ஸ்ரீவில்லிப்புத்தூர் (1)

சாரு ஆன்லைனில் எழுதுவதற்காக நிறைய விஷயங்கள் காத்துக் கிடக்கின்றன.  ஆனால் நான் வேறொரு முக்கியமான வேலையில் இருக்கிறேன்.  தேகம் நாவல் ஆங்கிலத்தில் தயாராகி விட்டது.  Corpus. ஸாம், டாக்டர் ராமானுஜம் இருவரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  எடிட் செய்தவர் காயத்ரி.  பிரசுரத்துக்குப் போகும் முன் நான் அதைச் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  மொழிபெயர்ப்பு பிரமாதமாக உள்ளது.  மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை என்பதுதான் முக்கியம்.  இதை சாத்தியமாக்கிய இந்த மூவருக்கும் என் நன்றி. இந்த நிலையில் புத்தக விழாவின் போது உங்களுடைய புதிய … Read more

உங்களுக்கு என் பிறந்த நாள் பரிசு

மழை புயல் எப்படி இருந்தாலும் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு நடைப் பயிற்சிக்குச் சென்று விடும் நான் கடந்த இரண்டு தினங்களாகப் போகவில்லை.  என் உடல்நலத்தைப் பேணும் சித்த மருத்துவர் எனக்குக் கடவுளைப் போன்றவர்.  அவர் தொலைபேசியில் அழைத்த போது எடுக்கவில்லை.  என்னைப் பற்றி நன்கு அறிந்த அவர் வேறொரு தொலைபேசியிலிருந்து அழைத்தார்.  அடுத்த வாரம் பேசுகிறேன், மன்னியுங்கள் என்று சொல்லி வைத்து விட்டேன்.  காரணம், ஸீரோ டிகிரியைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  என்ன ஆச்சரியம் என்றால், 20 ஆண்டுகளுக்கு … Read more

வாருங்கள்…

நண்பர்கள் அனைவரையும் டிஸம்பர் 18 அன்று மஹாபலிபுரத்துக்கு அழைக்கிறேன்.  இதைத் தனிப்பட்ட அழைப்பாகக் கொள்ளவும்.  உங்கள் அனைவரோடும் சாவகாசமாக உரையாட வேண்டும் என்பதே என் அவா.  இந்த ஆண்டு எனக்கு ஒரு சிறப்பான ஆண்டு.  என்னுடைய ஏதேனும் ஒரு நாவல் இந்தப் பதினெட்டாம் தேதிக்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றால் 18-ஆம் தேதி தற்கொலை செய்து கொள்வேன் என்று எழுதியிருந்தேன்.  இரண்டு புத்தகங்கள் தயாராகி ஒரு புத்தகம் வெளிவந்தும் விட்டது.  morgue keeper அமேஸான் கிண்டிலில்.  இன்னொன்று, தேகம் … Read more

கும்கி

இன்று நண்பர் கார்த்திக்குடன் கும்கி போனேன். படம் பிடிக்கவில்லை. மைனா அளவுக்கு இல்லை. இமான் தான் போட்டு சாகடித்து விட்டார். இமானை கொஞ்சம் டீ குடிக்க வெளியே அனுப்பி இருந்தால் கூட படம் பிழைத்து இருக்கும். பொறுமைசாலிகள் ஒருமுறை பார்க்கலாம். நீதானே என் பொன் வசந்தம் சாய்ந்து சாய்ந்து கேட்டேன். எனக்குப் பிடித்த யுவனின் குரலாக இருந்தும் கூட பாடல் பிடிக்கவில்லை. யுவன் இப்படியெல்லாம் த்ராபை ம்யூஸிக் போட மாட்டாரே, இவருக்கு என்ன ஆயிற்று என்று இசையமைப்பாளர் … Read more

ஒரு நற்செய்தி

சில மாதங்களாகவே சாருஆன்லைனில் அவ்வளவு அதிகமாக நான் எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இது சம்பந்தமாக கோபக் கடிதங்கள் அவ்வப்போது எனக்கு வருவதுண்டு.  அராத்து, துரோகி போன்ற நண்பர்கள் கூட நேரில் இது பற்றி திட்டுவதுண்டு.  பதிலுக்கு சிரிப்பதோடு சரி.  நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள். இரண்டு தினங்களாக வாக்கிங் கூட போகாமல் – புயல் அடித்த தினங்களில் கூட வாக்கிங்கை நிறுத்தியதில்லை – கோணல் பக்கங்கள் நூலை … Read more

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் & எக்ஸைல்

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு  கலா கௌமுதி என்ற பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருக்கிறது.  கலா கௌமுதி மலையாளத்தின் புகழ்பெற்ற இலக்கியப் பத்திரிகை.  இது ஒரு வாரப் பத்திரிகை என்பதும் நம் கவனத்துக்குரிய விஷயம்.  மேலும், இதன் ஸர்க்குலேஷன் ஒரு லட்சம் என்பதிலிருந்து மலையாளிகளின் இலக்கிய வாசிப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கலா கௌமுதியில் நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.   ராஸ லீலா நாவலே … Read more