எனது சிங்கள மொழிபெயர்ப்பாளர் இனோகா பள்ளியகுரு

இனோகா வசிக்கும் ஊருக்கு என்னால் செல்ல முடியவில்லை. ஆனாலும் தவறாக எடுத்துக் கொள்ளாமல் இனோகாவே நீண்ட தூரம் பயணம் செய்து கொழும்பு வந்து என்னைச் சந்தித்தார். கேகே சமன் குமர எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார். அப்படிப்பட்டவர் இனோகாவின் மொழிபெயர்ப்பு போல இன்று சிங்களத்தில் செய்வதற்கு யாருமே இல்லை; இனோகா உங்களுக்குக் கடவுளின் பரிசு என்றார். இனோகாவும் கேகேயின் என்னைப் பற்றிய ஆவணப்படத்தில் என்னை நேர்காணல் செய்கிறார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. சிங்களத்தில் இனோகா … Read more

உல்லாசம், உல்லாசம்…

மிக மும்முரமாக உல்லாசம், உல்லாசம் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த நாவல் ரொப்பங்கி இரவுகள் நாவலைப் போல் அதிக ஆய்வுகளைக் கோரவில்லை. ரொப்பங்கி இரவுகளுக்காக நான் மிகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. படிக்க வேண்டிய நாவல்கள் மலை போல் குவிந்துள்ளன. இத்தனைக்கும் ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் ஒவ்வொரு நாவலைத்தான் படிக்கிறேன். எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமானால் ஆயுள் போதாது. ரியூ முராகாமியை மட்டும் முழுமையாகப் படித்து விட்டேன். அவருடைய படங்கள் இன்னும் ஒன்றிரண்டு பாக்கி இருக்கின்றன. ஆனால் உல்லாசம் … Read more

சிங்களப் பத்திரிகையில் ஒரு நேர்காணல்

முதலில் சிங்கள எழுத்துக்களையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. பத்திரிகையின் பெயரைக் கூட வாசிக்கத் தெரியவில்லை. எல்லா எழுத்தும் ஒரே மாதிரி சங்கிலி சங்கிலியாகத் தெரிகிறது.

உடல்களின் மூலம் ஒரு கலகம்

Vagina Monologues என்ற நாடகத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  அது ஒரு மட்டமான நாடகம்.  நாடகமே இல்லை.  ஆனால் அதன் பேசுபொருளாலும் தலைப்பாலும் சர்வதேச அளவில் புகழ் பெற்றது.  நம் பெருமாள் முருகன் மாதிரி.  ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெர்மன் க்ரேர் (Germaine Greer) அப்படிப்பட்டவர் அல்ல.  உண்மையான பெண்ணியவாதி.  Cunt என்ற பெயரிலும், Suck என்ற பெயரிலும் பத்திரிகைகள் நட்த்தியவர்.  அப்பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் The Madwoman’s Underclothes என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டன.  கேத்தி … Read more

உல்லாசம் உல்லாசம் பற்றி…

உல்லாசம் உல்லாசம் நாவல் இதுவரை நான் எழுதியவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். அநேகமாக அதில் உள்ள சம்பவங்களை யாராலும் நம்ப இயலாது. Anarchism & eroticism இரண்டும் கலந்த நாவல். இந்த இரண்டுமே நம் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் எல்லாமே நாம் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களிடம் கண்டதுதான். வான்கோ ஒரு பெண்ணிடம் காதை அறுத்துக் கொடுத்ததைப் படித்திருக்கிறோம். ஆனால் அதை இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைஞன் செய்தான் என்றால் நம்ப மாட்டோம் இல்லையா? யேசுவின் கதை நமக்குத் … Read more