்களுக்குச் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை.  எனவே நான் ஏதோ உளறுகிறேன் என்றோ சமூக விரோதமான கருத்து என்றோ தோன்றலாம்.  ஆனால் இதை நான் பல காலமாக என் கட்டுரைகளில் ஆங்காங்கே சொல்லிக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.  இன்று ஒன்றும் புதிதாகச் … Read more

பூச்சி 57

அழகராஜா நேற்று கேரளா பற்றி ஒரு கேள்வி கேட்டார்.  அதற்கு நான் கேரளத்தில் ஆணாதிக்கம் அதிகம் என்றேன்.  உடனே அவர் “இலக்கிய வாசிப்பு மிகுந்த அந்த நாட்டில் எப்படி ஆணாதிக்கம்?” என்ற சந்தேகத்தை எழுப்பினார்.  அதற்கு நான் சொன்ன பதில்: தமிழ்நாடு அளவுக்குக் கேரளத்தில் சீரழிவு மோசம் இல்லை.  அவ்வளவுதான்.  இலக்கியம் ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. இலக்கியம் நெருப்பைப் போல.  காட்டையும் அழிக்கும்.  காட்டில் பயணம் செய்ய வெளிச்சமாகவும் விளங்கும்.  நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது.  ஆனால் ஒட்டு மொத்த … Read more