உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 6

பத்தாயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய் அனுப்பிய இரண்டு நண்பர்களும் தங்கள் பெயரைத் தெரிவிக்கவில்லை. நேரில் திருவண்ணாமலைக்கு வர முடியாவிட்டால், பயிலரங்கு முடிந்ததும் என் பேச்சு அடங்கிய காணொலியை அனுப்பி வைக்க முடியும். அதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரி தேவை. அமெரிக்காவில் வசிக்கும் சில நண்பர்கள் ”இரவு கண் விழித்து உங்கள் பேச்சைக் கேட்பது சாத்தியம் இல்லை, இருந்தாலும் இதை பயிலரங்குக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி நூறு நூறு டாலர் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கும் நான் பயிலரங்கு முடிந்து … Read more

எனக்காகவே வாழ்கிறேன்…

எனக்கு ஒரு பத்து வயது ஆகும் போதே நான் ஒரு வித்தியாசமான மனிதன் என்று தெளிவாகத் தெரிந்து விட்டது. அது பற்றியெல்லாம் விரிவாக என் நாவல்களில் எழுதி விட்டேன். மீண்டும் இங்கே எழுத வேண்டிய அவசியம் இல்லை. என் பள்ளித் தோழனான யோகநாதன் இப்போதும் என் தொடர்பில் இருக்கிறான். அவனைக் கேட்டால் சொல்லுவானாக இருக்கும். ஆறு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை என்னை மிக நன்றாக அறிந்தவன். இங்கேதான் வளசரவாக்கத்தில் சீனி வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறான். … Read more

அருஞ்சொல்லுக்கு வாழ்த்துகள்

போனதே தெரியாமல் மூன்றாண்டுகள் ஆகி விட்டன, அருஞ்சொல் தொடங்கி. அதன் ஆசிரியர் சமஸுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் என் வாழ்த்துகள். https://www.arunchol.com/editor-article-on-next-phase-arunchol

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 5 (வெளிநாட்டு நண்பர்களுக்கு…)

ஜூன் முப்பதாம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியற் கல்லூரியில் நான் நடத்த இருக்கும் உலக சினிமா குறித்த பயிலரங்கு பற்றிய அராத்துவின் ஃபேஸ்புக் குறிப்பில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.   ”இந்தப் பட்டறை மூலம் நம் ஆட்கள் உலக சினிமா எடுப்பார்கள் என தான் நம்புவதாக சாரு நிவேதிதா சொல்லியிருக்கிறார்.” இப்போது நான் இந்தக் கருத்தை இன்னும் வலியுறுத்திச் சொல்லுகிறேன்.  என்னுடைய பயிலரங்கில் கலந்து கொண்டு நான் சொல்வதை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் உங்களால் உலகமே … Read more

அநாவசியமாக ஊர் வாயில் விழ விருப்பமில்லை…

எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று சாதனாவைச் சொன்னபோது, வளன் அரசுவைச் சொன்னபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. காயத்ரியைச் சொன்னபோது ஒரே அக்கப்போராகி விட்டது. அந்த அக்கப்போரில் எனக்கே கொஞ்சம் பயமாகிப் போனது, சிறுகதையில் தேறி விட்டாள், நாவலில் போகப் போக சொதப்பி விடுவாளோ என்று. இதுவரை பத்துப் பன்னிரண்டு அத்தியாயங்களைப் படித்து விட்டேன். போகப் போக என் பயம் நீங்கி விட்டது. பெயரைக் காப்பாற்றி விட்டாள். இப்போது இந்த இரண்டாம் அத்தியாயம். இதைப் படித்த போது எனக்கு … Read more