கலையும் மீட்சியும்: ஒரு நேர்காணல்

சில மாதங்களுக்கு முன்பு நான் அருஞ்சொல்லில் சமஸுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அது இப்போது புத்தகமாக வர இருக்கிறது. நேர்காணலை செப்பனிட்டிருக்கிறேன். நிறைய சேர்த்திருக்கிறேன். அந்த நேர்காணலை என்னுடைய சுயசரிதை என்றும் சொல்லலாம். கலையும் மீட்சியும்: ஒரு நேர்காணல் என்று தலைப்பு வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் நூல் வெளிவரும். போகன் சங்கர் முன்னுரை தர இசைந்துள்ளார். அந்த நேர்காணலில் என்னுடைய சிவில் சப்ளைஸ் துறை அனுபவங்கள் சிலவற்றை விவரித்திருக்கிறேன். அதை அருஞ்சொல்லில் படித்த … Read more

இலங்கைப் பயணம்: ஒரு முக்கிய அறிவிப்பு

நவம்பர் ஒன்பதாம் தேதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மாலை நான்கு மணி விமானத்தில் கொழும்பு கிளம்புகிறேன். கொழும்பு ஐந்தரை மணிக்குப் போய்ச் சேரும். விமான நிலையத்துக்கு அனோஜன் வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவருடன் கொழும்பிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதுக்கை என்ற ஊருக்குக் கிளம்புகிறேன். அங்கேதான் கே.கே. என்றும் சர்ப்பயா என்றும் அழைக்கப்படும் சமன் குமாரவின் வீடு உள்ளது. அங்கே அவர் வீட்டில்தான் தங்கலாம் என்று திட்டம். அவர் தனி ஆள். குடும்பம் இல்லை. அதனால் தங்குவதில் ஒன்றும் … Read more

இலங்கையில் யோகா குரு சௌந்தர்

என் யோகா குருவும் நண்பருமான சௌந்தர் இலங்கை சென்றிருக்கிறார். அவரிடம் யோகா பயில விரும்பும் நண்பர்கள் பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். +94 768664098 சமீபத்தில் நான் ஜப்பான் சென்றிருந்தபோது என் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கண்ட நண்பர்கள் ஆச்சரியமாகப் பேசினார்கள். அதற்கு ஒரே காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் பயிற்சி செய்து வந்த யோகாதான். வாசகர் வட்டச் சந்திப்புகளில் கூட காலையில் தியானத்தையும், பிராணாயாமத்தையும் நான் கை விட்டதில்லை. சௌந்தரின் யோகாவை நீங்கள் பயன்படுத்திக் … Read more

பெட்டியோ நூறாவது பிரதி: விற்பனையில்…

இன்று காலையில் எழுந்து பார்த்தபோது வாட்ஸப்பில் வினித்தின் மெஸேஜ். பெட்டியோ நூறாவது பிரதியை வெளியிட்டு விட்டது பற்றி. நேற்று இரவு வரை கூட இந்த விஷயம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாமலேயே இது வெளிவந்த காரணத்தை வினித் தன் குறிப்பில் விளக்கியிருக்கிறார். இன்னொரு விஷயம், வினித்தின் மெஸேஜ் வந்த நேரம் காலை ஐந்தரை. ஆனால் மெஸேஜில் குட்மார்னிங் என்பதற்குப் பதிலாக குட் நைட் என்று இருந்தது. இந்த நாவல் என்.எஃப்.டி.யில் வெளிவருவதற்காக பல நண்பர்கள் இரவு பகலாக … Read more

புழுதி: காரையன் கதன்

நான் இலங்கை சென்றிருந்த போது எனக்கு அறிமுகமான பதிப்பகம் தாயதி. அதேபோல் அங்கே அறிமுகமான நண்பர்களில் முக்கியமானவர் காரையன் கதன். சின்ன வயதில் நான் எப்படி இருந்தேனோ அதேபோல் இருக்கிறார். என்ன இப்படி ராக் பாடகர் போல் இருக்கிறீர்கள் என்று கேட்ட போது நீங்கள்தான் ரோல் மாடல் என்றார். இவர் என் வாழ்வில் மிகவும் முக்கியமானவர். இவரைப் போன்ற ஒரு மனிதரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. இவரது அனுபவங்கள் பெட்டியோ நாவலில் … Read more

Conversations with Aurangzeb நாவல் பற்றி அதன் பதிப்பாசிரியர்…

ஹார்ப்பர் காலின்ஸின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான ராகுல் சோனி அந்த நாவல் பற்றித் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். மொழிபெயர்ப்பின்போது ராகுல் சோனியின் பங்களிப்பும் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் அல்மோஸ்ட் ஐலண்ட் நடத்திய ஒரு கருத்தரங்கில் ராகுல் சோனியுடன் மூன்று தினங்கள் ஒரே இடத்தில் தங்கி உரையாடியிருக்கிறேன். அவர் ஸீரோ டிகிரியையும் நினைவு கூர்ந்து இப்போது எழுதியிருக்கிறார். ஔரங்ஸேப் நாவலின் ஒவ்வொரு வார்த்தையையும் நுணுக்கமாக வாசித்து, ஒவ்வொன்றின் அவசியத்தையும் பற்றி விவாதித்து, கதையின் ஊடாகவும் சென்று கேள்விகள் கேட்டு, … Read more