Towards a Third Cinema

Towards a Third Cinema என்ற என் புதிய புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.  இதில் பேசப்பட்டுள்ள இயக்குனர்களைப் பற்றி கூகிளில் கூட அதிக விபரங்கள் கிடைக்காது.  இவர்கள் இயக்கிய படங்களுக்கு ஆங்கிலத்தில் கூட விமர்சனங்கள் இல்லை.  உலகின் மிக முக்கியமான படங்கள் அத்தனைக்கும் விமர்சனம் எழுதும் ரோஜர் எபெர்ட் கூட என்னுடைய இந்த நூலில் விவாதிக்கப்பட்டுள்ள படங்கள் பற்றி எழுதவில்லை என்றால் இந்தப் படங்கள் உலக அளவில் எந்த அளவிற்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  ஆனால் … Read more

குருவும் சீடனும்!

நண்பர் கார்ல் மார்க்ஸின் மீது ஜெர்மன் கார்ல் மார்க்ஸின் ஆவி வந்திருக்கிறது போல என்று நினைக்கும் அளவுக்கு அமெரிக்க ஆயில் கம்பெனி, உலகப் பொருளாதாரம், சந்தை மதிப்பு (அப்டீன்னா என்னா?), வளைகுடா ஆயில் கம்பெனிகள் என்று வீசு வீசு என்று வீசிக் கொண்டிருப்பார்.  ரெண்டு வரிக்கு மேல் தாண்ட மாட்டேன்.  நமக்கு அதுக்கெல்லாம் புத்தி கம்மி.  இந்தப் பய புள்ளைக்கு இம்புட்டு அறிவு எங்கேர்ந்து வந்துதுன்னு கூட நினைப்பேன்.  இந்தக் கவிதா சொர்ணவல்லி வேறு சும்மா இருக்காமல் … Read more

அடியேனைப் பற்றி ஜெயமோகன் – 2008

1. அன்புள்ள ஜெயமோகன், ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின்நவீனத்துவ வடிவம் கொண்டது என்கிறீர்கள். இப்போது சாரு நிவேதிதா எழுதும் நாவல்கள் போலத்தான் அவையும் இருக்கின்றன என்பதை இப்படி பார்க்கும்போது உணர முடிகிறது. சுயகதையும், உண்மையான மனிதர்களைப்பற்றிய விஷயங்களும், வம்புகளும், கிண்டலும் கலந்த வடிவம்தான் ஸீரோ டிகிரி முதலிய நாவல்களிலும் உள்ளது. ஜே.ஜே.சிலகுறிப்புகளை சாரு நிவேதிதா எப்படி வரவேற்றார்? அதைப்பற்றி அவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அன்புள்ள …. சாருநிவேதிதா ஒரு சுவாரஸியமான பத்தி எழுத்தாளர் [காலம்னிஸ்ட்] மட்டுமே. பத்தி எழுத்தாளர்கள் எப்போதும் … Read more

ஒரு லெஜண்ட் பற்றி மற்றொரு லெஜண்ட்!

நாளை தில்லி செல்கிறேன்.  அங்கிருந்து நாளை மறுநாள் காலை ஆறு மணிக்கு புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் ரயிலில் நைனிட்டால் செல்கிறேன்.  அடுத்த மூன்று தினங்களும் ஆஷிஷ் நந்தியுடன் கலந்துரையாடல்.  அமார்த்யா சென் பொருளாதாரத்துக்கு என்றால் ஆஷிஷ் நந்தி சமூகவியல் மற்றும் உளவியல் துறையில்.  நோபல் கிடைத்திருக்க வேண்டும்.  இனிமேலும் கிடைக்கலாம்.  வங்காளம் தான் இப்படி அறிஞர்களையும் கலைஞர்களையும் உருவாக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது.  தாகூர், ரித்விக் கட்டக், சத்யஜித் ரே, மஹாஷ்வேதா தேவி, எம்.என் ராய், … Read more

எஸ்.வி. சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்களுக்குப் பதில் சொல்வதா என் வேலை?

ஹலோ சாரு, என் பேர் ———————– உங்க கிட்ட ஒரு தடவ பேசிருக்கேன்.  இன்னிக்கு உங்கக் கட்டுரை நல்லா இருந்தது.  தொடர்ந்து தீவிரமா இந்த மாதிரி உருப்படியான விஷயங்கள எழுதுங்க.  நன்றி… என் வாட்ஸப்பில் இப்படி ஒரு குறுஞ்செய்தி இன்று காலையில் வந்திருந்தது.  இது பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது.   நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  கடித நபரின் வயதே அத்தனை இருக்குமா தெரியாது.  இதுவரை 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதில் ஆறு நூல்களே நாவல்கள்.  … Read more

அடிப்படைவாதிகள் சொல்லும் செய்தி!

இன்று எனக்கு வந்த ஒரு வாசகர் கடிதத்தைப் படித்து மிகவும் அதிர்ந்து போனேன்.  ”எஸ்.வி.சேகர் அப்படி ஒரு முகநூல் குறிப்பைப் பகிர்ந்தது தப்புதான்.  அதற்குத்தான் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரே, அப்புறம் என்ன?  ரொம்பத்தான் ஓவரா பண்றாங்க எல்லாரும்.” இதை எழுதியிருப்பது ஒரு பெண்.  எஸ்.வி. சேகர் பகிர்ந்து கொண்ட குறிப்பு என்ன சொன்னது தெரியுமா?  அதை விட அசிங்கமாக பெண்களை யாரும் பேசி விட முடியாது.   பத்திரிகைகளில் வேலை செய்யும் பெண்களை மட்டும் அது குறிக்கவில்லை.  … Read more