இன்று மாலை இலக்கிய சந்திப்பு
இன்று (1.10.2025) மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் புத்தக மதிப்புரை மற்றும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்கிறேன். சந்திப்பு ஸூம் மூலம் நடக்கும். லிங்க் கீழே தருகிறேன். meet.google.com/pfd-wfjg-zjn
இன்று (1.10.2025) மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் புத்தக மதிப்புரை மற்றும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்கிறேன். சந்திப்பு ஸூம் மூலம் நடக்கும். லிங்க் கீழே தருகிறேன். meet.google.com/pfd-wfjg-zjn
சுப்புடு மாதிரி பொளந்து கட்டீரீரே. எங்கு கற்றீர்? யார் குரு? வி. பாலசுப்ரமணியன் நான் தில்லியில் பத்தாண்டு காலம் வசித்த போது சுப்புடுவை அங்கே நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். மற்றபடி சுப்புடுவின் ஒரு வாக்கியத்தைக் கூட படித்தது இல்லை. ஆனால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விமர்சனம் செய்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அவர் கட்டுரைகள் கிடைத்தால் படிக்கக் கூடிய மனநிலை இருக்கிறது. ஆனால் அவர் கட்டுரைகள் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. பாலா சார், உங்களுடைய ஒரு கேள்வியைப் … Read more
இரண்டொரு தினங்களுக்கு முன் மகாபாரதக் கதையில் ஒரு பிழை விட்டேன். பெருந்தேவி சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார். திருத்திக் கொண்டேன். இப்போது அதைவிடப் பெரும் பிழை, ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை பஞ்ச ரத்னா கீர்த்தனைகளில் ஒன்று எனச் சொல்லி விட்டேன். அந்தப் பிழையைச் சுட்டிக் காட்டி வந்துள்ள கடிதம் கீழே. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இசையில் எனக்கு ரசனை அனுபவம் மட்டுமே உண்டு. ”கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடல் ஒலித்த திராவிட குடும்பத்தைச் … Read more
இன்று மாலைக்குள் முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. இசையை எப்படி இலக்கியத்துக்குப் பயன்படுத்துவது என்பது பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். தியாகராஜா நாவலை விளங்கிக் கொள்வதற்கான குறிப்புகள் என்று கூட இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தொடரை நீங்கள் பிரிண்ட் அவ்ட் எடுத்து வைத்துக்கொண்டால் பிறகு தியாகராஜா நாவல் படிக்கும்போது உதவியாக இருக்கும்.
இசையைப் பொறுத்தவரை இது உசந்தது, இது தாழ்ந்தது என்று சொல்வது அர்த்தமற்றதுதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. இது ஒரு பொது விதி என்றாலும் எனக்கு பழைய கலைஞர்கள் பாடுவதே பிடித்திருக்கிறது. ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை யார் யாரெல்லாம் பாடியிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கேட்டால் செம்மங்குடிதான் உச்சத்தில் நிற்கிறார். அதேபோல் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தியும் மிகவும் சிலாக்கியமாக இருந்தது. ஆனால் சஞ்சய் சுப்ரமணியத்தை ஆர்வத்துடன் கேட்டும் என்னால் ஒன்ற முடியவில்லை. காரணம் என்ன என்று என்னையே ஆராய்ந்தேன். நேதுநூரி (1927–2014), … Read more
தியாகராஜரின் கீர்த்தனைகளில் ஒன்றான ஸ்வர ராக ஸூதாரஸவை செம்மங்குடியின் குரலில் கேட்டுக் கொண்டிருந்த போது இதை எழுதத் தோன்றியது. இந்தக் கீர்த்தனையில் செம்மங்குடியின் ஆலாபனையையும் நிரவலையும் ஸ்வரப் பிரஸ்தாரத்தையும் ரசிக்க முடியாதவர்கள் செவியின் பயன்பாட்டை இழந்தவர்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கீர்த்தனையின் பொருளைக் கூட விட்டு விட்டு மேற்கூறிய மூன்றையும் கவனியுங்கள். தேன் வந்து பாயும் காதினிலே… ஆலாபனை என்பது கீர்த்தனைக்கு முன், வரிகள் இல்லாமல், ஸ்வரங்களை (ச, ரி, க, ம, ப, த, … Read more