ஆறு ஆண்டுகளுக்கு முன்…

2017இல் என் மகன் கார்த்திக்குக்குத் திருமணம் நடந்தது. திருமணம் மும்பையில். வரவேற்பு சென்னையில். திருமணத்துக்குக் காலையில் போய் விட்டு இரவு திரும்பி விட்டேன். வீட்டில் நாய்கள் தனியாக இருந்தன. சென்னை வரவேற்புக்கு எழுத்தாளர் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். அப்போது எடுத்த புகைப்படம். புகைப்படம்: பிரபு காளிதாஸ் ஜெயமோகனிடம் இப்போது இரண்டு முக்கிய மாற்றங்கள். மீசையை எடுத்து விட்டார். வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்த கட்டம் போட்ட சட்டையை அதிகம் அணிவதில்லை.

மூன்று சந்திப்புகள்

1.சிறுமியாக இருக்கும்போது இந்தப் பெண் பாடிக் கேட்டிருக்கிறேன். உலகப் புகழ் பெறுவாள் என்று யூகித்தேன். பத்தாண்டுகள் கடந்து விட்டன. இப்போது பிரபலமான பாடகி. க்ருதி விட்டல். நாளை காலை ஆறு மணிக்கு கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தெற்கு மாடவீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் பாடுகிறார் க்ருதி விட்டல். நான் அங்கே 5.55க்கு இருப்பேன். நிகழ்ச்சி முடிந்து தெற்கு மாடவீதியின் தொடக்கத்தில் உள்ள (தெப்பக்குளத்துக்கு நேர் எதிரில்) சங்கீதா உணவகத்தில் காலை உணவை முடிக்கலாம். மைலாப்பூரிலேயே நல்ல இட்லி … Read more

உல்லாசம், உல்லாசம்…

உல்லாசம், உல்லாசம்… நாவலை ஆறு ஏழு நண்பர்களுக்கு வாசிக்க அனுப்பி வைத்தேன். இரண்டு பேரைத் தவிர வேறு யாரிடமிருந்தும் தகவல் இல்லை. சிலரைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன். அவர்களுக்கு நேரம் இல்லை. பொதுவாக ஸ்ரீராம் உடனடியாகப் படித்து கருத்து தெரிவித்துவிடுவார். அவரிடமிருந்தும் தகவல் இல்லை. முதல் நண்பர் உல்லாசம், உல்லாசம்… பெட்டியோவை விட பிரமாதமாக வந்திருக்கிறது என்றார். உற்சாகமாக இருந்தது. இரண்டாவது நண்பர், ஒரு நல்ல சப்ஜெக்டை வீணாக்கி விட்டீர்கள், நாவலில் tranquility இல்லை, அது இருந்திருந்தால் … Read more

சென்னை புத்தக விழாவில் புதிய புத்தகங்கள்

சென்ற ஆண்டு புத்தக விழாவில் வெளியானது என்னுடைய நாவல் அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு. அந்த நாவல் பற்றி பல பெண்கள் எனக்கு தம் வாழ்வையே மாற்றி அமைத்த நூல் என்று சொன்னார்கள். உண்மைதான். ஆண்களின் வாழ்வையும் மாற்றக் கூடிய நாவல்தான். ஒரு லட்சம் பிரதிகள் விற்றிருக்க வேண்டும். ஆயிரம் பிரதி கூட விற்றிருக்காது என்று யூகிக்கிறேன். எத்தனை பிரதிகள் விற்றன என்று ஒருபோதும் என் பதிப்பாளர்களிடம் நான் கேட்டதில்லை. முந்நூறு நானூறு என்றே … Read more

பெங்களூரு பயணம்

நான் வருகின்ற 26ஆம் தேதி பெங்களூர் செல்ல இருக்கிறேன். 29 தேதி வரை பெங்களூரில் இருப்பேன். தங்குமிடம் கோரமங்களா. பெங்களூர் பயணத்தின் காரணங்கள் பல. அதில் ஒன்று இரண்டை வெளியே சொல்லலாம். ஒன்று, டிசம்பர் பதினெட்டு என் பிறந்த நாள். அதை பெங்களூரில் சற்று தாமதமாகக் கொண்டாடுவது. பதினெட்டாம் தேதி அன்று வெளியே செல்ல அனுமதி கிடைக்காது. அதனால்தான் இருபத்தாறுக்குத் தள்ளிப் போனது. அதோடு என் தோழரின் பிறந்த நாளும் இருபத்தைந்தாம் தேதி வருகிறது. இரண்டையும் சேர்ந்து … Read more