zero degree publishing

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். இந்தியாவில் வசிக்கும் ஆங்கில எழுத்தாளர்.  ஐந்தாறு நாவல்கள் எழுதியிருக்கிறார்.  அவருடைய நூல்களும் 2000 பிரதிகள்தான் விற்கின்றன.  ஜீவனோபாயத்துக்குக் கொஞ்ச காலம் பேராசிரியர் வேலை பார்த்தார்.  இப்போது மாதத்தில் 15 நாள் வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.  உலகம் பூராவும் இலக்கியக் கூட்டங்கள் நடக்கின்றன.  கலந்துரையாடல்கள், novel reading sessions, seminars, இப்படி இப்படி.  அவரைத் தொலைபேசியிலேயே பிடிக்க முடியவில்லை.  மின்னஞ்சலில்தான் தொடர்பு கொள்ள முடிகிறது.  பிற மொழி எழுத்தாளர்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  … Read more

நடிகர்களும் அரசியலும்

ArtReview Asia பத்திரிகையில் தமிழ் சினிமா நடிகர்களின் அரசியல் சேவை, இலக்கியச் சேவை குறித்து – குறிப்பாக கமல்ஹாசன் – விரிவாக எழுதியிருக்கிறேன்.  கடைசியில் கமல்ஹாசனை ஐரோப்பிய இலக்கியக் கலை உலகத்துக்கு அறிமுகம் செய்து விட்டேன்.  முடிந்தவர்கள் ArtReview Asiaவை இணையத்திலேயே வாங்கிப் படிக்கலாம்.  வழக்கம் போல் பிரபு காளிதாஸின் ரஜினி புகைப்படம் ஒன்று வந்துள்ளது.  மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 60 அடி கட் அவுட் புகைப்படமும் வெளிவந்துள்ளது.  வாங்கிப் படித்து இன்புறவும்.

ஆன் எபர் : காயத்ரியின் நேரடி மொழிபெயர்ப்பில்…

      இந்த மாத தடம் இதழில் காயத்ரி ஆர். மொழிபெயர்த்துள்ள ஆன் எபரின் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது.  விளிம்பு நிலை மக்களின் உளவியலைப் புரிந்து கொள்ள இந்தக் கதை உதவும்.  இந்த எழுத்தாளரைப் படித்த போதுதான் கனடாவில் ஃப்ரெஞ்ச் இரண்டாம் மொழியாக இருப்பதே எனக்குத் தெரிய வந்தது.  காயத்ரி இந்தக் கதையை ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கியிருக்கிறார்.  இடையில் ஒரு கை இல்லாமல் நேரடியாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.  பொதுவாகவே நான் ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதை … Read more

The Marginal Man

நேற்று நண்பர் ஒருவர் போன் செய்து “என்ன சத்தத்தையே காணும்?” என்று கேட்டு அவரே பதிலும் சொன்னார்.  “வயசாயிடுச்சு?” என்னிடமிருந்து சத்தமே இல்லாததற்கு நண்பர் யூகித்த காரணம் அது.  இதற்கு நான் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லி விட்டேன்.  25 இலிருந்து 55 வயது வரை நான் சாப்பிட்ட நிலப்பனைக்கிழங்கும், அஸ்வகந்தாவும்  என்னை 85 வயது ஆனாலும் முதுமையில் தள்ளாது.  இதயம் பலவீனமாகத்தான் இருக்கிறது.  50 சதவிகித அடைப்பு.  உணர்ச்சிவசப்பட்டால் angina வருகிறது.  அதற்கும் முதுமைக்கும் சம்பந்தம் … Read more

The Marginal Man

ஐந்தாறு ஆண்டுகள் ஆயிற்று எக்ஸைல் எழுத. அதற்கப்புறம் அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு போராடி, ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களோடு மல்லுக்கு நின்று எடிட் பண்ணி திருத்தி, வெட்டி, திரும்பச் சேர்த்து, திரும்பவும் எடிட் பண்ணி, அதுவும் போதாமல் திரும்பவும் எழுதி, அதையும் எடிட் பண்ணி கடந்த ஆறு மாதங்களாக இதே சிந்தனையாக இருந்து இப்போது தெ மார்ஜினல் மேன் ஆங்கில மொழிபெயர்ப்பின் எடிட்டிங் வேலையை முடித்து விட்டேன். முதல் வேலையாக அதை மொழிபெயர்த்த காயத்ரிக்கு அனுப்பி வைத்தேன். எடிட் செய்தது … Read more

ப்ரேக் அப் குறுங்கதைகள் உரையாடல் லைவ்

பிரேக் அப் குறுங்கதைகள் பற்றி கோக்கு மாக்கு அரட்டை இன்று மாலை 7 மணிக்கு. அடியேன் கலந்து கொள்கிறேன். டிமிட்ரி , வெண்பா போன்ற நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அல்லாமல் ,  பிரேக் அப் குறுங்கதைகள் வாசகர்கள் கலந்து கொள்கின்றனர். இன்று மாலை அராத்து ஐ.டி. , சாரு , வெண்பா , டிமிட்ரி ஐடிகளில் ஃபேஸ்புக்கில் லைவ் பார்க்கலாம். மழையால் தள்ளிப்போன நிகழ்ச்சி ….. இன்று எவ்வளவு மழை பெய்தாலும் அரட்டை அடித்தே தீருவது … Read more