பூச்சி – 13

சரி, இப்போதாவது இந்த எழுத்தாளர் மேட்டருக்கு வருவோம்.  அது ஒன்றுமில்லை.  முகநூலில் பிரபலமாக இருக்கும் நம் ராஜ் சிவா இருக்கிறாரே, அவர் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  என் குடும்பத்தில் ஒருத்தர்.  அவரோடுதான் இப்போது பஞ்சாயத்து.  அதை அவர் எழுதிய அன்றே போட்டிருக்க வேண்டும்.  நேரம் கிடைக்கவில்லை.  ”இப்போ புரிகிறதா? எந்தவொரு இலக்கியவாதியோ, எந்தவொரு எழுத்தாளனோ, எந்தவொரு நடிகனோ, எந்தவொரு அரசியல்வாதியோ, எந்தவொரு மதத் தலைவனோ, எந்தவொரு ஆன்மீகச் சாமியாரோ, எந்தவொரு கோடீஸ்வரனோ… யாருமே பெரியவனில்லை. நீ அவன் … Read more

பூச்சி – 12

கஎழுதும் வேகத்தில் பல நுணுக்கங்கள் விடுபட்டு விடுகின்றன.  அதெல்லாம் புத்தகமாக வரும்போதுதான் சரி செய்யப்படும்.  இப்போது எல்லாமே அவசரம்.  ந. முத்துசாமி தன்னுடைய ஒவ்வொரு கதையையும் பல முறை திரும்ப எழுதுவாராம்.   பல முறை என்றால் என்ன அர்த்தம்?  உங்கள் மனதில் என்ன எண்ணிக்கை வருகிறது?  அஞ்சு?  பத்து?  ம்ஹும்.  திருப்தி வரும் வரை எழுதிக் கொண்டே இருப்பாராம்.  நீர்மை கதையை அவர் அப்படி 70 முறை திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார்.  இப்போதோ நாம் ஹாயாக தட்டச்சு … Read more

பூச்சி – 11

ஆஹா, மணி எட்டரை ஆகியிருக்கிறது.  இதோ எழுத வந்து விட்டேன்.  இன்னும் ஃபாக்டரி திறக்கவில்லை.  அது வரை தட்டச்சு செய்து கொண்டிருக்கலாம்.  நேற்று இரவும் பதினொன்றரை மணிக்கு அவந்திகா ஏகப்பட்ட பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.  என்னம்மா இது என்று வருத்தத்துடன் கேட்டேன்.  ”ஆமாம்ப்பா, நீ காலையில் பாத்திரம் தேய்ப்பதைப் பார்க்கும் போது எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது.  இப்பவே முடிச்சுடறேன்.” இம்மாதிரி தருணங்களும் உண்டு.  ஆனாலும் ஃபாக்டரி ஃபாக்டரிதான்.  ஸ்விக்கிக்கு வீட்டுக்குள் அனுமதி இருந்தால் இத்தனை கஷ்டம் … Read more

பூச்சி – 10

இப்போது மணி 3.30.  மதியம்.  காலையில் ஐந்து மணிக்கு எழுந்து இப்போதுதான் கணினியில் தட்டச்சு செய்ய அமர முடிந்தது.  இதுவரை என்ன வேலை செய்தேன்?  ’நாய்க்கு நிய்க்க நேரமில்லை; செய்ய வேலையும் இல்லை’ கதைதான்.  எடுபிடி வேலையிலேயே நாளில் பாதி நேரம் போய் விடுகிறது. இத்தனைக்கும் இன்று சமையல் வேலை வேறு இல்லை.  நேற்று வைத்த சாம்பார், நேற்று வைத்த ரசம், நேற்று வறுத்த உருளைக் கிழங்குக் கறி – இதைக் கொண்டே ஒப்பேற்றிக் கொண்டேன். சாப்பாட்டு … Read more

பூச்சி – 9

9. El Dragon: Return of a Warrior இது சீனப் படம் அல்ல.  மெக்ஸிகன் ட்ரக் கார்ட்டெல் தொடர்.  ஒரு சீஸன் தான் வந்துள்ளது.  இரண்டாவது சீஸனுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் பல லட்சம் மெக்ஸிகர்களோடு அடியேனும் சேர்கிறேன். 10. Money Heist எல்லோருக்கும் பிடித்த இந்த சீரீஸ் எனக்கும் பிடித்ததுதான்.  இல்லையென்று சொல்ல மாட்டேன்.  ஆனால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் ரகம்தான்.  அதற்கு மேல் ஒன்றுமில்லை.  செம விறுவிறுப்பு.  நான் மேலே குறிப்பிட்ட சீரீஸ் … Read more

பூச்சி – 8

இந்தத் தொடருக்கு பூச்சி என்று தலைப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள்… இந்த கொரோனா தொடரில் இது எட்டாவது அத்தியாயம்.  தொடர்ச்சியில் குழப்பம் நேர்ந்தால் முந்தின ஏழு அத்தியாயங்களையும் படித்து விடுங்கள்.  முதலில் உச்சரிப்பு.  கொரோனா என்ற வார்த்தையின் மூலம் லத்தீன்.  லத்தீனில் one or more circles of light seen around a luminous object என்று பொருள்.  ஒளிரும் தன்மை கொண்ட வட்டமான பொருளைச் சுற்றித் தெரியும் வட்டம்.  இன்னொரு பொருள், முடி.  அரசர்களுக்கு முடி … Read more