அரசியல் நையாண்டி என்றால் இதுதான். மீண்டும் கார்ல் மார்க்ஸ்…

கார்ல் மார்க்ஸின் சிலம்ப விளையாட்டு மீண்டும்.  விரைவில் நூல் வடிவில் வரும்.  இன்னொரு விஷயம். சில எழுத்தாளர்கள் பிரமாதமாக எழுதுகிறார்கள்.  ஆனால் அவர்களின் பள்ளிகளிலிருந்து மாணாக்கர் யாரும் வருவதில்லை.  சீடர்கள்தான் வருகிறார்கள்.  சில எழுத்தாளர்களின் வாசகர்கள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி வலப்பக்கமும் இடப்பக்கமும் ஆடுவதோடு சரி.  ஆனால் அடியேனின் பள்ளியிலிருந்து எழுத்தாளர்கள் படை போல் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள்.  என் எழுத்து மற்றவர்களையும் எழுதத் தூண்டுகிறது என்பதே எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம், கௌரவம். … Read more

படு ரகளையான எழுத்து…

நான் 25 வயதில் எழுதியது போல் இருக்கிறது.  விளாசித் தள்ளியிருக்கிறார் ஜி. கார்ல் மார்க்ஸ்.  அவருடைய முகநூல் பதிவுகளெல்லாம் நூலாக வரப் போகிறது.  எதிர் வெளியீடாக இருக்கலாம்.  கீழே வருவது இப்போதைய ஆட்சியை வறுத்தது.  இதேபோல் முந்தைய கருணாநிதி ஆட்சியையும் செம கிண்டு கிண்டியிருக்கிறார்.  ஆனால் வழக்கம் போல் என் வருத்தமெல்லாம் இப்படிப்பட்ட பதிவுகள் ஒரு நாவலாக வர வேண்டும்.  சோகம், எல்லாம் குறிப்புகளாகவே, கட்டுரைகளாகவே தீர்ந்து போகின்றன.  பெரூவின் மரியோ பர்கஸ் யோசாவின் நாவல்கள் இந்த … Read more

The Torrent

அமெரிக்கா அல்லது பிரிட்டனில் வசிக்கும் வாசகர் யாரேனும் எனக்கு ஒரு பெரிய உதவி செய்ய வேண்டும். Anne Hebert என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் குறுநாவல் தொகுப்பு ஆங்கிலத்தில் எனக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகிறது.  The Torrent (novelles and short stories) என்பது அதன் தலைப்பு.  மிகச் சிறிய புத்தகம்.  ஆனால் 20 டாலர் விலை.  அதை எனக்குத் தருவித்துத் தர வேண்டும்.  வாங்கி அனுப்பினாலும் சரி; அல்லது ஆர்டர் செய்தாலும் சரி.  கொஞ்சம் அவசரமாகத் தேவைப்படுகிறது. … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் குறித்து…

நவம்பர் 11, 2015 அன்று கார்ல் மார்க்ஸ் தனது முகநூலில் எழுதியது இது.  பழுப்பு நிறப் பக்கங்கள் வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27.  மாலை 6.30 மணி.  சனிக்கிழமை.  ராஜா அண்ணாமலை மன்றம்.  இந்தப் புத்தகத்தோடு இன்னும் எட்டு புத்தகங்களும் வெளிவரும். தினமணியில் சாரு எழுதும் ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ தொடரில் இந்த வாரம் தி. ஜானகிராமன் குறித்து அவர் எழுதியிருப்பதைப் படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன். எழுத்தாளனைக் கொண்டாடுவதன் தொனி குறித்த சில அடிப்படைகளை ஒவ்வொரு … Read more

பின்நவீனத்துவ போலி – 2

அந்த சுரேஷ் கண்ணன் என்ற குஞ்சு ஜெயமோகனின் தீவிர வாசகர் என்று இப்போதுதான் கேள்விப்பட்டேன். அது ஏன் ஜெயமோகனின் தீவிர வாசகர்கள் என் மீது எப்போதும் சாக்கடையையும் சேற்றையும் வாரி இறைத்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  இதைத்தான் அவர்கள் ஜெயமோகன் அடிக்கடி எழுதி வரும் அற உணர்வு என்று எடுத்துக் கொள்கிறார்களா?  இது விஜய் ரசிகர், அஜீத் ரசிகர் ஆகியோர் போட்டுக் கொள்ளும் சண்டை போல் அல்லவா உள்ளது?  அந்தக் காலத்தில் சிவாஜி ரசிகன் எம்ஜியார் … Read more

பின்நவீனத்துவ போலி!

எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாகப் பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு ‘பின்நவீனத்துவ’ எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்றி ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை.  இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் ‘நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன்.  ஆனால் அவற்றைக் குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை’ என்கிறார்.  புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு … Read more