ஜெயமோகனும் நானும்…

ஜெயமோகனுக்காக எழுதிய கடிதத்தைப் பதிவு செய்து விட்டுப் பார்த்த போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ஆள் – ஜெயமோகனின் கூடாரத்தில் இருந்தவர் – ஏதோ காரணத்தால் அவரைப் பகைத்துக் கொண்டு என் பக்கம் வந்து முழ நீளத்துக்கு ஜெயமோகனை அவமதித்து ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் பிரசுரம் செய்து அந்த ஆளைக் கன்னாபின்னா என்று திட்டி ஒரு பெரிய கட்டுரை எழுதினேன். அதற்குப் பிறகு நடந்ததுதான் வேடிக்கை. இன்று … Read more

அன்புள்ள ஜெயமோகனுக்கு… (திருத்தி எழுதியது)

காலையில் நடைப் பயிற்சிக்குச் செல்லும் அவசரத்தில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. இப்போது ஆற அமர யோசித்து அதையும் சேர்த்திருக்கிறேன். அன்புள்ள ஜெயமோகனுக்கு, நான் உங்களை என் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா எழுத்தாளர்களையும்தான். அதிலும் உங்களை ரொம்ப விசேஷமாக. ஏன் என்று உங்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதியிருப்பவற்றையும் பேசியிருப்பவற்றையும் நீங்கள் நினைவுகூரலாம். குறிப்பாக, ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை ஒற்றை ஆளாகச் செய்து கொண்டிருக்கிறார் ஜெயமோகன் என்று எழுதியும் பேசியும் வருபவன். இன்னும் … Read more

அன்புள்ள ஜெயமோகனுக்கு…

அன்புள்ள ஜெயமோகனுக்கு, நான் உங்களை என் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா எழுத்தாளர்களையும்தான். அதிலும் உங்களை ரொம்ப விசேஷமாக. ஏன் என்று உங்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதியிருப்பவற்றையும் பேசியிருப்பவற்றையும் நீங்கள் நினைவுகூரலாம். குறிப்பாக, ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய விஷயத்தை ஒற்றை ஆளாகச் செய்து கொண்டிருக்கிறார் ஜெயமோகன் என்று எழுதியும் பேசியும் வருபவன். இன்னும் ஏராளமாக. நான் கலந்து கொள்ளும் சர்வதேசக் கருத்தரங்குகளிலும் உங்களையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் பற்றிக் குறிப்பிடாமல் பேசியதே இல்லை. நான் பத்தி எழுதும் … Read more

நிராகரிப்பும் தடையும்: அ. ராமசாமியின் எதிர்வினையை முன்வைத்து…

சாரு நிவேதிதாவின் பனுவல்கள் வளர்ச்சியடைந்த நடுத்தரவர்க்க மனநிலையோடு உரையாடல் செய்யும் பனுவல்கள். பெருமாள் முருகனின் பனுவல்கள் நடுத்தரவர்க்க மனநிலையே இன்னதென்றறியாத மனிதர்களின் உளப்பாங்கை நோக்கிப் பேசும் பனுவல்கள். இவ்விரண்டையும் இணையாக வைத்து விவாதிக்கும் புள்ளியைப் பனுவல்களுக்குள் கண்டறிவது இயலாத ஒன்று. அப்படிப் பேசும் ஒரு கட்டுரையை முக்கியமான கட்டுரை என்று சாருநிவேதிதாவே முன்வைத்துப் பேச முன்வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாரு நிவேதிதாவின் பனுவல்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் விவாதிக்கப்படாமல் போனதற்கும் அவரது புத்தகங்கள் சந்தைப்படுத்தப்பட்ட முறைகளும், விமர்சனங்களின் மீது அவர் … Read more

தமிழ் இந்து – மனுஷ்ய புத்திரன் – அடியேன்

என் எழுத்து பற்றிய த. ராஜனின் கட்டுரை ஒன்று தமிழ் இந்து நாளிதழில் இன்று வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  (இணைப்பு: https://www.hindutamil.in/news/literature/539842-charu-vs-perumal-murugan-3.html) அது மிக நல்ல ஒரு கட்டுரை.  தமிழ்ச் சமூகத்திலிருந்து அந்நியமாகி விட்ட ஒருவனை அந்த சமூகம் எப்படி எதிர்க்கும் அல்லது எதிர்கொள்ளும்?  எனவே சாருவின் மீதான இந்தப் புறக்கணிப்பு புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்பது ராஜன் கட்டுரையின் அடிச்சரடு.  அக்கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு.  சொல்லப்போனால், பத்திரிகையாளர்கள் இத்தனை உன்னிப்பாக ஒரு எழுத்தாளனை … Read more

ஸீரோ டிகிரி – மாத இதழ்

சாரு நிவேதிதா வாசகர் வட்ட நண்பர்கள் ஸீரோ டிகிரி என்ற பெயரில் ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.  ஏப்ரல் மாதம் முதல் இதழ் வெளிவரும்.  புதிய எழுத்தாளர்களுக்கும் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.  திரும்பவும் சொல்கிறேன்.  ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கும் இப்போது ஆரம்பிக்கப்பட இருக்கும் ஸீரோ டிகிரி பத்திரிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  மாதாமாதம் நான் அதில் எழுதுவேன்.  உயிர்மையில் நான் முதல் இதழிலிருந்து பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாதம் கூட … Read more