50 Writers 50 Books

50 Wrtiers 50 Books என்ற புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  Harper Collins பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.  இந்தியாவின் மிகச் சிறந்த ஐம்பது புத்தகங்களில் ஒன்றாக ஸீரோ டிகிரியும் தெரிவு செய்யப்பட்டு அதைப் பற்றி ஒரு கட்டுரையும் இந்த நூலில் உள்ளது.  இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர்களில் ஒருவரான Chandra Siddan தான் ஸீரோ டிகிரி பற்றிய கட்டுரையையும் எழுதியிருக்கிறார்.  அந்தக் கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா?  Dick wants (to be) Cunt  எவ்வளவு பொருத்தமான … Read more

50 writers; 50 books: the best of indian writing

Pradeep Sebastian மற்றும் Chandra Siddan இருவரும் தொகுத்த இந்தப் புத்தகம் harpers collins மூலம் வெளிவந்துள்ளது. லிங்க்: http://www.harpercollins.co.in/BookDetail.asp?Book_Code=3730 another link: http://pinterest.com/pin/277675133247623713/ இந்தத் தொகுப்பில் தமிழிலிருந்து ஸீரோ டிகிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதைப் பற்றிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது.  கொஞ்சம் நேரம் முன்பு பெங்களூரிலிருந்து நண்பர் தியோடர் பாஸ்கரன் என்னை போனில் அழைத்து இந்தச் செய்தியைச் சொன்னார்.  இந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Article in Indiavision

நேற்றைய வெள்ளிக்கரை வேஷ்டியில் ஒரு சிறிய பிழையைக் குறிப்பிட்டார் பார்த்திபன்.  அதைச் சரி செய்து மாற்றி எழுதியிருக்கிறேன்.  பார்த்துக் கொள்ளவும். Indiavision என்ற மலையாள ஆன்லைன் பத்திரிகையில் என் கட்டுரை ஒன்று வந்துள்ளது.  அந்தப் பத்திரிகையில் இனி வாராவாரம் தொடர்ந்து எழுதலாம் என்று திட்டம்.  நண்பர் ஜெயேஷ் மொழிபெயர்க்கிறார். லிங்க்: http://www.indiavisiontv.com/2013/05/02/198553.html

the alchemy of desire

சற்று முன்புதான் அராத்துவிடமும் துரோகியிடமும் பேசினேன். (என் நண்பர்களின் பெயரைப் பாருங்களேன். உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்கு இப்படி அமையுமா?) ஒரு வாரமாக வாக்கிங் போகவில்லை; சரியாகத் தூங்கவில்லை; ராணுவ ஒழுங்குடன் வாழும் என் தினசரி வாழ்க்கை அத்தனையும் தலைகீழ் ஆயிற்று. ஒரு நாவலால். தருண் தேஜ்பால் எழுதிய the alchemy of desire. இரண்டு லட்சம் வார்த்தைகள். பொடி எழுத்தில் 550 பக்க்ங்கள். என் வாழ்க்கையை ஒளிந்திருந்து பார்த்து யாரோ எழுதியது போல் இருந்தது. ஒரே ஒரு … Read more

ஒரு இன்ப அதிர்ச்சி

பொதுவாக 011 என்று தொடங்கும் போன் அழைப்பு எதையும் நான் எடுப்பதில்லை.  தில்லியிலிருந்து ஏதாவது ஒரு கால் செண்டரிலிருந்து ஒரு பெண் “ஆர் யூ மிஸ்டர் ஆ…றீ… வா… ஸா… கா…” என்று நீட்டி முழக்குவதற்குள் நான் போனை கட் பண்ணி விடுவேன்.  தில்லிக்காரர்களுக்கு அறிவழகன் என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும்.  அதனால்தான் நான் தில்லியில் உத்தியோகத்தில் இருந்த போது என் பெயரை ரவி என்று வைத்துக் கொண்டேன். நேற்று காலை தில்லியிலிருந்து ஒரு … Read more