எங்கே உன் கடவுள்?

பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற புத்தகத்தின் அலையில் அதோடு வந்த மற்ற புத்தகங்கள் கவனிக்கப்படாமல் போய் விட்டன போல் தோன்றுகிறது.  இன்றைய தினமலரில் எங்கே உன் கடவுள்? என்ற தொகுப்புக்கான மதிப்புரை வந்துள்ளது.  மதிப்புரை எழுதியவர் க.சீ. சிவகுமார்.  தினமலருக்கும் சிவகுமாருக்கும் நன்றி.  நொச்சிக்குப்பத்தில் மீன் வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மதிப்புரை பற்றி குறுஞ்செய்தி அனுப்பியவர் இறையன்பு ஐஏஎஸ்.  எங்கே உன் கடவுள் கட்டுரைகள் துக்ளக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.  துக்ளக் … Read more

நிலவு தேயாத தேசம் பற்றி…

அந்திமழை இணைய இதழில் நிலவு தேயாத தேசம் தொடரை அதிக நேரம் செலவிட்டு மிகவும் ஈடுபாட்டுடன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  சென்ற வார அத்தியாயத்தை எழுதும் போது அந்த அத்தியாயம் கொடுத்த உணர்வுகளால் தாக்குண்டு அதீதமான ஓர் மனநிலையில் இருந்தேன்.  அந்த அத்தியாயத்தைப் படித்த பலரும் அதே வித உணர்வை அடைந்ததாக எழுதியிருந்தார்கள்.  அது ஒரு பயணக் கட்டுரை மட்டும் அல்ல; நமது தேசத்தையும் ஐரோப்பாவையும் மேலும் அறிந்து கொள்வதற்கான ஓர் முயற்சி. இன்று வந்த கடிதம்: அன்புள்ள … Read more

மே 22 மாலை 6 மணி

மே 22-ஆம் தேதி மாலை ஆறு மணி, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் காலச்சுவடு வெளியீடாக பாகீரதியின் மதியம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில் அடியேன் பேச இருக்கிறேன்.  இது பா. வெங்கடேசனின் இரண்டாவது நாவல்.  அழகியசிங்கர், அசதா ஆகியோரும் பேசுவர். இலக்கியச் சந்திப்புகள், புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் இதுவரை பேசியது போல் இருக்காது இந்த விழாப் பேச்சு.  மிகவும் மாறுபட்டதாகவும், இப்படிப் பேசுவது இதுவே முதல் முறை என்பதாகவும் இருக்கும்.  கூட்டம் வரவழைப்பதற்காக … Read more

சில எதிர்வினைகள்

இன்றைய தி இந்துவில் வெளிவந்துள்ள கட்டுரைக்கு வந்த சில எதிர்வினைகளை இங்கே தருகிறேன். பா. ம. க. பற்றிய உங்களின் கருத்துக்கள் தமிழ் நாட்டின் ஒரு நடு நிலை வாக்காளனின் மன நிலை பிரதிபலிப்பு. இவர்களின் கடந்த 25 ஆண்டு கால அரசியல் எங்கெல்லாம் சறுக்கியது, வழுக்கியது என்ற விமர்சனங்கள் உண்மையானது. மாற்றம் வார்த்தையில் மட்டும் அல்ல: வாழ்க்கையிலும் இருக்கிறது என்ற உங்களின் பஞ்ச் அருமை! தொடருங்கள் உங்கள் விமர்சனங்களை! நெய்வேலி மதி *** இன்று தி … Read more

தலித்தும் வன்னியரும் ஒன்னா?

வாசகி: என்ன சாரு, காத்தாலேர்ந்து உங்க ஃபோன் எங்கேஜ்டாவே இருக்கு?  பொதுவா அப்படி இருக்காதே? சாரு: ஹிண்டுல ஒரு கட்டுரை வந்திருக்கு.  அதைப் பத்தி நிறைய பேர் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, அதனாலதான். வாசகி: அதுதான் எப்பவுமே எதாவது ஒரு பத்திரிகைலே உங்க ஆர்ட்டிகிள் வர்றதே, அதுலே என்ன விசேஷம்? சாரு: இல்ல, இது அன்புமணி பத்திங்கறதாலெ கொஞ்சம் பரபரப்பாயிடுச்சு, தேர்தல் நேரமில்ல… வாசகி: அன்புமணியா, யார் அது? சாரு: பாமாக்கா தலைவர். வாசகி: பாமாக்காவா?  அப்டீன்னா? சாரு: … Read more